திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 776 மதனச்சொற் கார (சீகாழி) Thiruppugazh 776 madhanachchoRkAra (seegAzhi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன ...... தனதான ......... பாடல் ......... மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள் மருளப்பட் டாடைக் காரிக ...... ளழகாக மவுனச்சுட் டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக் காரிகள் வகைமுத்துச் சாரச் சூடிகள் ...... விலைமாதர் குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள் குசலைக்கொட் சூலைக் காலிகள் ...... மயல்மேலாய்க் கொளுவிக்கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை குமுதப்பொற் பாதச் சேவையி ...... லருள்வாயே கதறக்கற் சூரைக் கார்கட லெரியத்திக் கூறிற் பாழ்பட ககனக்கட் டாரிக் காயிரை ...... யிடும்வேலா கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி யுறைபச்சைப் பாசக் கோகில கவுரிப்பொற் சேர்வைச் சேகர ...... முருகோனே திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற்பொற் றோகைப் பாவையை தினமுற்றுச் சாரத் தோள்மிசை ...... யணைவோனே திலதப்பொட் டாசைச் சேர்முக மயிலுற்றிட் டேறிக் காழியில் சிவன்மெச்சக் காதுக் கோதிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மதனச் சொல் காரக் காரிகள் பவள கொப்பு ஆடச் சீறிகள் ... மன்மதன் சம்பந்தமான காமச் சொற்களை உற்சாகத்துடன் பேசுபவர்கள். (காதில் உள்ள) பவளத் தோடு ஆடும்படி சீறிக் கோபிப்பவர்கள். மருளப் பட்டு ஆடைக் காரிகள் அழகாக மவுனச் சுட்டு ஆடிச் சோலிகள் ... கண்டோர் மருளும்படி பட்டு ஆடைகளை அணிபவர்கள். அழகாக, மவுனத்தாலேயே (தங்களுக்கு வேண்டியதைச்) சுட்டிக் காட்டி காரியத்தைச் சாதிப்பவர்கள். இசலிப்பித்து ஆசைக் காரிகள் வகை முத்துச் சாரச் சூடிகள் விலை மாதர் குதலைச் சொல் சாரப் பேசிகள் நரக அச்சில் சாடிப் பீடிகள் ... பிணங்குதல் மூலமாக தங்கள் ஆசையை வெளியிடுபவர்கள். பல வகையான முத்து மலைகளைச் சூடுபவர்கள். உடலை விலைக்கு விற்பவர்கள். மழலைப் பேச்சுக்களை சரசமாகப் பேசுபவர்கள். நரகமாகிய அச்சில் ஆடவரைச் சாய்வித்துத் துன்பப்படுத்துவர். குசலைக் கொள் சூலைக் காலிகள் மயல் மேலாய்க் கொளுவிக் கட்டு ஆசைப் பாசனை பவம் துக்கக் கார சூதனை குமுதப் பொன் பாதச் சேவையில் அருள்வாயே ... தமது செய்கைக்குத் தடையாக வந்த கர்ப்பத்தைக் கலைப்பவர்கள். இத்தகைய வேசியர்பால் மோகம் மேற்பட்டு, (அதனால்) கொள்ளப்பட்டுக் கட்டுண்டு, அந்த ஆசையில் பற்று கொண்ட என்னை, பிறப்பால் வரும் துக்க நிகழ்ச்சிகளில் வீழ்ந்த வஞ்சகனாகிய என்னை, ஆம்பல் மலர் அணிந்த அழகிய திருவடிச் சேவையைத் தந்து அருள்வாயாக. கதறக் கல் சூரைக் கார் கடல் எரியத் திக்கு ஊறில் பாழ்பட ககன(ம்) கட்டாரிக்கா(க) இரை இடும் வேலா ... ஏழு கிரியும் அவை காவலாக இருந்த சூரனும் கதறி அழவும், கரிய கடல் எரியவும், (எட்டு) திசைகளும் இடையூறு பட்டுப் பாழாகவும், (அசுர) சேனைகளை வாளுக்கு உணவாகும்படிச் செய்த வேலனே, கதிர் சுற்றிட்ட ஆசைப் பால் கிரி உறை பச்சைப் பாசக் கோகில கவுரி பொன் சேர்வைச் சேகர முருகோனே ... சூரியன் வலம் வரும் பொன் மலையாகிய மேருவின் பக்கத்தில் உள்ள கயிலையில் வீற்றிருக்கின்ற பச்சை நிறமுள்ள குயில் போன்ற பார்வதியின் மார்பகத்திலுள்ள அழகிய சந்தனக் கலவை உன் சிரத்தின் மேற்படும்படிக் கட்டிக் கொள்ளும் குழந்தை முருகோனே, திதலைப் பொன் பாணிக் கார் குயில் அழகில் பொன் தோகைப் பாவையை தினம் உற்றுச் சாரத் தோள் மிசை அணைவோனே ... தேமல் உடையவளும், அழகிய அன்பை இதயத்தில் உடையவளும், கரிய குயில் போன்று அழகுடையவளும், பொலிவு நிறைந்த மயில் போன்ற, பதுமை போன்றவளுமாய் விளங்கும் வள்ளியை நாள்தோறும் அவளைத் தழுவும் பொருட்டு அவள் தோளை அணைந்தவனே, திலதப் பொட்டு ஆசைச் சேர் முக மயில் உற்றிட்டு ஏறிக் காழியில் சிவன் மெச்சக் காதுக்கு ஓதிய பெருமாளே. ... சிறந்த திலகப் பொட்டு விருப்பமுடன் நெற்றியில் அணியும் திரு முகத்தை உடையவனே, மயிலின் மேல் பொருந்தி ஏறி சீகாழியில்* அமர்ந்து, அத்தலத்தில் சிவபெருமான் புகழும்படியாக அவர் காதைச் சிறப்பித்துத் ('தோடுடைய செவியன்'** என்ற) தேவாரப் பாவை ஓதிய (திருஞானசம்பந்தப்) பெருமாளே. |
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது. சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம். |
** திருஞானசம்பந்தர் பாடிய முதல் தேவாரம் சிவனாரின் செவியிலுள்ள தோடைப் புகழ்ந்தது. |
சீகாழிக்கு உரிய பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - ... என்பன. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.873 pg 2.874 pg 2.875 pg 2.876 pg 2.877 pg 2.878 WIKI_urai Song number: 780 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 776 - madhanachchoR kAra (seegAzhi) mathanacchoR kArak kArikaL pavaLakkop pAdac cheeRikaL maruLappat tAdaik kArika ...... LazhakAka mavunacchut tAdic chOlikaL isalippith thAsaik kArikaL vakaimuththuc chArac cUdikaL ...... vilaimAthar kuthalaicchoR chArap pEsikaL narakacchiR sAdip peedikaL kusalaikkot cUlaik kAlikaL ...... mayalmElAyk koLuvikkat tAsaip pAsanai pavathukkak kArac cUthanai kumuthappoR pAthac chEvaiyi ...... laruLvAyE kathaRakkaR cUraik kArkada leriyaththik kURiR pAzhpada kakanakkat tArik kAyirai ...... yidumvElA kathirsutRit tAsaip pAlkiri yuRaipacchaip pAsak kOkila kavuaippoR chErvaic chEkara ...... murukOnE thithalaippoR pANik kArkuyi lazhakiRpot ROkaip pAvaiyai thinamutRuc chArath thOLmisai ...... yaNaivOnE thilathappot tAsaic chErmuka mayilutRit tERik kAzhiyil sivanmecchak kAthuk kOthiya ...... perumALE. ......... Meaning ......... mathanac chol kArak kArikaL pavaLa koppu Adac cheeRikaL: They speak with enthusiasm erotic words relating to Manmathan (God of Love). Making their ear-stud, made of coral, swing, they fume with anger. maruLap pattu Adaik kArikaL azhakAka mavunac chuttu Adic chOlikaL: They wear bright silk attire that dazes the suitors. Stylishly, through silent gestures, they are capable of having their way. isalippiththu Asaik kArikaL vakai muththuc chAras cUdikaL vilai mAthar kuthalaic chol sArap pEsikaL naraka acchil sAdip peedikaL: They express their desire by means of sulking. They wear many kinds of strings of pearls. They sell their bodies for a price. They talk gibberish in a flirtatious way. They shove the men into the jaws of hell and harass them. kusalaik koL cUlaik kAlikaL mayal mElAyk koLuvik kattu Asaip pAsanai pavam thukkak kAra cUthanai kumuthap pon pAthac chEvaiyil aruLvAyE: They abort their foetus considering it as a hindrance to their career. Being obsessed with passion for such whores and being bound and possessed by them, I am overwhelmed by my desire; I am a treacherous one having fallen a victim to the distressing events of birth; nevertheless, kindly grant me the vision of Your hallowed feet adorned with lily flowers, Oh Lord! kathaRak kal cUraik kAr kadal eriyath thikku URil pAzhpada kakana(m) kattArikkA(ka) irai idum vElA: The demon SUran and the seven mountains that were protecting him screamed uncontrollably; the dark sea caught fire; the eight cardinal directions met with many obstacles and became ruined; and the armies of the demons were offered as food to Your sword, Oh Lord with the spear! kathir sutRitta Asaip pAl kiri uRai pacchaip pAsak kOkila kavuri pon sErvaic chEkara murukOnE: The Sun circumambulates the golden Mount MEru; adjacent to that mountain is Mount KailAsh on which Goddess PArvathi, looking like the green cuckoo, is happily seated; the paste of sandalwood smeared on Her bosom rubs on Your head Oh Lord MurugA, as She fondly embraces You as Her child! thithalaip pon pANik kAr kuyil azhakil pon thOkaip pAvaiyai thinam utRuc chArath thOL misai aNaivOnE: She has the yellow stain on Her chest; She cherishes beautiful love in Her heart; She has the beauty of the black cuckoo; looking like the elegant peacock and a statuette, that VaLLi stands there magnificently; You hug her shoulders everyday, Oh Lord! thilathap pottu Asaic chEr muka mayil utRittu ERik kAzhiyil sivan mecchak kAthukku Othiya perumALE.: You have the lovely face wearing the beautiful vermillion mark with relish on Your forehead, Oh Lord! Mounting the peacock in style, You are seated in SeekAzhi* where You sang (coming as ThirugnAna Sambandhar) a ThEvAram Hymn (starting with 'ThOdudaiya Seviyan'**) to the relish of Lord SivA extolling His ear (that wears the stud), Oh Great One! |
* This hymn was the first song of the Great Saivite ThirugnAna Sambandhar in praise of Lord SivA's ear wearing the stud. |
SeegAzhi is 11 miles south of Chidhambaram. It is the place of birth of one of the Saivite Quartets, ThirugnAna SambandhAr. |
The various names of SeekAzhi are as follows: 1. VENupuram: The shrine where Indra named VENu worshipped to overcome his fear of a demon, GajamugA. 2. Thiruppukali: It is the place of refuge for the celestials who were terrified by the demon SUran. 3. Venguru: It is the shrine where Brahaspathi (Jupiter) worshipped. 4. PUntharAy: It is the shrine where Earth and ThArai worshipped. 5. Sirapuram: When the nectar was distributed by Lord VishNu to the celestials, Rahu and KEthu stealthily came as DEvAs and were beheaded by VishNu; at this shrine, they worshipped and got their heads back. 6. PuRavam: At this shrine a sage PrajApathi came in the disguise of a pigeon and offered his flesh as a sacrifice to save the king. 7. SaNpai: Sage DurvAsA, known as Sanpaimuni, worshipped at this shrine. 8. SeekAzhi: A serpent named KALi worshipped at this shrine. 9. Kochchai: Sage ParAsara was cursed by other sages and developed a stench all over his body which was removed after his worship at this shrine. 10. Kazhumalam: This is a shrine where all the sins of souls are washed away. 11. Piramapuram: This is a shrine where Lord Brahma offered worship. 12. ThONipuram: This shrine had the distinction of floating like a boat during the devastating flood at the end of the aeons. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2017-2030 [xhtml] 0504.2022[css]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact us if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by us (the owners and webmasters of www.kaumaram.com), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., we are NOT responsible for any damage caused by downloading any item from this website. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |