திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 734 ஆறும் ஆறும் (தேவனூர்) Thiruppugazh 734 ARumARum (dhEvanUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த தான தான தந்த தந்த ...... தனதான ......... பாடல் ......... ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ...... அறுநாலும் ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற ஆரணாக மங்க டந்த ...... கலையான ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி யேது வேறி யம்ப லின்றி ...... யொருதானாய் யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி யான வாவ டங்க என்று ...... பெறுவேனோ மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்க வாரி மேல்வெ குண்ட சண்ட ...... விததாரை வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து வால சோம னஞ்சு பொங்கு ...... பகுவாய சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசி காக டம்ப லங்கல் ...... புனைவோனே தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் அறுநாலும் ஆறுமாய ... மொத்தம் தொண்ணூற்றாறு (6+6+5+5+6+6+5+5+6+6+5+5+24+6=96) ஆகிய சஞ்சலஞ்கள் ... துன்பங்களுக்கு காரணமான தத்துவங்களுக்கும்* வேறதா விளங்குகின்ற ... வேறுபட்டதாக விளங்குகின்றதும், ஆரணாகமங் கடந்த ... வேதாகமங்களைக் கடந்ததும், கலையான ஈறு கூறரும் ... உபதேசக் கலையாகிய சித்தாந்தத்தால் கூட கூறுதற்கு ஒண்ணாததும், பெருஞ்சுவாமியாய் இருந்த நன்றி ... பெரும் தெய்வ நிலையிலிருக்கும் நற்பொருளை ஏது வேறு இயம்பலின்றி ... ஏது (காரணம்) வேறு சொல்வதற்கு இல்லாமல் ஒருதானாய் யாவுமாய் ... ஒப்பற்ற தானேயாக நின்று, மற்ற எல்லாமாகவும் விளங்கி, மனங்கடந்த மோன வீடு அடைந்து ... மனம் கடந்ததான மெளன இன்ப முக்தியை அடைந்து, ஒருங்கி யான் ... சிந்தை ஒருமைப்பட்டு ஒடுக்கமுற்று யான் அவா அடங்க என்று பெறுவேனோ ... ஆசைகள் யாவும் அடங்கும் நிலையை என்று பெறுவேனோ? மாறு கூறி வந்தெதிர்ந்த சூரர் சேனை மங்க ... பகைமை பேசி வந்து எதிர்த்த சூரர் சேனை அழிய, வங்க வாரி மேல்வெகுண்ட ... கப்பல்கள் செல்லும் கடலினைக் கோபித்ததும், சண்ட விததாரை ... வேகமும் கோபமும் கொண்டதும், வாகை வேல ... வெற்றி வாகையைச் சூடியதுமான வேலினை ஏந்தியவனே, கொன்றை தும்பை மாலை கூவிளங்கொழுந்து வால சோமன் ... கொன்றைமாலை, தும்பைமாலை, வில்வக் கொழுந்து, இளம் பிறைச் சந்திரன், நஞ்சு பொங்கு பகுவாய சீறு மாசுணம் ... விஷம் நிறைந்த, வாய் பிளந்த, கோபம் மிகுந்த பாம்பு, கரந்தை ஆறு வேணி கொண்ட ... திருநீறு, கங்கை, யாவையும் சடையில் வைத்த நம்பர் தேசிகா ... நம் தலைவர் சிவபிரானின் குருநாதனே, கடம்பு அலங்கல் புனைவோனே ... கடப்ப மாலையை அணிந்தவனே, தேவர் யாவரும் தி ரண்டு ... அனைத்துத் தேவர்களும் ஒன்று சேர்ந்து பாரின் மீது வந்து இறைஞ்சு ... பூமியிலே வந்து வணங்கும் தேவ னூர்விளங்க வந்த பெருமாளே. ... தேவனூர்** சிறக்க வந்த பெருமாளே. |
* 96 தத்துவங்கள் பின்வருமாறு: 36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5. ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி. ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. |
** தேவனூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு வடகிழக்கில் 5 மைல் தொலைவில் திருக்கோவிலூருக்கு 2 மைலில் உள்ள தலமாகும். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.767 pg 2.768 pg 2.769 pg 2.770 WIKI_urai Song number: 739 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 734 - ARum ARum (dhEvanUr) ARum ARum anjum anjum ARum ARum anjum anjum ARum ARum anjum anjum ...... aRu nAlum ARum Aya sancha langaL vERadhA viLangu kindra AraN Agamang kadandha ...... kalaiyAna eeRu kURarum perum suvAmi Ayirundha nandri yEdhu vERiyambal indri ...... oruthAnAy yAvumAy manang kadandha mOna veedadaindh orungi yAn avA adanga endru ...... peRuvEnO mARu kURi vandhedirndha sUrar sEnai manga vanga vAri mEl veguNda chanda ...... vidhathArai vAgai vEla kondrai thumbai mAlai kUviLang kozhundhu vAla sOma nanju pongu ...... paguvAya seeRu mAsuNang karandhai ARu vENi koNda nambar dhEsikA kadamba langal ...... punaivOnE dhEvar yAvarun thiraNdu pArin meedhu vandhi Rainju dhEvanUr viLanga vandha ...... perumALE. ......... Meaning ......... ARum ARum anjum anjum ARum ARum anjum anjum ARum ARum anjum anjum aRu nAlum ARum Aya: six plus six plus five plus five plus six plus six plus five plus five plus six plus six plus five plus five plus twenty-four plus six (totalling ninety-six) in all sancha langaL vERadhA viLangu kindra: are the thathvAs* (tenets) causing distress - this One stands alone different from all these tenets! AraN Agamang kadandha: It also transcends the VEdAs and scriptures! kalaiyAna eeRu kURarum perum suvAmi Ayirundha nandri: This One, which is all good and Divine, is beyond description even for the instructive art of SidhdhAntha (The apex of Mental Reach)! yEdhu vERiyambal indri: This cannot be explained by any cause whatsoever! oruthAnAy yAvumAy: It is all by Itself and is pervasive and incomparable. It is pervasive everywhere! manang kadandha mOna veedadaindhu: To reach the silent bliss beyond perception, orungi yAn avA adanga endru peRuvEnO: when will I be able to rein my desires with a focussed mind? mARu kURi vandhedirndha sUrar sEnai manga: To destroy SUra's armies which confronted You, swearing abusively, and vanga vAri mEl veguNda: to blow away the wild seas in which ships move about, chanda vidhathArai vAgai vEla: Your spear was fast and furious enough to ensure victory! kondrai thumbai mAlai kUviLang kozhundhu vAla sOman: kondRai (Indian laburnum) and thumbai (leucas) garlands, vilvam (bael) leaves, crescent moon, nanju pongu paguvAya seeRu mAsuNam: poisonous and fierce serpent with a split mouth, karandhai ARu vENi koNda nambar dhEsikA: VibUthi (holy ash) and a river (Ganga) are all adorning the tresses of our Lord SivA; and You are His Master! kadamba langal punaivOnE: You wear the lovely garland made of Kadamba flowers! dhEvar yAvarun thiraNdu pArin meedhu vandhi Rainju: All the DEvAs converge and come to earth for prostrating before You at dhEvanUr viLanga vandha perumALE.: DhEvanUr**, which prospers due to You, Oh Great One! |
* The 96 thathvAs (tenets) are as follows: 36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5. 5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos. 35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech). |
** DhEvanUr is a place of worship in South Arcot District, 5 miles away in the Northeastern direction of Fort Senji and 2 miles from ThirukkOvilUr. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |