திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 729 கண்க யற்பிணை (திருவாமாத்தூர்) Thiruppugazh 729 kaNkayaRpiNai (thiruvAmAththUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன ...... தனதான ......... பாடல் ......... கண்க யற்பிணை மானோடுற வுண்டெ னக்கழை தோளானது நன்க மைக்கின மாமாமென ...... முகையான கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை குஞ்ச ரத்திரு கோடோடுற விஞ்சு மைப்பொரு கார்கோதைகொ ...... டுயர்காலன் பெண்ட னக்குள கோலாகல மின்றெ டுத்திளை யோராவிகள் மன்பி டிப்பது போல்நீள்வடி ...... வுடைமாதர் பின்பொ ழித்திடு மாமாயையி லன்பு வைத்தழி யாதேயுறு கிஞ்சி லத்தனை தாள்பேணிட ...... அருள்தாராய் விண்ட னக்குற வானோனுடல் கண்ப டைத்தவன் வேதாவொடு விண்டு வித்தகன் வீழ்தாளினர் ...... விடையேறி வெந்த னத்துமை யாள்மேவிய சந்த னப்புய மாதீசுரர் வெங்க யத்துரி யார்போர்வையர் ...... மிகுவாழ்வே தண்பு டைப்பொழில் சூழ்மாதையில் நண்பு வைத்தருள் தாராதல முங்கி ளைத்திட வானீள்திசை ...... யொடுதாவித் தண்ட ரக்கர்கள் கோகோவென விண்டி டத்தட மாமீமிசை சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கண் கயல் பிணை மானோடு உறவு உண்டு எனக் கழை தோளானது நன்கு அமைக்கு இனம் ஆம் ஆம் என ... கண்ணுக்கு கயல் மீனோடும், பெண்மானோடும் சம்பந்தம் உண்டு என்றும், கரும்பு போன்ற தோள் நல்ல மூங்கிலுக்கு ஒப்பாகும் ஆம் ஆம் என்றும் சொல்லும்படியாக, முகையான கஞ்சம் ஒத்து எழு கூர் மா முலை குஞ்சரத்து இரு கோடோடு உற ... மொட்டான தாமரை போன்று வளர்ந்து மிக்கெழுந்துள்ள கூரிய பெரிய மார்பகம் யானையின் இரண்டு தந்தங்களுக்கு ஒப்பானவை எனவும், விஞ்சு மைப் பொரு கார் கோதை கொடு உயர் காலன் பெண் தனக்கு உள கோலாகலம் இன்று எடுத்து ... நிரம்பிய இருளுக்கு ஒப்பான கருமேகம் போன்ற கூந்தல் எனவும் இவைகளைக் கொண்டு, பெருமை வாய்ந்த யமனே பெண் என்னும் ஓர் உருவுக்கு உண்டான ஆடம்பரமான வேஷத்தை இன்று எடுத்துக் கொண்டு வந்து, இளையோர் ஆவிகள் மன் பிடிப்பது போல் நீள் வடிவுடை மாதர் பின்பு ஒழித்திடு மா மாயையில் அன்பு வைத்து அழியாதே உறு ... இளைஞோர்களின் உயிரை நன்றாகப் பிடிப்பது போல, பெரும் அழகு வாய்ந்த மாதர்களின் பிறகே தனத்தைச் செலவழிக்கும் மாமோகத்தில் விருப்பத்தை வைத்து, நான் அழிந்து போகாமல் கிஞ்சில் அத்தனை தாள் பேணிட அருள் தாராய் ... ஒரு சிறிய அளவுக்காவது உனது திருவடிகளை விரும்ப திருவருளைத் தருவாயாக. விண் தனக்கு உறவானோன் உடல் கண் படைத்தவன் வேதாவொடு விண்டு வித்தகன் வீழ் தாளினர் விடை ஏறி ... விண்ணுலகுக்குச் சொந்தமானவனும், உடலெல்லாம் கண் கொண்டவனுமாகிய இந்திரன், பிரமனுடனும், பேரறிவாளனாகிய திருமாலுடனும் விழுந்து வணங்கும் திருவடியை உடையவர், (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறுபவர், வெம் தனத்து உமையாள் மேவிய சந்தனப் புய மாது ஈசுரர் வெம் கயத்து உரி ஆர் போர்வையர் மிகு வாழ்வே ... விருப்பத்துக்கு இடமான திருமார்பை உடைய உமையாள் விரும்பி அமரும் சந்தனம் பூசிய புயங்களை உடைய அர்த்த நாரீசுரர், கொடிய யானையின் தோலை நிரம்பின போர்வையாகக் கொண்டவர் ஆகிய சிவபெருமானின் பெரும் செல்வமே, தண் புடைப் பொழில் சூழ் மாதையில் நண்பு வைத்து அருள் தாராதலமும் கிளைத்திட ... குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்ட திருவாமாத்தூரில்* ஆசை கொண்டு வீற்றிருந்து, திருவருளால் உலகம் யாவையும் செழிப்புற்று ஓங்க, வான் நீள் திசையொடு தாவித் தண்டு அரக்கர்கள் கோ கோ என விண்டிட ... வானளாவிய பெரிய திசைகளிலும் பரந்து நிறைந்து யாவரையும் வருத்திய அசுரர்கள் கோ கோ என்று அலறி பயந்து ஓட, தட மா மீமிசை சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே. ... பெரிய மாமரத்தின் (உருவில் ஒளிந்திருந்த சூரனின்) மீது கோபமும் வலிமையும் கொண்ட வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. |
* திருவாமாத்தூர் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வடமேற்கில் 4 மைலில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.753 pg 2.754 pg 2.755 pg 2.756 WIKI_urai Song number: 734 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 729 - kaNkayaR piNai (ThiruvAmAththUr) kaNka yaRpiNai mAnOduRa vuNde nakkazhai thOLAnathu nanka maikkina mAmAmena ...... mukaiyAna kanja moththezhu kUrmAmulai kunja raththiru kOdOduRa vinju maipporu kArkOthaiko ...... duyarkAlan peNda nakkuLa kOlAkala minRe duththiLai yOrAvikaL manpi dippathu pOlneeLvadi ...... vudaimAthar pinpo zhiththidu mAmAyaiyi lanpu vaiththazhi yAthEyuRu kinji laththanai thALpENida ...... aruLthArAy viNda nakkuRa vAnOnudal kaNpa daiththavan vEthAvodu viNdu viththakan veezhthALinar ...... vidaiyERi ventha naththumai yALmEviya santha nappuya mAtheesurar venga yaththuri yArpOrvaiyar ...... mikuvAzhvE thaNpu daippozhil cUzhmAthaiyil naNpu vaiththaruL thArAthala mungi Laiththida vAneeLthisai ...... yoduthAvith thaNda rakkarkaL kOkOvena viNdi daththada mAmeemisai chaNda vikrama vElEviya ...... perumALE. ......... Meaning ......... kaN kayal piNai mAnOdu uRavu uNdu enak kazhai thOLAnathu nanku amaikku inam Am Am ena: Their eyes are akin to kayal fish and female deer; their sugarcane-like shoulders are akin to bamboo of good species; yes, yes, it is indeed so; mukaiyAna kanjam oththu ezhu kUr mA mulai kunjaraththu iru kOdOdu uRa: just like the budding lotus blossoms, their prominent, pointed and large bosom could be compared to the two tusks of the elephant; vinju maip poru kAr kOthai kodu uyar kAlan peN thanakku uLa kOlAkalam inRu eduththu: their dark cloud-like hair is comparable to dense darkness of the night; it is as though the notorious Yaman (God of Death) himself came today in the disguise of a pompous woman with those features iLaiyOr AvikaL man pidippathu pOl neeL vadivudai mAthar pinpu ozhiththidu mA mAyaiyil anpu vaiththu azhiyAthE uRu: in order to capture the lives of young men; I do not wish to go on the destructive path of frittering away my wealth on these exquisitely beautiful women in a fit of passionate deluge; kinjil aththanai thAL pENida aruL thArAy: for that, kindly bless me with the wisdom to seek, even though slightly, Your hallowed feet! viN thanakku uRavAnOn udal kaN padaiththavan vEthAvodu viNdu viththakan veezh thALinar vidai ERi: Lord IndrA who governs the celestial land and who has prolific eyes all over his body, along with Brahma and the wisest Lord VishNu, assembled to prostrate at His hallowed feet; He mounts Nandi, the great bull, as His vehicle; vem thanaththu umaiyAL mEviya santhanap puya mAthu eesurar vem kayaththu uri Ar pOrvaiyar miku vAzhvE: UmAdEvi, bestowed with pleasing bosom, is concorporate with relish on His left shoulders smeared with sandalwood paste; He is of the form of Half God and Half Goddess (ardhanAreesurar); He wears as a shawl the hide of a wild elephant; and You are the great Treasure of that Lord SivA! thaN pudaip pozhil cUzh mAthaiyil naNpu vaiththu aruL thArAthalamum kiLaiththida: You are delightfully seated in ThiruvAmAththUr* surrounded by cool groves; with Your gracious blessings the entire world prospers; vAn neeL thisaiyodu thAvith thaNdu arakkarkaL kO kO ena viNdida: the demons who were spread in all the directions reaching sky-high and who resorted to harassing everyone were driven away shrieking in fear thada mA meemisai saNda vikrama vEl Eviya perumALE.: when You wielded the raging and powerful spear on the huge mango tree (in which disguise was the demon SUran), Oh Great One! |
* ThiruvAmAththUr is located 4 miles northwest of Vizhuppuram Railway Station. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |