திருப்புகழ் 726 பிறவியான சடம்  (சிறுவை)
Thiruppugazh 726 piRaviyAnajadam  (siRuvai)
Thiruppugazh - 726 piRaviyAnajadam - siRuvaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தனன தந்த தனன தான தனன தந்த
     தனன தான தனன தந்த ...... தனதான

......... பாடல் .........

பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
     பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப்

பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி
     பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே

நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
     நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே

நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
     நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ

பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று
     பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப்

பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
     புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே

சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்
     சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச்

செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
     சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பிறவியான சடமிறங்கி ... இந்தப் பிறப்புக்கு என்று ஏற்பட்ட
உடலிலே புகுந்து,

வழியிலாத துறைசெறிந்து ... நல்வழி இல்லாத வேறு வழிகளிலே
நெருங்கிப்போய்,

பிணிகளான துயருழன்று தடுமாறி ... நோய் முதலிய துக்கங்களின்
வேதனையுடன் தடுமாறி,

பெருகு தீய வினையி னொந்து ... பெருகும் கெட்ட வினைகளினால்
கஷ்டப்பட்டு,

கதிகடோறும் அலைபொருந்தி ... இவ்வாறு பிறப்புக்கள் தோறும்
அலைச்சல் அடைந்து,

பிடிபடாத ஜனன நம்பி யழியாதே ... பிறவியின் உண்மைத்தன்மை
ஏதும் புலப்படாத இந்தப் பிறப்பையே நம்பி அழிந்து போகாமல்,

நறைவிழாத மலர்முகந்த ... தேன் நீங்காத மலர்கள் நிரம்பியதும்,

அரிய மோன வழிதிறந்த ... அருமையான மெளன வழியைத் திறந்து
காட்டுவதுமான

நளின பாத மெனது சிந்தை யகலாதே ... உனது தாமரைப்
பாதங்கள் என் மனத்தை விட்டு நீங்காமல்,

நரர் சுராதிபரும்வணங்கும் ... மனிதர்களும், தேவர் தலைவர்களும்
வணங்குகின்ற

இனிய சேவை தனைவி ரும்பி ... இனிமையான உன் தரிசனத்தை
விரும்பி

நலனதாக அடிய னென்று பெறுவேனோ ... நன்மை அடையும்
பாக்கியத்தை யான் என்று பெறுவேனோ?

பொறிவழாத முநிவர் ... ஐம்பொறிகளும் தவறான வழியில் போகாமல்
காத்திருந்த நக்கீர முனிவர்

தங்கள் நெறிவழாத பிலனு ழன்று ... (குகையில் அடைபட்டாலும்)
தமது நித்திய அநுஷ்டானங்களை தவறாமல் நின்று காத்த குகையிலே
மன அலைச்சலுற்று,

பொருநிசாசரனைநினைந்து வினைநாடி ... குகையில்
அகப்பட்டவர்களை எல்லாம் கொல்லவிருந்த ராட்சசனை* வெல்ல
நினைந்த நக்கீரர் உய்யும் வழியை நாடியபோது,

பொருவிலாமல் அருள்புரிந்து ... ஒப்பில்லாத அன்பு வழியிலே
கிருபை கூர்ந்து,

மயிலினேறி நொடியில் வந்து ... உன் மயில் மீது ஏறி ஒரு நொடிப்
பொழுதில் வந்து,

புளக மேவ தமிழ்புனைந்த முருகோனே ... புளகாங்கிதம்
கொள்ளுமாறு மிக்க மகிழ்ச்சி கொண்டு, (நக்கீரரை குகையினின்று மீட்டு)
திருமுருகாற்றுப்படை என்ற தமிழ் மாலையைப் புனைந்த முருகனே,

சிறுவராகி யிருவர் ... சிறுவரான லவ, குசர் என்னும் ஸ்ரீராமரின்
புதல்வர்கள் இருவரும்

அந்த கரிபதாதி கொடுபொருஞ்சொல் ... அந்த யானைப்படை,
காலாட்படை இவற்றைக் கொண்டு, போரில் வீர வாசகங்களுடன்

சிலையிராமனுடனெதிர்ந்து சமராடி ... வில் ஏந்திய ஸ்ரீராமருடன்
எதிர்த்துப் போர் செய்து,

செயமதான நகர் அமர்ந்த ... வெற்றி பெற்ற நகரமாகிய சிறுவையில்**
அமர்ந்த,

அளகை போல வளமிகுந்த சிறுவை மேவி ... குபேரப்பட்டினம்
போல வளப்பம் மிக்கதான சிறுவையில் வீற்றிருந்த,

வரமி குந்த பெருமாளே. ... வரங்களை நிரம்பத் தரும் பெருமாளே.


* குதிரை முகத்தைக் கொண்ட ஒரு பெண் பூதத்தினின்றும் நக்கீரரை
முருகன் காத்த வரலாறு.


** சிறுவைத்தலம் சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே
7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'. 'லவ - குசர்' ஆகிய
சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.745  pg 2.746  pg 2.747  pg 2.748 
 WIKI_urai Song number: 731 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 726 - piRaviyAna jadam (siRuvai)

piRaviyAna jadam iRangi vazhi ilAdha thuRai seRindhu
     piNigaLAna thuyar uzhandru ...... thadumARip

perugu theeya vinaiyi nondhu gathigaL thORu malai porundhi
     pidi padAdha janana nambi ...... azhiyAdhE

naRai vizhAdha malar mugandha ariya mOna vazhi thiRandha
     naLina pAdham enadhu chinthai ...... agalAdhE

narar surAdhiparum vaNangum iniya sEvai thanai virumbi
     nalanadhAga adiyan endru ...... peRuvEnO

poRi vazhAdha munivar thangaL neRi vazhAdha pilan uzhandru
     poru nisAcha ranai ninaindhu ...... vinainAdip

poruv ilAmal aruL purindhu mayilinEri nodiyil vandhu
     puLaga mEva thamizh punaindha ...... murugOnE

siRuvarAgi iruvar andha kari padhAdhi kodu porun sol
     silai irAman udan edhirndhu ...... samarAdi

jeyam adhAna nagar amarndha aLagaipOla vaLamigundha
     siRuvai mEvi vara migundha ...... perumALE.

......... Meaning .........

piRaviyAna jadam iRangi: I descended into this body in this birth;

vazhi ilAdha thuRai seRindhu: I pursued all ways except the right one;

piNigaLAna thuyar uzhandru thadumARi: I endured the misery, reeling under all diseases;

perugu theeya vinaiyi nondhu: I suffered due to my going from bad to worse;

gathigaL thORum alai porundhi: in all my births I was subject to aimless drifting;

pidi padAdha janana nambi azhiyAdhE: and I am still unable to understand the significance of birth. I do not want to be destroyed believing in this kind of birth.

naRai vizhAdha malar mugandha: There are bunches of flowers filled with honey (at Your feet);

ariya mOna vazhi thiRandha: and the path to the unique Silence (MOnam) opens up

naLina pAdham enadhu chinthai agalAdhE: Your lotus feet; and my mind should never leave those feet.

narar surAdhiparum vaNangum iniya sEvai thanai: Your sweet vision sought by men and the leaders of DEvAs

virumbi nalanadhAga adiyan endru peRuvEnO: should be my objective. When will I get it?

poRi vazhAdha munivar: The great sage (Nakkeerar) who had absolute control over his perceptory senses

thangaL neRi vazhAdha pilan uzhandru: (although imprisoned in a cave) never failed to observe his daily rites even while suffering in the cave.

poru nisAcha ranai ninaindhu vinainAdi: He had to find a way to win over the rebellious devil* haunting him.

poruv ilAmal aruL purindhu mayilinEri nodiyil vandhu: You showed incomparable compassion on him and came on Your peacock in an instant (to kill that devil)

puLaga mEva thamizh punaindha murugOnE: and accepted, with glee, his Tamil composition (ThirumurugAtRuppadai), Oh MurugA!

siRuvarAgi iruvar: The twin boys Lava and Kucha (sons of Sri Rama)

andha kari padhAdhi kodu porun sol: fought with armies of elephants and soldiers, uttering brave words,

silai irAman udan edhirndhu samarAdi: and battled against Sri Rama, with His bow KothaNdam,

jeyam adhAna nagar amarndha aLagaipOla vaLamigundha: to claim victory in this place SiRuvai**, which is as prosperous as ALagApuri, the Capital of KubEran (God of Wealth).

siRuvai mEvi vara migundha perumALE.: You grant plenty of boons from Your abode at SiRuvai**, Oh Great One!


* When Nakkeerar was imprisoned in a cave, a she-devil with horse's face haunted him, and Murugan rescued Nakeerar.


** SiRuvai is on the route between Chennai and AaraNi, about 7 miles west of PonnEri.
It is also known as SiRuvarambEdu as it is believed that young boys, LavA and KuchA, sons of Rama, fought here with bows and arrows. This place houses a special temple for Murugan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 726 piRaviyAna jadam - siRuvai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]