திருப்புகழ் 736 காணொணாதது  (தேவனூர்)
Thiruppugazh 736 kANoNAdhadhu  (dhEvanUr)
Thiruppugazh - 736 kANoNAdhadhu - dhEvanUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தானன தனனா தனதன
     தான தானன தனனா தனதன
          தான தானன தனனா தனதன ...... தந்ததான

......... பாடல் .........

காணொ ணாதது உருவோ டருவது
     பேசொ ணாதது உரையே தருவது
          காணு நான்மறை முடிவாய் நிறைவது ...... பஞ்சபூதக்

காய பாசம தனிலே யுறைவது
     மாய மாயுட லறியா வகையது
          காய மானவ ரெதிரே யவரென ...... வந்துபேசிப்

பேணொ ணாதது வெளியே யொளியது
     மாய னாரய னறியா வகையது
          பேத பேதமொ டுலகாய் வளர்வது ...... விந்துநாதப்

பேரு மாய்கலை யறிவாய் துரியவ
     தீத மானது வினையேன் முடிதவ
          பேறு மாயருள் நிறைவாய் விளைவது ...... ஒன்றுநீயே

வீணொ ணாதென அமையா தசுரரை
     நூறி யேயுயிர் நமனீ கொளுவென
          வேல்க டாவிய கரனே யுமைமுலை ...... யுண்டகோவே

வேத நான்முக மறையோ னொடும்விளை
     யாடி யேகுடு மியிலே கரமொடு
          வீற மோதின மறவா குறவர்கு ...... றிஞ்சியூடே

சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை
     மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து
          சேர நாடிய திருடா வருடரு ...... கந்தவேளே

சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்
     ஞான யோகிக ளுளமே யுறைதரு
          தேவ னூர்வரு குமரா வமரர்கள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

காணொணாதது ... கண்களால் காண்பதற்கு முடியாததும்,

உருவோ டருவது ... உருவமும் அருவமுமாக இருப்பதும்,

பேசொ ணாதது ... பேசுதற்கு முடியாததும்,

உரையே தருவது ... பலவித விளக்கங்களுக்கும் இடம் தருவதும்,

காணு நான்மறை முடிவாய் நிறைவது ... காணப்படும் நான்கு
வேதங்களுக்கும் முடிவான பொருளாய் நிறைந்து நிற்பதும்,

பஞ்சபூதக் காய பாசம தனிலே ... ஐம்பூதங்களினால் ஆன இந்த
உடம்பின் மேல் உள்ள பாசத்தில்

உறைவது ... நிலைத்து நிற்பதும்,

மாய மாயுட லறியா ... மாயப் பொருளாக இப்பெரும் உடலால்
அறியமுடியாத

வகையது ... வகையில் இருப்பதும்,

காய மானவ ரெதிரே யவரென ... சரீரத்தை உடைய மனிதர்கள்
எதிரே அவர்களைப் போலவே மனித உருக்கொண்டு

வந்துபேசிப் பேணொணாதது ... வந்து பேசினாலும், இன்னாரென
அறிந்து போற்ற முடியாததும்,

வெளியே யொளியது ... ஆகாய வெளியிலே ஒளிப்பிழம்பாகத்
திகழ்வதும்,

மாயனார் அயன் அறியா வகையது ... திருமால், பிரம்மா இவர்களால்
அறியமுடியாத வகையில் இருப்பதும்,

பேத அபேதமொடு உலகாய் வளர்வது ... வேற்றுமை, ஒற்றுமை
என்ற தன்மைகளோடு உலக ரீதியாக வளர்வதும்,

விந்துநாதப் பேருமாய் ... பீடம், லிங்கம் (சக்தி - சிவம்) என்ற
பேருடையதாயும்,

கலை யறிவாய் ... நூல்களின் சாரமாகவும்,

துரிய அதீதமானது ... யோகியரின் உயர் நிலைக்கும் அப்பாற்பட்டதும்,

வினையேன் முடிதவ பேறு மாய் ... நல்வினையால் என் முடிந்த
தவத்தின் பெரும்பயனானதும்,

அருள் நிறைவாய் விளைவது ... திருவருள் நிறைவாக
விளங்குகின்றதும்,

ஒன்றுநீயே ... இந்த அத்தனையும் பொருந்தி விளங்குபவன் நீ
ஒருவன்தான்.

வீணொணாதென அமையாத அசுரரை ... வீணான காரியம்
கூடாதென விலக்கி அடங்காத அசுரரை

நூறியே உயிர் நமனீ கொளுவென ... பொடியாக்கி, அவர்கள்
உயிரை யமனிடம் நீ கொள்வாயாக என்று

வேல்க டாவிய கரனே ... வேலினைப் பாய்ச்சிய திருக்கரத்தனே,

உமைமுலையுண்ட கோவே ... பார்வதியின் ஞானப்பால் அருந்திய
அரசனே,

வேத நான்முக மறையோனொடும் ... வேதம் கற்ற நான்முக
அந்தணன் பிரமனுடன்

விளையாடியே குடு மியிலே கரமொடு ... விளையாடி அவன்
குடுமியிலே கையால்

வீற மோதின மறவா ... பலமாகக் குட்டிய வீரனே,

குறவர் குறிஞ்சியூடே ... குறவர் வாழும் வள்ளிமலையில்,

சேணொ ணாயிடு மிதண்மேல் ... மிக்க உயரத்தில் கட்டப்பட்ட
பரண் மீது

அரிவையை மேவியே மயல்கொள லீலைகள்செய்து ... இருந்த
பெண் வள்ளியிடம் காதல் மயக்கம் தரும் திருவிளையாடல்கள் செய்து,

சேர நாடிய திருடா ... அவளை அணைக்க விரும்பிய திருடனே,

அருள் தரு கந்தவேளே ... திருவருள் பாலிக்கும் கந்தக் கடவுளே,

சேரொணாவகை வெளியே திரியும் ... எவரும் தம்மிடம் நெருங்க
முடியாதபடி வெளியிலே திரிந்து கொண்டிருக்கும்

மெய்ஞ்ஞான யோகிகளுளமே ... மெய்ஞ்ஞான யோகிகளின்
உள்ளத்தில்

உறைதரு ... விளங்கி வீற்றிருப்பவனே,

தேவ னூர்வரு குமரா ... தேவனூரில் எழுந்தருளியுள்ள குமரனே,

அமரர்கள் தம்பிரானே. ... தேவர்களின் தம்பிரானே.


* தேவனூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு வடகிழக்கில் 5 மைல்
தொலைவில் திருக்கோவிலூருக்கு 2 மைலில் உள்ள தலமாகும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.771  pg 2.772  pg 2.773  pg 2.774 
 WIKI_urai Song number: 741 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 736 - kANoNAdhadhu (dhEvanUr)

kANo NAdhadhu uruvO daruvadhu
     pEso NAdhadhu uraiyE tharuvadhu
          kANu nAnmaRai mudivAy niRaivadhu ...... panchabUtha

kAya pAsama dhanilE uRaivadhu
     mAyamAy udal aRiyA vagai adhu
          kAya mAnavar edhirE avarena ...... vandhu pEsi

pENo NAdhadhu veLiyE oLiyadhu
     mAyanAr ayan aRiyA vagai adhu
          bEdha bEdhmod ulagAy vaLarvadhu ...... vindhunAdha

pEru mAy kalai aRivAy thuriya
     atheetha mAnadhu vinaiyEn mudi thava
          pERu mAy aruL niRaivAy viLaivadhu ...... ondru neeyE

veeNoNA dhena amaiyAdh asurarai
     nURiyE uyir namanee koLuvena
          vEl kadAviya karanE umai mulai ...... uNda kOvE

vEdha nAnmuka maRaiyOn odum viLai
     yAdiyE kudumiyilE karamodu
          veeRa mOdhina maRavA kuRavar ...... kuRinjiyUdE

sENoNAyidum idhaNmEl arivaiyai
     mEviyE mayal koLa leelaigaL seydhu
          sEra nAdiya thirudA aruLtharu ...... kandhavELE

sEroNA vagai veLiyE thiriyu mey
     nyAna yOgigaL uLamEy uRaitharu
          dhevanUr varu kumarA amarargaL ...... thambirAnE.

......... Meaning .........

kANo NAdhadhu: That which cannot be seen;

uruvO daruvadhu: That which has a form and is formless;

pEso NAdhadhu: That which cannot be described in words;

uraiyE tharuvadhu: That which lends itself to several interpretations;

kANu nAnmaRai mudivAy niRaivadhu: That which resides at the peak of all the four visible VEdAs (scriptures);

panchabUtha kAya pAsama dhanilE uRaivadhu: That which is entrenched in attachment to this body composed of the five elements;

mAyamAy udal aRiyA vagai adhu: That which is mystic and cannot be perceived by the body;

kAya mAnavar edhirE avarena vandhu pEsi pENo NAdhadhu: That which comes in a human form and talks like a human being but is still beyond any human comprehension;

veLiyE oLiyadhu: That which is the bright flame in the cosmos;

mAyanAr ayan aRiyA vagai adhu: That which is beyond the grasp of Vishnu and BrahmA;

bEdha bEdhmod ulagAy vaLarvadhu: That which conforms to all worldly aspects of unity and diversity;

vindhunAdha pEru mAy: That which is known as the Cosmic Union of Shakthi (bindhu) and SivA (nAdham)*;

kalai aRivAy: That which is the essence of all scriptures and arts;

thuriya atheetha mAnadhu: That which transcends the most sublime level of Yogis;

vinaiyEn mudi thava pERu mAy: That which is the beneficial culmination of my good deeds and my completed penance;

aruL niRaivAy viLaivadhu: That which blossoms as the fullness of Divine Grace;

ondru neeyE: All "That" I have described above is You and You alone!

veeNoNA dhena amaiyAdh asurarai: Those demons (asuras) would not refrain from forbidden deeds;

nURiyE uyir namanee koLuvena: so You decimated them and handed them over to Yaman (Death-God) asking him to take over their lives,

vEl kadAviya karanE: by throwing the spear from Your hallowed hand!

umai mulai uNda kOvE: You are the princely son of PArvathi who gave You the milk of wisdom.

vEdha nAnmuka maRaiyOn odum viLaiyAdiyE: You played with BrahmA, who knows four VEdAs and has four faces,

kudumiyilE karamodu veeRa mOdhina maRavA: and punished him by hitting him hard on his head with Your knuckles (when he failed to interpret OM), Oh Great Warrior!

kuRavar kuRinjiyUdE: At VaLLimalai, the mount of KuRavas,

sENoNAyidum idhaNmEl arivaiyai mEviyE: You approached VaLLi, the maiden on the platform built so high (when she was protecting the millet-field from birds),

mayal koLa leelaigaL seydhu sEra nAdiya thirudA: and played a lot of tricks on her and enticed her with Your love desirous of hugging her, You Stealer of her heart!

aruLtharu kandhavELE: You are Kanda Swamy, Giver of Divine Grace!

sEroNA vagai veLiyE thiriyu meynyAna yOgigal: Those Yogis, who are never accessible to anyone or any evil force, and who are spiritually emancipated,

uLamEy uRaitharu: find You residing in their hearts.

dhevanUr varu kumarA: You appear in the town of DhEvanUr**, Oh KumarA,

amarargaL thambirAnE.: You are the Lord of all DEvAs!


* 'nAdha bhindu' ('vindhu') is explained here:

'nAdha' is the principle of sound. It is also known as 'nAma' or name. From this 'nAdha' or name, came out 'bhindu' or 'rUba' which is the form. These name and form are 'nAma' and 'rUba' or 'nAdha' and 'bhindu', what is known as 'OmkAra praNava', and these are the seed and seat of all matter and force. 'nAdha' is represented by a line or a pillar and the 'bhindu' by a disc or elliptic base. It is this 'nAdha' or vibration that is known as 'lingA', and 'bhindu' is what is known as its 'peetam'. This 'lingam' along with 'peetam' is the principle of name and form, that is beyond any comprehension, and the form that could be comprehended little better came out of the 'bhindu' in the order of evolution. This is what is known as 'Siva-Sakthi aikkiyam' which is 'rUbArUbam' ('rUba - arUbam'), that is with shape or without shape. (reference - Siva Agamam and Saiva SidhdhAndham).


** DhEvanUr is a place of worship in South Arcot District, 5 miles away in the Northeastern direction of Fort Senji and 2 miles from ThirukkOvilUr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 736 kANoNAdhadhu - dhEvanUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]