திருப்புகழ் 746 மதிக்கு நேரெனும்  (திருமாணிகுழி)
Thiruppugazh 746 madhikkunErenum  (thirumANikuzhi)
Thiruppugazh - 746 madhikkunErenum - thirumANikuzhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தானன தானான தானன
     தனத்த தானன தானான தானன
          தனத்த தானன தானான தானன ...... தந்ததான

......... பாடல் .........

மதிக்கு நேரெனும் வாண்மூகம் வான்மக
     நதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழி
          மணத்த வார்குழல் மாமாத ராரிரு ...... கொங்கைமூழ்கி

மதித்த பூதர மாமாம னோலயர்
     செருக்கி மேல்விழ நாடோறு மேமிக
          வடித்த தேன்மொழி வாயூற லேநுகர் ...... பண்டநாயேன்

பதித்த நூபுர சீர்பாத மாமலர்
     படைக்குள் மேவிய சீராவொ டேகலை
          பணைத்த தோள்களொ டீராறு தோடுகள் ...... தங்குகாதும்

பணக்க லாபமும் வேலொடு சேவலும்
     வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை
          படைத்த வாகையு நாடாது பாழில்ம ...... யங்கலாமோ

கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
     நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி
          கலக்கி யூர்பதி தீமூள வேவிடும் ...... வஞ்சவேலா

களித்த பேய்கண மாகாளி கூளிகள்
     திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள்
          கடித்த பூதமொ டேபாடி யாடுதல் ...... கண்டவீரா

குதித்து வானர மேலேறு தாறுகள்
     குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள்
          குலைக்கு மேல்விழ வேரேறு போகமும் ...... வஞ்சிதோயுங்

குளத்தி லூறிய தேனூறல் மாதுகள்
     குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்
          குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழு ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

மதிக்கு(ம்) நேர் என்னும் வாள் முகம் வான் மக(கா) நதிக்கு
மேல் வரு(ம்) சேல் என்னும் நேர் விழி
... சந்திரனுக்கு ஒப்பானது
என்று சொல்லக் கூடிய ஒளி பொருந்திய முகம், சிறந்த பெரிய கங்கை
ஆற்றில் உலாவும் சேல் மீன் என்று சொல்லும்படியான கண்கள்,

மணத்த வார் குழல் மா மாதரார் இரு கொங்கை மூழ்கி ... நறு
மணம் வீசும் நீண்ட கூந்தல் இவைகள் உடைய, அழகிய (விலை)
மாதர்களுடைய இரண்டு மார்பகங்களில் முழுகி,

மதித்த பூதரம் ஆம் ஆம் மனோலயர் செருக்கி மேல் விழ நாள்
தோறுமே
... மதிப்பு வைத்திருந்த மலைகளே இவை ஆகும் என்று
அவைகளிலே மனம் வசப்பட்டவனாய், பெருமிதம் கொண்டு அவற்றின்
மேல் விழுந்து தினமும்,

மிக வடித்த தேன் மொழி வாய் ஊறலே நுகர் பண்ட நாயேன் ...
மிக நன்றாக வடித்தெடுக்கப்பட்ட தேன் போன்ற மொழியும் வாயிதழ்
ஊறலுமே அனுபவிக்கின்ற ஒரு பொருளாகிய நாய் போன்ற அடியேன்,

பதித்த நூபுர சீர் பாத மா மலர் படைக்குள் மேவிய சீரா ஓடே
கலை பணைத்த தோள்களொடு ஈராறு தோடுகள் தங்கு
காதும்
... சிலம்புகள் சூழ்ந்துள்ள சீரான பாதங்களாகிய சிறந்த
மலர்களும், ஆயுதங்களில் ஒன்றாகப் பொருந்திய உடைவாளும், ஒளி
கொண்ட பருத்த தோள்களும், பன்னிரண்டு தோடுகளாகிய காதணிகள்
விளங்கும் செவிகளும்,

பணிக் கலாபமும் வேலோடு சேவலும் வடிக் கொள் சூலமும்
வாள் வீசு நீள் சிலை படைத்த வாகையும் நாடாது பாழில்
மயங்கலாமோ
... பாம்பை அடக்கும் மயிலும், வேலும், சேவலும்,
கூர்மையான சூலாயுதமும், ஒளி வீசும் நீண்ட வில்லைப் பிடித்த
வெற்றியையும் விரும்பித் தியானிக்காது, பாழான எண்ணங்களில்
நான் மயக்கம் கொள்ளலாமோ?

கதித்து மேல் வரு மா சூரர் சூழ் படை நொறுக்கி மா உயர்
தேரோடுமே கரி கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச
வேலா
... கொதித்து மேல் எழுந்து வருகின்ற பெரிய சூரர்கள் சூழ்ந்துள்ள
சேனைகளைப் பொடியாக்கியும், குதிரைகள், பெரிய தேர்கள், யானைகள்
(இவைகளைக்) கலக்கியும், ஊர்களையும், நகரங்களையும் நெருப்பு
எரியும்படியும் செலுத்திய வஞ்சம் கொண்ட வேலனே,

களித்த பேய் கணம் மா காளி கூளிகள் திரள் பிரேதம் மேலே
மேவி மூளைகள் கடித்த பூதமொடே பாடி ஆடுதல் கண்ட
வீரா
... மகிழ்ச்சி கொண்ட பேய்க் கூட்டங்களும், பெரிய காளியும்,
பெருங் கழுகுகளும் சேர்ந்து, ரணகளத்தில் திரண்டு கிடக்கும்
பிணங்களின் மேல் விழுந்து மூளைகளைக் கடித்துத் தின்ற
பூதங்களோடு பாடி ஆடுதலைப் பார்த்த வீரனே,

குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள் குலைத்து நீள் கமுகு
ஊடாடி வாழை கொள்குலைக்கு மேல் விழவே ஏர் ஏறு
போகமும்
... குரங்குகள் குதித்து மேலே உள்ள குலைகளைக்
குலைத்து, நீண்ட கமுக மரங்களிடையே ஊடாடுவதால் (அக் கமுகங்
குலைகள் அறுபட்டு) வாழைக் குலைகள் மேல் விழும்படியான அழகு
நிறைந்த செழுமையும்,

வஞ்சி தோயும் குளத்தில் ஊறிய தேன் ஊறல் மா துகள்
குடித்து உலாவியெ சேலோடு
... பெண்கள் குளிக்கும் குளத்தில்
ஊறிய (மலர்களது) தேன்களின் சாரத்தையும், சிறந்த மகரந்தங்களையும்
பருகி உலாவிய சேல் மீன்களும் நிறைந்த

மாணி கொள் குழிக்குள் மேவிய வானோர்களே தொழு(ம்)
தம்பிரானே.
... திருமாணிக்குழி* என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே,
தேவர்கள் தொழுகின்ற தம்பிரானே.


* திருமாணிக்குழி என்ற தலம் திருப்பாதிரிப்புலியூர் தலத்துக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.795  pg 2.796  pg 2.797  pg 2.798 
 WIKI_urai Song number: 750 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 746 - madhikku nErenum (thirumANikkuzhi)

mathikku nErenum vANmUkam vAnmaka
     nathikku mElvaru sElEnu nErvizhi
          maNaththa vArkuzhal mAmAtha rAriru ...... kongaimUzhki

mathiththa pUthara mAmAma nOlayar
     serukki mElvizha nAdORu mEmika
          vadiththa thEnmozhi vAyURa lEnukar ...... paNdanAyEn

pathiththa nUpura seerpAtha mAmalar
     padaikkuL mEviya seerAvo dEkalai
          paNaiththa thOLkaLo deerARu thOdukaL ...... thangukAthum

paNikka lApamum vElOdu sEvalum
     vadikkoL cUlamum vALveesu neeLsilai
          padaiththa vAkaiyu nAdAthu pAzhilma ...... yangalAmO

kathiththu mElvaru mAcUrar cUzhpadai
     noRukki mAvuyar thErOdu mEkari
          kalakki yUrpathi theemULa vEvidum ...... vanjavElA

kaLiththa pEykaNa mAkALi kULikaL
     thiratpi rEthame lEmEvi mULaikaL
          kadiththa pUthamo dEpAdi yAduthal ...... kaNdaveerA

kuthiththu vAnara mElERu thARukaL
     kulaiththu neeLkamu kUdAdi vAzhaikoL
          kulaikku mElvizha vErERu pOkamum ...... vanjithOyum

kuLaththi lURiya thEnURal mAthukaL
     kudiththu lAviye sElOdu mANikoL
          kuzhikkuL mEviya vAnOrka LEthozhu ...... thambirAnE.

......... Meaning .........

mathikku(m) nEr ennum vAL mukam vAn maka(a)nathikku mEl varu(m) sEl ennum nEr vizhi: Their bright face is comparable to the moon; their eyes look like the sEl fish swimming about in the great river Gangai;

maNaththa vAr kuzhal mA mAtharAr iru kongai mUzhki: I have drowned myself in the twin bosom of these whores endowed with fragrant and long hair;

mathiththa pUtharam Am Am manOlayar serukki mEl vizha nAL thORumE: imagining their breasts to be the most adorable mountains, I set my heart on them and fell on their bosom everyday;

mika vadiththa thEn mozhi vAy URalE nukar paNda nAyEn: listening to their speech sweet like finely filtered honey and imbibing the saliva oozing from their lips, I, the lowly dog, became an object seeking pleasure alone;

pathiththa nUpura seer pAtha mA malar padaikkuL mEviya seerA OdE kalai paNaiththa thOLkaLodu eerARu thOdukaL thangu kAthum: (not seeking) Your great lotus-like feet embellished by anklets, Your sword, among other weapons, elegantly adorning Your clothes, bright and solid shoulders, twelve hallowed ears wearing studs,

paNik kalApamum vElOdu sEvalum vadik koL cUlamum vAL veesu neeL silai padaiththa vAkaiyum nAdAthu pAzhil mayangalAmO: Your peacock that restrains the snake, the Spear, the Rooster, the sharp trident and Your victorious pose holding the sparkling and long bow, not meditating on any of these, should I be dazed thinking of trash?

kathiththu mEl varu mA cUrar cUzh padai noRukki mA uyar thErOdumE kari kalakki Ur pathi thee mULavE vidum vanja vElA: Having shattered the menacingly confronting armies of demons to pieces, You scared the armies of horses, huge chariots and elephants and set fire to towns and cities of demons by wielding Your fiery spear, Oh Lord!

kaLiththa pEy kaNam mA kALi kULikaL thiraL pirEtham mElE mEvi mULaikaL kadiththa pUthamodE pAdi Aduthal kaNda veerA: Oh valorous One, You witnessed the multitude of joyous fiends, the huge Goddess KALi and large vultures preying upon the mass of corpses on the battlefield, singing and dancing along with the devils that bit into the brains of the corpses!

kuthiththu vAnaram mEl ERu thARukaL kulaiththu neeL kamuku UdAdi vAzhai koLkulaikku mEl vizhavE Er ERu pOkamum: The serene fertility of this land is evident from the falling bunches of plantains due to the jumping about of the monkeys amidst the betelnut trees whose bunches are shaken loose impinging on the plantains;

vanji thOyum kuLaththil URiya thEn URal mA thukaL kudiththu ulAviye sElOdu: the tank in this place is full of sEl fish swimming about freely after imbibing honey and stamen from the flowers in the tank where beautiful girls take a dip;

mANi koL kuzhikkuL mEviya vAnOrkaLE thozhu(m) thambirAnE.: this is the town of ThirumANikkuzhi* which is Your abode; and You are worshipped by the celestials, Oh Great One!


* ThirumANikkuzhi is located very close to the town, ThiruppAthirippuliyUr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 746 madhikku nErenum - thirumANikuzhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]