திருப்புகழ் 722 கலகலெனச் சில  (திருவக்கரை)
Thiruppugazh 722 kalakalenachchila  (thiruvakkarai)
Thiruppugazh - 722 kalakalenachchila - thiruvakkaraiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தத்தன தனதன தத்தன
     தனதன தத்தன ...... தனதானா

......... பாடல் .........

கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
     தொழிவ துனைச்சிறி ...... துரையாதே

கருவழிதத்திய மடுவ தனிற்புகு
     கடுநர குக்கிடை ...... யிடைவீழா

உலகு தனிற்பல பிறவி தரித்தற
     வுழல்வது விட்டினி ...... யடிநாயேன்

உனதடி மைத்திரள் அதனினு முட்பட
     வுபய மலர்ப்பத ...... மருள்வாயே

குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
     நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா

குணதர வித்தக குமர புனத்திடை
     குறமக ளைப்புணர் ...... மணிமார்பா

அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
     மணிதிரு வக்கரை ...... யுறைவோனே

அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
     அவைதரு வித்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கலகலெனச்சில கலைகள் ... கலகல என்ற ஆரவாரச் சத்தத்துடன்
சில நூல்களை

பிதற்றுவது ஒழிவ(து) ... ஓதிப் பிதற்றுவது ஒழியவேண்டிய ஒன்றாகும்.

உனைச்சிறிதுரையாதே ... உன்னைக் கொஞ்சமேனும் துதிக்காமல்,

கருவழி தத்திய மடுவதனிற் புகு ... கருக்குழியில் வேகமாகச்
செலுத்தும் பள்ளத்தில் புகுந்து

கடுநரகுக்கிடை யிடைவீழா ... பொல்லாத நரகத்தின் மத்தியில்
விழுந்து விடாமல்,

உலகு தனிற்பல பிறவி தரித்து ... இவ்வுலகில் பல பிறப்புக்களை
எடுத்து

அறவுழல்வது விட்டினி ... மிகவும் திரிதலை விட்டு, இனியாவது

அடிநாயேன் உனதடிமைத்திரள் ... கீழான நாய் போன்ற
அடியேனும் உன் அடியார் கூட்டத்தின்

அதனினும் உட்பட ... உள்வட்டத்தில் ஒருவனாகும்படியாக

உபய மலர்ப்பதமருள்வாயே ... உன்னிரு மலர்ப் பாதங்களை
அருள்வாயாக.

குலகிரி பொட்டெழ ... கிரெளஞ்சமலைக் கூட்டங்கள்
பொடியாகும்படி,

அலைகடல் வற்றிட ... அலைவீசும் கடல் நீரின்றி வற்றிப் போகும்படி,

நிசிசரனைப்பொரும் அயில்வீரா ... அசுரனாம் சூரனோடு போர்
செய்த வேல் வீரனே,

குணதர வித்தக குமர ... நற்குணத்தவனே, ஞானமூர்த்தியே,
குமரனே,

புனத்திடை குறமகளைப்புணர் மணிமார்பா ... தினைப்புனத்தின்
இடையே குறமகள் வள்ளியை மணந்த அழகிய மார்பனே,

அலைபுனலிற்றவழ் ... அலை வீசும் நீரிலே தவழ்கின்ற

வளைநிலவைத்தரு ... சங்குகள் பிரகாசிக்கின்ற

மணிதிருவக்கரையுறைவோனே ... அழகிய திருவக்கரைத்* தலத்தில்
வீற்றிருப்பவனே,

அடியவர் இச்சையில் எவையெவை யுற்றனஅவை ... உன்
அடியார்களுடைய மனத்தில் என்னென்ன விருப்பங்கள் உள்ளனவோ
அன்ன ஆசைகளை

தருவித்தருள் பெருமாளே. ... வரவழைத்து நிறைவேற்றி அருளும்
பெருமாளே.


* திருவக்கரை தென்னாற்காடு மாவட்டத்தில் மயிலம் ரயில் நிலையத்திலிருந்து
12 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.735  pg 2.736 
 WIKI_urai Song number: 727 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 722 - kalakalenach chila (thiruvakkarai)

kala kalena sila kalaigaL pidhatruvadh
     ozhivadh unai siRidh ...... uRaiyAdhE

karuvazhi thaththiya maduva thaniR pugu
     kadu naraguk idai ...... idaiveezhA

ulagu thaniR pala piRavi dharith aRa
     uzhal vadhu vittini ...... adinAyEn

unadhadi maith thiraL adhaninum utpada
     ubaya malarp padham ...... aruLvAyE

kulagiri pottezha alai kadal vatrida
     nisicharanaip poru ...... mayilveerA

guNadhara viththaga kumara punaththidai
     kuRamaga Laip puNar ...... maNimArbA

alaipuna lil thavazh vaLainila vaith tharu
     maNithiru vakkarai ...... uRaivOnE

adiyavar ichchaiyil evai evai utrana
     avai thaRu viththaruL ...... perumALE.

......... Meaning .........

kala kalena sila kalaigaL pidhatruvadh ozhivadhu: One should refrain from blabbering loudly just to show off that he has read a few books.

unai siRidh uRaiyAdhE: Without praying to You for even a little while,

karuvazhi thaththiya maduva thaniR pugu: falling into the trap of re-birth, which is a deep rut,

kadu naraguk idai idaiveezhA: and suffering in the middle of the terrible hell,

ulagu thaniR pala piRavi dharith: I end up taking several births in this world.

aRa uzhal vadhu vittini: I do not wish to be tossed about like this any more.

adinAyEn unadhadi maith thiraL: The lowly dog that I am, I would like to be among Your devotees

adhaninum utpada: that too, in their inner circle!

ubaya malarp padham aruLvAyE: To obtain that position You have to bless me with both Your lotus feet!

kulagiri pottezha alai kadal vatrida: The whole range of Krouncha mountains were powdered and the seas dried up,

nisicharanaip porum ayilveerA: when You fought with the demon SUran, Oh Great Warrior with the spear!

guNadhara viththaga kumara: You are full of virtues! You are the greatest scholar! Oh KumarA!

punaththidai kuRamaga Laip puNar maNimArbA: You embraced VaLLi, the damsel of KuRavas, in the millet field, Oh, Handsome One with a large and lovely chest!

alaipuna lil thavazh vaLainila vaith tharu: In the wavy waters can be obtained bright and sparkling shells at

maNithiru vakkarai uRaivOnE: the fine place, Thiruvakkarai*, which is Your abode.

adiyavar ichchaiyil evai evai utrana: Whatever desires are in the minds of Your devotees,

avai thaRu viththaruL perumALE.: You cause them and also fulfill them, Oh Great One!


* Thiruvakkarai is in South Arcot District, 12 miles away from Mayilam Railway Station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 722 kalakalenach chila - thiruvakkarai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]