பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவக்கரிை திருப்புகழ் உரை 177 திருவக்கரை. 727. கலகல என்னும் ஒசையுடன் சில நூல்களைக் கற்றுப் பிதற்றல் (ஒழிவது) ஒழிய வேண்டியது; உன்னைக் கொஞ்சமேனும் துதிக்காமல். கருவிற் புகுதற்கு வேண்டிய வழியில் வேகமாகச் செலுத்தும் மடுவில் (பள்ளத்திற்) புகுந்து, பொல்லாத நகரத்தின் மத்தியில் வீழாமல். உலகிலே பல பிறப்புக்களை எடுத்து மிகவும் திரிதலை விட்டு, இனியேனும் அடிநாயேனாகிய நான். உன்னுடைய அடியார் கூட்டத்திலும் உட்பட்ட ஒருவனாக உனது இரண்டு மலர்ப்பாதங்களை அருள்வாயே. (குலம்) கூட்டமான எழுகிரி தொளைபட்டுப் பொடிபட அலைகடல் வற்றிப்போக அசுரனாம் சூரனொடு (பொரும்) சண்டைசெய்த (அயில் வீரா) வேல் வீரனே! நற் குணத்தவனே! ஞானமூர்த்தியே! குமரனே! (தினைப்) புனத்திடையே குறமகள் வள்ளியை அணைந்த அழகிய மார்பனே! அலைவீசும் நீரிலே தவழ்கின்ற சங்குகள் ஒளியை வீசுகின்ற அழகிய திருவக்கரை என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே! அடியார்களுடைய ஆசையில் என்ன என்ன ஆசைகள் உள்ளனவோ அன்ன அன்ன ஆசைகளை வரவழைத்துப் பூர்த்திசெய்யும் (தந்து உதவும்) கருணை மூர்த்தியாம் பெருமாளே! (அடிமைத்திரள் அதனினும் உட்பட பதம் அருள்வாயே)