பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/874

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி) திருப்புகழ் உரை 315 நீ (மாறு) (அந்த அசுரர்களாம் பகைவர்களை அழிக்கவல்ல ஒரு பகைவனை நீ தந்தருள் என்று ஈசனைப் பாமாலைகள் பாடித் தொழுது, திருநீறு விளங்கும் மேனியனே! தேன் பொதியும் கொன்றைப் பூவுடனே - நீர் அழகுடன் ததும்பும் (சானவி) கங்கையையும், சிறந்த நிலவையும், (காகோதரம்) பாம்பையும், மாதுளம் ஆ வில்வம், (நேரோடம்) நாவல் இலை, விளா இலை, முதலியன நிறைந்துள்ள சடையணி எம்பெருமானே! (எங்களுக்கு உய்ந்து) போகும் வழி இனி (உன்னை ஒழிய) வேறு எது உளது. சொல்லி யருளுக (எனவே) என்று முறையிடவே, நிறைந்த கருணை அருளால் (அவர்) அந்த சிவபெருமான் (ஈதரு) தந்தருளிய வேலவனே! நீலத் தோகை மயிலில் ஏறி நீண்ட (இந்தப் பூலோகத்துடனே பாக்கி ஆறு லோகங்களையும் நேராக ஒரே நொடிப் பொழுதில் (சுற்றி) வந்தவனே! தேவர்களின் சேனாதிபதியானவனே! உன்னை அன்பினால் - (காமா) மன்மத அழகு உடையவனே! று (பூரண) சந்திரருக்குச் (சம) சமமான (ஆனன) ருமுகங்களை உடையவனே! (தாமா மணமார்தரு நீப) மனமார்தரு நீப தாமா! மணம் நிறைந்து வீசும் கடப்பமாலை அணிந்தவனே! (சுதாமா) நல்ல ஒளியை உடையவனே! என்றெல்லாம் (உன்னைத்) துதிக்காமல் திரிகின்ற வஞ்சகனாகிய என்னைக் காத்தருளுக! முன்பு அசுரர் தலைவர்களாகிய சூரன் முதலானவர்களைச் சங்கரித்த மிகக் கூரிய வேலாயுதத்தை உடையவனே! மேகங்கள் நிறைந்துள்ள சிகாழியில் வீற்றிருக்கும் தம்பிரானே! (வஞ்சனைக் காவாய்) 780. மன்மதன் சம்பந்தமான சொற்களை உறைப்புடன் (உற்சாகத்துடன்) பேசுபவர்கள், பவளக்கொப்பு காதில் ஆடும்படிக் கோபிப்பவர்கள், கண்டோர் மருளும்படியாக பட்டு ஆடைகளை அணிந்தவர்கள், அழகாக,