திருப்புகழ் 733 பாவ நாரிகள்  (திருக்கோவலூர்)
Thiruppugazh 733 pAvanArigaL  (thirukkOvalUr)
Thiruppugazh - 733 pAvanArigaL - thirukkOvalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தானன தானன, தான தானன தானன
     தான தானன தானன ...... தனதான

......... பாடல் .........

பாவ நாரிகள் மாமட மாதர் வீணிக ளாணவ
     பாவை யாரிள நீரன ...... முலையாலும்

பார்வை யாமிகு கூரயி லாலு மாமணி யார்குழை
     பார காரன வார்குழ ...... லதனாலுஞ்

சாவ தாரவி தாரமு தார்த ராவித ழாலித
     சாத மூரலி தாமதி ...... முகமாலுஞ்

சார்வ தாவடி யேனிடர் வீற மாலறி வேமிகு
     சார மாயதி லேயுற ...... லொழிவேனோ

ஆவ ஆர்வன நான்மறை யாதி மூல பராவரி
     யாதி காணரி தாகிய ...... பரமேச

ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுர
     னாதி தேவர்க ளியாவர்கள் ...... பணிபாத

கோவ தாமறை யோர்மறை யோது மோதம்வி ழாவொலி
     கோடி யாகம மாவொலி ...... மிகவீறும்

கோவை மாநகர் மேவிய வீர வேலயி லாயுத
     கோதை யானையி னோடமர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பாவ நாரிகள் மா மட மாதர் வீணிகள் ஆணவ பாவையார் ...
பாவச் செயல் செய்கின்ற விலைமாதர்கள், வீண் பொழுது போக்குபவர்கள்,
செருக்கு உடைய மாதர்களின்

இள நீர் அ(ன்)ன முலையாலும் பார்வையாம் மிகு கூர்
அயிலாலும் மாமணியார் குழை
... இளநீர் போன்ற மார்பகத்தாலும்,
கண் என்னும் மிகுந்த கூர்மையான வேலாலும், சிறந்த ரத்தினம் நிறைந்த
குண்டலங்களாலும்,

பார கார் அ(ன்)ன வார் குழல் அதனாலும் சாவது ஆர
விதாரம் அமுது ஆர்தரா இதழால்
... அடர்ந்த மேகத்துக்கு ஒப்பான
நீண்ட கூந்தலாலும், கொல்லுங் குணம் கொண்டுள்ளதும், செவ்விய
இலவு போன்றதும் ஆன, அமுதம் நிறைந்துள்ள வாயிதழாலும்,

இத சாத மூரல் இதா மதி முகமாலும் ... இனிமை தோன்றும்
புன்சிரிப்பாலும், இதம் தரும் நிலவு போன்ற முகத்தாலும்,

சார்வதா அடியேன் இடர் வீற மால் அறிவே மிகு சாரமாய்
அதிலே உறல் ஒழிவேனோ
... எப்போதும் அடியேனுடைய
துன்பங்கள் மிக அதிகமாக, காம மயக்கப் புத்தியே மிகுந்த இனிமை
தருவதாய் நம்பி, அத்தகைய புத்தியின் வழியிலே பொருந்துதலை நான்
விலக்க மாட்டேனோ?

ஆவ ஆர்வன நான் மறை ஆதி மூல பரா அரி ஆதி காண்
அரிதாகிய பரம ஈச ஆதியார் அருள் மா முருகேச
... ஆக
வேண்டியவற்றை நிரம்பக் கூறும் நான்கு வேதங்களின் முதல்வரும், மூலப்
பரமரும், திருமால் முதலிய தேவர்களும் காண்பதற்கு அரியவருமான
பரமேஸ்வரருமாகிய ஆதி மூர்த்தியார் பெற்றருளிய முருகேசனே,

மால் மருகேசுர அனாதி தேவர்கள் இயாவர்கள் பணி பாத ...
திருமாலுக்கு மருகனாகிய ஈசனே, ஆதி இல்லாதவனே, தேவர்கள்
யாவரும் பணிகின்ற பாதனே,

கோ அதா மறையோர் மறை ஓதும் ஓதம் விழா ஒலி கோடி
ஆகம மா ஒலி மிக வீறும்
... சிறப்பாக மறையோர் வேதங்கள் ஓதும்
ஓசை வெள்ளமும், திருவிழாக்களின் ஒலியும், கோடிக் கணக்கான
ஆகமங்களின் பேரொலியும் மிக்கு எழுகின்ற

கோவை மா நகர் மேவிய வீர வேல் அயில் ஆயுத ...
திருக்கோவலூர்* என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் வீரனே, வேல்
என்னும் கூரிய ஆயுதத்தை உடையவனே,

கோதை யானையினோடு அமர் பெருமாளே. ... வள்ளி
தேவயானையோடு வீற்றிருக்கும் பெருமாளே.


* திருக்கோவலூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கோட்டைக்கு
வடகிழக்கில் 5 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.765  pg 2.766  pg 2.767  pg 2.768 
 WIKI_urai Song number: 738 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 733 - pAva nArigaL (thirukkOvalUr)

pAva nArikaL mAmada mAthar veeNika LANava
     pAvai yAriLa neerana ...... mulaiyAlum

pArvai yAmiku kUrayi lAlu mAmaNi yArkuzhai
     pAra kArana vArkuzha ...... lathanAlum

sAva thAravi thAramu thArtha rAvitha zhAlitha
     sAtha mUrali thAmathi ...... mukamAlum

sArva thAvadi yEnidar veeRa mAlaRi vEmiku
     sAra mAyathi lEyuRa ...... lozhivEnO

Ava Arvana nAnmaRai yAthi mUla parAvari
     yAthi kANari thAkiya ...... paramEsa

Athi yAraruL mAmuru kEsa mAlmaru kEsura
     nAthi thEvarka LiyAvarkaL ...... paNipAtha

kOva thAmaRai yOrmaRai yOthu mOthamvi zhAvoli
     kOdi yAkama mAvoli ...... mikaveeRum

kOvai mAnakar mEviya veera vElayi lAyutha
     kOthai yAnaiyi nOdamar ...... perumALE.

......... Meaning .........

pAva nArikaL mA mada mAthar veeNikaL ANava pAvaiyAr: These women carry on their sinful activities and waste their time; these beautiful and young women are extremely vain and arrogant;

iLa neer a(n)na mulaiyAlum pArvaiyAm miku kUr ayilAlum mAmaNiyAr kuzhai: because of their tender coconut-like bosom, their eyes shaped like very sharp spear, elegantly swinging ear-studs embedded with precious gems,

pAra kAr a(n)na vAr kuzhal athanAlum sAvathu Ara vithAram amuthu ArtharA ithazhAl: dense and long hair, dark like the black cloud, their lips like red ilavu, filled with a killer-instinct and sweet nectar,

itha sAtha mUral ithA mathi mukamAlum: their tantalising smile and their soothing moon-like face,

sArvathA adiyEn idar veeRa mAl aRivE miku sAramAy athilE uRal ozhivEnO: my miseries are constantly multiplying while my mind keeps believing in that delusory passion that elates me; will I not be able to shirk such indulgence?

Ava Arvana nAn maRai Athi mUla parA ari Athi kAN arithAkiya parama eesa AthiyAr aruL mA murukEsa: He is the primal Lord heading the four VEdAs that speak volumes about the righteous deeds to be performed; He is the Causal Lord; Lord VishNu and other celestials are unable to obtain the vision of this Supreme Lord; He is the Primordial God ParamEswara (SivA); and You are His handsome son, Oh Lord MurugA!

mAl marukEsura Athi thEvarkaL iyAvarkaL paNi pAtha: You are the nephew of Lord VishNu! You are without any beginning! All the celestials prostrate at Your hallowed feet!

kO athA maRaiyOr maRai Othum Otham vizhA oli kOdi Akama mA oli mika veeRum: The high-pitched sound of the grand chanting of the VEdAs by brahmins, the hum at the festivities and the noise from millions of ritual ceremonies carried out in this place, are vociferous;

kOvai mA nakar mEviya veera vEl ayil Ayutha: this is the large city, ThirukkOvalUr*, which is Your abode, Oh valorous One! You hold the sharp spear as the weapon in Your hand!

kOthai yAnaiyinOdu amar perumALE.: Along with Your two consorts, VaLLi and DEvayAnai, You are seated here, Oh Great One!


* ThirukkOvalUr is in South Arcot District, situated 5 miles northeast of SenjikkOttai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 733 pAva nArigaL - thirukkOvalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]