திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 750 குடத் தாமரையாம் (விருத்தாசலம்) Thiruppugazh 750 kudaththAmaraiyAm (viruththAsalam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்தானன தானன தானன தனத்தானன தானன தானன தனத்தானன தானன தானன ...... தனதான ......... பாடல் ......... குடத்தாமரை யாமென வேயிரு தனத்தார்மதி வாணுத லாரிருள் குழற்காடின மாமுகில் போல்முது ...... கலைமோதக் குலக்கார்மயி லாமென வேகயல் விழித்தார்கர மேல்கொடு மாமுலை குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் ...... குரலோசை படித்தார்மயி லாமென வேநடை நெளித்தார்பல காமுகர் வார்கலை பழிப்பாரவ ராசையை மேல்கொடு ...... விலைமாதர் படிக்கார்மின லாமென வேநகை புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள் பறிப்பார்பழி காரிகள் நாரிக ...... ளுறவாமோ அடைத்தார்கட லோர்வலி ராவண குலத்தோடரி யோர்சர னார்சின மழித்தார்முகி லேய்நிற ராகவர் ...... மருகோனே அறுத்தாரய னார்தலை யேபுர மெரித்தாரதி லேபுல னாருயி ரளித்தாருடல் பாதியி லேயுமை ...... அருள்பாலா விடத்தாரசு ரார்பதி வேரற அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம் விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை ...... மிடிதீர விழித்தாமரை போலழ காகுற மகட்கானவ ணாஎன தாயுறை விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... குடத் தாமரையாம் எனவே இரு தனத்தார் மதி வாள் நுதலார் ... குடம் என்றும், தாமரை மொட்டு என்றும் (உவமிக்கத் தக்க) இரு மார்பகங்களை உடையவர்கள், பிறைச் சந்திரன் போன்ற ஒளி பொருந்திய நெற்றியை உடையவர்கள், இருள் குழல் காடின மா முகில் போல் முதுகு அலைமோத ... இருண்ட மேகம் போல் கருத்த கூந்தல் காடு போல் அடர்ந்து, முதுகில் அலை மோதுவது போலப் புரள, குலக் கார் மயிலாம் எனவே கயல் விழித் தார் கரம் மேல் கொடு மா முலை குடத்து ... சிறப்புற்ற மேகத்தைக் கண்ட மயிலைப் போலக் களிப்பும், கயல் மீன் போன்ற கண்களும் கொண்டவர்களாய், மாலை அணிந்த கையின் மேல் ஏந்தியுள்ள, அழகிய மார்பு போன்ற, குடத்தை ஒரு பக்கமாகக் கொண்டவர்களாய், யாழ் கிளியாம் எனவே குயில் குரலோசை படித்தார் மயிலாம் எனவே நடை நெளித்தார் ... யாழ் என்றும், கிளி என்றும் சொல்லும்படியான குயிலின் ஓசை போன்ற குரலை மிழற்றுபவர்களாய், மயில் என்று சொல்லும்படி நெளிந்த நடையினராய், பல காமுகர் வார் கலை பழிப்பாரவர் ஆசையை மேல்கொடு விலைமாதர் ... பல காம தூர்த்தர்களின் பெரிய காம சாஸ்திர அறிவைப் பழிப்பவர்களாய், ஆசையை ஆபரணமாக மேற் பூண்டு வேசியர்களாய், படிக் கார் மி(ன்)னலாம் எனவே நகை புரித்தார் பலர் வாய் இதழ் சேர் பொருள் பறிப்பார் பழிகாரிகள் நாரிகள் உறவாமோ ... படிந்துள்ள கருமேகத்தில் தோன்றும் மின்னல் என்று சொல்லும்படியான ஒளி கொண்ட பற்கள் தெரியச் சிரிப்பவர்களாய், பல பேர்வழிகளின் வாயிதழ் ஊறலை அனுபவிப்பவர்களாய், பொருளை அபகரிப்பவர்களாகிய பழிகாரிகளாகிய விலைமாதர்களின் உறவு எனக்குத் தகுமோ? அடைத்தார் கடல் ஓர் வலி ராவண குலத்தோடு அரி ஓர் சரனார் சினம் அழித்தார் முகில் ஏய் நிற ராகவர் மருகோனே ... கடலை அணையிட்டு அடைத்தவராய், ஒப்பற்ற வலிமை வாய்ந்த ராவணனை, அவன் குலத்தோடு அறுத்துத் தள்ளிய ஓர் அம்பைக் கொண்டவர், (அசுரர்களின்) கோபத்தை இவ்வாறு அழித்து ஒழித்தவர், மேகத்துக்கு ஒப்பான கருநிறம் கொண்ட ராமபிரானின் மருகனே, அறுத்தார் அயனார் தலையே புரம் எரித்தார் அதிலே புலனார் உயிர் அளித்தார் உடல் பாதியிலே உமை அருள்பாலா ... பிரமனின் தலையை அறுத்துத் தள்ளியவர், திரிபுரத்தை எரித்தவர், அந்தத் திரிபுரத்தில் இருந்த அறிவுள்ள (மூன்று) அசுரத் தலைவர்களின் உயிரைக் காத்தருளியவர்* ஆகிய சிவபெருமானின் பாதி உடலில் உள்ள உமாதேவி அருளிய குழந்தையே, விடத்தார் அசுரார் பதி வேர் அற அடித்தாய் கதிர் வேல் கொடு சேவகம் விளைத்தாய் ... விஷம் போன்ற கொடிய குணம் வாய்ந்த அசுரர்களுடைய ஊர்கள் வேருடன் அற்று விழ சம்ஹாரம் செய்தாய், ஒளி வீசும் வேலாயுதத்தால் வீரச் செயல்களைப் புரிந்தாய், குடி வாழ அமரோர் சிறை மிடி தீர விழித் தாமரை போல் அழகா குற மகட்கு ஆன வ(ண்)ணா ... தேவர்கள் சிறையும் வறுமையும் நீங்கவும், அவர்கள் பொன்னுலகுக்குக் குடி போகவும் செய்வித்த தாமரை போன்ற கண்களை உடைய அழகனே, குறமகள் வள்ளிக்குப் பிரியமுள்ள அழகனே, என(து) தாய் உறை விருத்தாசலம் வாழ் மயில் வாகன பெருமாளே. ... என்னுடைய தாயான விருத்தாம்பிகை அமர்ந்துள்ள விருத்தாசலத்தில் வாழும் மயில் வாகனப் பெருமாளே. |
* வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான் அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார் - சுந்தரர் தேவாரம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.805 pg 2.806 pg 2.807 pg 2.808 pg 2.809 pg 2.810 WIKI_urai Song number: 754 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 750 - kudath thAmaraiyAm (viruththAchalam) kudaththAmarai yAmena vEyiru thanaththArmathi vANutha lAriruL kuzhaRkAdina mAmukil pOlmuthu ...... kalaimOthak kulakkArmayi lAmena vEkayal vizhiththArkara mElkodu mAmulai kudaththiyAzhkiLi yAmena vEkuyil ...... kuralOsai padiththArmayi lAmena vEnadai neLiththArpala kAmukar vArkalai pazhippArava rAsaiyai mElkodu ...... vilaimAthar padikkArmina lAmena vEnakai puriththArpalar vAyithazh sErporuL paRippArpazhi kArikaL nArika ...... LuRavAmO adaiththArkada lOrvali rAvaNa kulaththOdari yOrsara nArsina mazhiththArmuki lEyniRa rAkavar ...... marukOnE aRuththAraya nArthalai yEpura meriththArathi lEpula nAruyi raLiththArudal pAthiyi lEyumai ...... aruLbAlA vidaththArasu rArpathi vEraRa adiththAykathir vElkodu sEvakam viLaiththAykudi vAzhama rOrsiRai ...... miditheera vizhiththAmarai pOlazha kAkuRa makatkAnava NAena thAyuRai viruththAsalam vAzhmayil vAkana ...... perumALE. ......... Meaning ......... kudath thAmaraiyAm enavE iru thanaththAr mathi vAL nuthalAr: Their two breasts are comparble to the pot and the lotus bud; their forehead is bright as the crescent moon; iruL kuzhal kAdina mA mukil pOl muthuku alaimOtha: their forest-like dense hair, black as the dark cloud, flutters like waves on their back; kulak kAr mayilAm enavE kayal vizhith thAr karam mEl kodu mA mulai kudaththu: their delight is comparable to that of a peacock at the sight of the rich rainy cloud; their eyes are like kayal fish; in their garlanded arm, they carry a pot comparable to their beautiful bosom; yAzh kiLiyAm enavE kuyil kuralOsai padiththAr mayilAm enavE nadai neLiththAr: their lilting voice is like the cooing of the cuckoo and sounds like the yAzh (a string instrument) and the parrot; their meandering gait is like that of a peacock; pala kAmukar vAr kalai pazhippAravar Asaiyai mElkodu vilai mAthar: their knowledge of eroticism challenges that of many experts on that subject; these whores wear passion as an ornament; padik kAr mi(n)nalAm enavE nakai puriththAr palar vAy ithazh sEr poruL paRippAr pazhikArikaL nArikaL uRavAmO: when they smile, their bright teeth flash like the ligtning in a dark cloud; they imbibe saliva from many a mouth; these treacherous women grab wealth from others; is it worth my while to have relationship with such whores? adaiththAr kadal Or vali rAvaNa kulaththOdu ari Or saranAr sinam azhiththAr mukil Ey niRa rAkavar marukOnE: He built a dam across the sea; He possesses the unique arrow that severed RAvaNan, the matchless valiant king, along with his entire kin; He similarly sheared off the rage of all the demons; He has the complexion of the dark cloud; and You are the nephew of that Lord RAmA! aRuththAr ayanAr thalaiyE puram eriththAr athilE pulanAr uyir aLiththAr udal pAthiyilE umai aruLbAlA: He chopped off the head of BrahmA; He burnt down Thiripuram; He, however, saved the lives of the (three) enlightened demons who lived in Thiripuram*; She is concorporate upon half of the body of that Lord SivA; and You are the child of that Goddess UmAdEvi! vidaththAr asurAr pathi vEr aRa adiththAy kathir vEl kodu sEvakam viLaiththAy: You annihilated the towns of the evil and venomous demons; You performed many valorous miracles with Your dazzling spear! kudi vAzha amarOr siRai midi theera vizhith thAmarai pOl azhakA kuRa makatku Ana va(N)NA: Oh Handsome One with lotus-like eyes, You freed the DEvAs from their prison, eradicated their poverty and enabled them to resettle in their celestial land; You are the fine-looking lover of VaLLi, the damsel of the KuRavAs, Oh Lord! ena(thu) thAy uRai viruththAsalam vAzh mayil vAkana perumALE.: You are seated along with Your vehicle, the peacock, in ViruththAchalam, the abode of my Mother, Goddess ViruththAmbikai, Oh Great One! |
* Three demons named VidhyunmAli, ThArakAtchan and KamalAkshan created in the sky three floating islands made of gold, silver and iron (collectively called Thiripuram). They were falling all over people in the world, harassing and killing them. When Lord SivA burnt them down, He spared three of their residents who were totally devoted to the Lord. Two of them became the guards of Lord SivA's shrine; the third one became the drummer during the Cosmic Dance of SivA - ThEvAram by Sundarar. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |