பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/808

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருத்தாசலம்) திருப்புகழ் உரை 249 சிறப்புற்ற மேகத்தைக் கண்ட மயிலின் களிப்புப்போலக் களிப்பைக் கொண்டதும், கயல்மீன் போன்றதுமான கண்களைக் கொண்டவர்களாய், மாலை அணிந்ததும், கையின்மேல் ஏந்தியுள்ளதும், அழகிய கொங்கை போன்றதுமான குடத்தை ஒருபாற் கொண்டதுமான யாழ் என்றும் கிளி என்றும் சொல்லும்படியான குயில் ஒசைபோன்ற குரலோசையைக் கற்றவராய், மயில் என்று சொல்லும்படியான நெளிந்த நடையினராய்ப், பல (காம) தூர்த்தர்களின் பெரிய காம சாஸ்திர அறிவைப் பழிப்பவர்களானவராய் ஆசையை மேற்பூண்டு, விலைமாதராய், (படி) படிந்துள்ள மேகத்தில் தோன்றும் மின்னல் என்று சொல்லும்படியான ஒளிகொண்ட பற்கள் தெரியச் சிரிப்பவர்களாய்ப், ԼIԹՆ) பேர்வழிகளின் வாயிதழ் பவிப்பவர்களாய்ப், பொருளைப் பறிப்பவர்களாம் பழிகாரிகளாகிய மாதர்களின் உறவு ஆமோ (உறவு ஆகாது என்றபடி) (அடைத்தார் கடல்) Ց5Լ-GՃXօՆ) அணையிட்டு அடைத்தவராய், ஒப்பற்ற வன்மை வாய்ந்திருந்த ராவணனை அவன் குலத்தோடு அரிந்து தள்ளி அழித்த ஒர் அம்பைக் கொண்டவர், (அசுரர்களின்) (சினத்தை) கோபத்தை இவ்வாறு அழித்தொழித்தவ்ர், மேகத்துக்கு ஒப்பான (கறுத்த நிறம் கொண்டவராகிய ராகவ மூர்த்தியின் மருகனே! (அறுத்தார் அயன்ார் தலையே) பிரமனது தலையை அறுத்துத் தள்ளினவர், திரிபுரத்தை எரித்தவர். அந்தத் திரிபுரத்தில் இருந்த அசுரர்களில் (புலனார்) அறிவுள்ள மூன்று அசுர்த் தலைவர்களின் உயிரைக் காத்தருளினவர் ஆகிய சிவபிரானது பாதி உடலில் உள்ள உமாதேவி அருளிய குழந்தையே! 248ஆம் பக்கத் தொடர்ச்சி x அயன்தலை அறுத்தது - பாடல் 285-பக்கம் 209 கீழ்க்குறிப்பு. O புரம் எரித்தது - பாடல் 285-பக்கம் 206 கீழ்க்குறிப்பு. * பாதி உடல் உமை - பாடல் 301-பக்கம் 246 கி.ழ்க்குறிப்பு.