திருப்புகழ் 728 அடல்வடி வேல்கள்  (திருவாமாத்தூர்)
Thiruppugazh 728 adalvadivElgaL  (thiruvAmAththUr)
Thiruppugazh - 728 adalvadivElgaL - thiruvAmAththUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தான தானன, தனதன தான தானன
     தனதன தான தானன ...... தனதான

......... பாடல் .........

அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு
     மயில்விழி யாலு மாலெனு ...... மதவேழத்

தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை
     யதின்முக மூடு மாடையி ...... னழகாலுந்

துடியிடை யாலும் வாலர்கள் துயர்வுற மாய மாயொரு
     துணிவுட னூடு மாதர்கள் ...... துணையாகத்

தொழுதவர் பாத மோதியுன் வழிவழி யானெ னாவுயர்
     துலையலை மாறு போலுயிர் ...... சுழல்வேனோ

அடவியி னூடு வேடர்க ளரிவையொ டாசை பேசியு
     மடிதொழு தாடு மாண்மையு ...... முடையோனே

அழகிய தோளி ராறுடை அறுமுக வேளெ னாவுனை
     அறிவுட னோது மாதவர் ...... பெருவாழ்வே

விடையெறு மீசர் நேசமு மிகநினை வார்கள் தீவினை
     யுகநெடி தோட மேலணை ...... பவர்மூதூர்

விரைசெறி தோகை மாதர்கள் விரகுட னாடு மாதையில்
     விறல்மயில் மீது மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அடல் வடி வேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும்
அயில் விழியாலும்
... வலிமை வாய்ந்த கூரிய வேல்கள், அம்புகள்
ஆகியவற்றைக் காட்டிலும் ஓடிப்பாய்வதில் நன்கு தேர்ந்த கூர்மையான
கண்களாலும்,

மால் எனும் மத வேழத்து அளவிய கோடு போல் வினை
அளவு அளவான கூர் முலை
... காம மயக்கம் எனப்பட்ட
மதயானையின் இடத்துள்ள தந்தம் போன்றதும், வினையின் அளவே
அளவாகக் கொண்டதுமான, மிக்கெழுந்த மார்பகத்தாலும்,

அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும் துடி இடையாலும்
வாலர்கள் துயர் உற
... அதன் தோற்றத்தை மூடி மறைக்கும்
ஆடையின் அழகாலும், உடுக்கை போன்ற இடையாலும், வாலிபர்கள்
துயரம் அடைய

மாயமாய் ஒரு துணிவுடன் ஊடு மாதர்கள் துணையாகத்
தொழுது அவர் பாதம் ஓதி
... மாய வித்தையுடனும் ஒப்பற்ற
தைரியத்துடனும் பிணங்குகின்ற பொது மகளிரைத் துணையாகக்
கொண்டு, அவர்களை வணங்கி, அவர்களுடைய பாதங்களைப் புகழ்ந்து,

உன் வழி வழி யான் எனா உயர் துலை அலை மாறு போல்
உயிர் சுழல்வேனோ
... உன்னுடைய பரம்பரையில் வந்தவன் நான்
என்று கூறி, வெகு தூரம் உயர்ந்து எழும் அலையில் பட்டு அலமந்து
போகும் விளக்குமாற்றுக் குச்சி போல் உயிர்ச் சுழற்சி உறுவேனோ?

அடவியின் ஊடு வேடர்கள் அரிவையொடு ஆசை பேசியும்
அடி தொழுது ஆடும் ஆண்மையும் உடையோனே
...
காட்டினுள்ளே இருந்த வேடர்களின் பெண்ணான வள்ளியுடன் உன்
காதலைத் தெரிவித்துப் பேசும் பேச்சையும், அவளுடைய திருவடிகளைத்
தொழுது விளையாடும் ஆண்மைக் குணத்தையும் உடையவனே,

அழகிய தோள் இராறு உடை அறுமுக வேள் எ(ன்)னா
உனை அறிவுடன் ஓது மாதவர் பெரு வாழ்வே
... அழகிய
பன்னிரு தோள்களை உடைய ஆறுமுக வேளே என்று உன்னை
ஞானத்துடன் ஓதுகின்ற மகா தவசிகளுக்கு பெரிய செல்வமாக
உள்ளவனே,

விடை எறும் ஈசர் நேசமும் மிக நினைவார்கள் தீ வினை
உக நெடிது ஓட
... ரிஷப வாகனத்தை உடைய சிவபெருமான் மீது
அன்பு மிகவும் உள்ளத்தில் கொண்ட அடியார்களின் தீவினைகள்
சிதறுண்டு தூரத்தில் விலகி ஓட,

மேல் அணைபவர் மூதூர் விரை செறி தோகை மாதர்கள்
விரகுடன் ஆடும் ஆதையில்
... தன்னிடத்தே வந்து சேர்ந்து
தரிசிப்பதான பழைமை வாய்ந்த இத்தலத்தில், நறு மணம் நிறைந்த
மயில் போன்ற மாதர்கள் ஆர்வத்துடன் நடனம் ஆடுகின்ற
திருஆமாத்தூர்* என்னும் தலத்தில்,

விறல் மயில் மீது மேவிய பெருமாளே. ... வீரம் வாய்ந்த மயிலின்
மேல் வீற்றிருக்கும் பெருமாளே.


* திருவாமாத்தூர் விழுப்புரம் ரயில் நிலயத்திலிருந்து 4 மைல் வடமேற்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.751  pg 2.752  pg 2.753  pg 2.754 
 WIKI_urai Song number: 733 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 728 - adalvadi vElgaL (thiruvAmAththUr)

adalvadi vElkaL vALika Lavaivida vOdal nErpadu
     mayilvizhi yAlu mAlenu ...... mathavEzhath

thaLaviya kOdu pOlvinai yaLavaLa vAna kUrmulai
     yathinmuka mUdu mAdaiyi ...... nazhakAlun

thudiyidai yAlum vAlarkaL thuyarvuRa mAya mAyoru
     thuNivuda nUdu mAtharkaL ...... thuNaiyAkath

thozhuthavar pAtha mOthiyun vazhivazhi yAne nAvuyar
     thulaiyalai mARu pOluyir ...... suzhalvEnO

adaviyi nUdu vEdarka Larivaiyo dAsai pEsiyu
     madithozhu thAdu mANmaiyu ...... mudaiyOnE

azhakiya thOLi rARudai aRumuka vELe nAvunai
     aRivuda nOthu mAdhavar ...... peruvAzhvE

vidaiyeRu meesar nEsamu mikaninai vArkaL theevinai
     yukanedi thOda mElaNai ...... pavarmUthUr

viraiseRi thOkai mAtharkaL virakuda nAdu mAthaiyil
     viRalmayil meethu mEviya ...... perumALE.

......... Meaning .........

adal vadi vElkaL vALikaL avaivida Odal nEr padum ayil vizhiyAlum: Because of their sharp eyes, when wielded, being speedier than powerful and pointed spears and arrows,

mAl enum matha vEzhaththu aLaviya kOdu pOl vinai aLavu aLavAna kUr mulai: because of their full to bursting breasts looking like the ivory tusks of a raging elephant called delusory passion and measuring the same size as their past deeds,

athin mukam mUdum Adaiyin azhakAlum thudi idaiyAlum vAlarkaL thuyar uRa: because of the beautiful cloth that conceals their bosom and because of their slender waist shaped like a hand-drum, young men are troubled;

mAyamAy oru thuNivudan Udu mAtharkaL thuNaiyAkath thozhuthu avar pAtham Othi: associating myself with such whores who tease and tantalise by casting a magical spell and with an unmatched courage, I have been worshipping them, praising their feet,

un vazhi vazhi yAn enA uyar thulai alai mARu pOl uyir suzhalvEnO: and declaring to them that I too belong to their lineage; I have suffered the unbearable tossing about of my life like a broomstick being heaved continuously by the high wave in the sea; do I have to suffer this kind of turbulent gyration?

adaviyin Udu vEdarkaL arivaiyodu Asai pEsiyum adi thozhuthu Adum ANmaiyum udaiyOnE: To VaLLi, the damsel of the hunters who lived in the forest, You expressed Your love and prostrated at her feet sportingly, Oh Manly One!

azhakiya thOL irARu udai aRumuka vEL e(n)nA unai aRivudan Othu mAdhavar peru vAzhvE: You are the invaluable treasure to those great and wise sages who praise You saying "Oh Lord ARumukA, with twelve hallowed shoulders!"

vidai eRum eesar nEsamum mika ninaivArkaL thee vinai uka nedithu Oda: He drives away the past bad deeds of those devotees who cherish in their heart the devotion to Lord SivA, mounting the bull,

mEl aNaipavar mUthUr virai seRi thOkai mAtharkaL virakudan Adum Athaiyil: and who gather to reach this ancient town to worship Him; here, in ThiruvAmAththUr*, peacock-like women, with a pleasant aroma around them, dance very enthusiastically;

viRal mayil meethu mEviya perumALE.: and this is where You are seated, mounting the valorous peacock, Oh Great One!


* ThiruvAmAththUr is situated 4 miles northwest of Vizhuppuram railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 728 adalvadi vElgaL - thiruvAmAththUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]