திருப்புகழ் 713 திமிர மாமன  (திருப்போரூர்)
Thiruppugazh 713 thimiramAmana  (thiruppOrUr)
Thiruppugazh - 713 thimiramAmana - thiruppOrUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானன தானன தனன தானன தானன
     தனன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ
     திமிர மேயரி சூரிய ...... திரிலோக

தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
     சிவசு தாவரி நாரணன் ...... மருகோனே

குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
     குணக லாநிதி நாரணி ...... தருகோவே

குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர
     குறவர் மாமக ளாசைகொள் ...... மணியேசம்

பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக
     பசுர பாடன பாளித ...... பகளேச

பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
     பரவு பாணித பாவல ...... பரயோக

சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
     சமய நாயக மாமயில் ...... முதுவீர

சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
     சமர மாபுரி மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

திமிர மாமன மாமட மடமையேன் ... இருள் அடைந்த மனத்தையும்,
மிக்க அறியாமையையும் கொண்ட எனது

இடர் ஆணவ திமிரமே யரி சூரிய ... வருத்தங்களையும்,
ஆணவத்தையும் விலக்கும் ஞான சூரியனே,

திரிலோக தினகரா சிவ காரண ... மூவுலகங்களுக்கும் ஒளி தரும்
சூரியனே, சிவனே, மூலாதாரனே,

பனக பூஷண ஆரண சிவசுதா ... நாகாபரணரும் வேத
முதல்வருமான சிவபிரானின் குமாரனே,

அரி நாரணன் மருகோனே ... ஹரி நாராயணனின் மருகனே,

குமரி சாமளை மாது ... குமரியும், கருமை கலந்த பச்சை நிறத்தாளும்,
அன்னையும்,

உமை அமலி யாமளை பூரணி ... உமா தேவியும், மாசு அற்றவளும்,
பச்சை வண்ணத்தாளும், நிறைந்தவளும்,

குணகலாநிதி நாரணி தருகோவே ... குணச்செல்வியும்,
கலைச்செல்வியுமான நாராயணி பெற்ற தலைவனே,

குருகுகா குமரேசுர சரவணா சகளேசுர ... குருநாதனே, குகனே,
குமரேசனே, சரவணனே, உருவத் திருமேனி கொண்ட ஈசனே,

குறவர் மாமகள் ஆசைகொள் மணியே ... குறவர்தம் தவப் புதல்வி
வள்ளி மீது ஆசை கொண்ட மணியே,

சம் பமர பார ப்ரபா அருண படல ... நன்றாக வண்டுகள்
மொய்க்கும் ஒளிவீசும் சிவந்த கூட்டமான வெட்சி மாலைகளை
அணிந்தவனே,

தாரக மாசுக ... ப்ரணவப் பொருளானவனே, பேரின்பப் பொருளே,

பசுர பாடன ... பாசுரங்களை (தேவாரத்தை) பாடி உலகுக்கு பாடம்
கற்பித்தவனே,

பாளித பகளேச ... செம்பட்டு அணிந்தவனே, மலைகளுக்கு அரசனே,

பசித பாரண ... திருநீற்றில் திருப்தி அடைபவனே,

வாரண துவச ... சேவலைக் கொடியில் வைத்தவனே,

ஏடக மாவயில் பரவு பாணித ... மேன்மை மிகுந்த பெரிய
வேலாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவனே,

பாவல பரயோக ... பாடலில் வல்லவனே, மேலான யோக மூர்த்தியே,

சம பராமத சாதல ... வாதப் போரிடும் புற மதங்களான புத்தம்,
சமணம் - இவற்றின் நசிவுக்குக் காரணனே,

சமயம் ஆறிரு தேவத ... அகச்சமயம் ஆறிலும், புறச்சமயம் ஆறிலும்*
இலங்கும் தெய்வமே,

சமய நாயக மாமயில் முதுவீர ... தக்க சமயத்தில் உதவும் தலைவனே,
அழகிய மயில் ஏறும் பேரறிவு வீரனே,

சகலலோகமும் ஆசறு சகல வேதமுமேதொழு ... சகல
உலகங்களும், குற்றமற்ற எல்லா வேதங்களும் தொழும்

சமர மாபுரி மேவிய பெருமாளே. ... சமரமாபுரி என்ற
திருப்போரூரில்** வீற்றிருக்கும் பெருமாளே.


* அகச் சமயம் ஆறு: வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், பிங்கலம்.
புறச் சமயம் ஆறு: சைவம், வைணவம், சாக்தம், செளரம், காணாபத்யம், கெளமாரம்.


** திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.


இப்பாடல் முழுவதும் துதியாகவே அமைந்து, வேண்டுதல் ஏதும் இல்லாதது
குறிப்பிடத்தக்கது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.711  pg 2.712  pg 2.713  pg 2.714 
 WIKI_urai Song number: 717 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 713 - thimira mAmana (thiruppOrUr)

thimira mAmana mAmada madamai yEnida rANava
     thimiramE ari sUriya ...... thirilOka

dhinakarA siva kAraNa panaga bUshaNa AraNa
     siva suthA ari nAraNan ...... marugOnE

kumari sAmaLai mAdhumai amali yAmaLai pUraNi
     guNa kalAnidhi nAraNi ...... tharu kOvE

guruguhA kumarEsura saravaNA sakaLEsura
     kuRavar mA magaL AsaikoL ...... maNiyEsam

bamara pArapra bAruNa padala thAraka mA suka
     pasura pAtana pALitha ...... pagaLEsa

basitha pAraNa vAraNa dhuvacha Edaga mA ayil
     paravu pANitha pAvala ...... parayOga

samapa rAmadha sAdhala samaya mARiru dhEvatha
     samaya nAyaka mAmayil ...... mudhu veerA

sakala lOkamu mAsaRu sakala vEdhamumE thozhu
     samara mApuri mEviya ...... perumALE.

......... Meaning .........

thimira mAmana mAmada madamai yEn: I have the darkest mind and the greatest ignorance,

ida rANava thimiramE ari sUriya: but You are the Sun of Knowledge that removes my miseries and arrogance.

thirilOka dhinakarA: You are also the Sun giving light to the three worlds (Earth, Heaven and Thrisangu Lokam)!

siva kAraNa: You are SivA! You are the fundamental cause for everything!

panaga bUshaNa AraNa siva suthA: You are the Son of SivA wearing snakes as ornaments and who is also the Head of all VEdAs!

ari nAraNan marugOnE: You are the Nephew of Hari NarAyaNan!

kumari sAmaLai mAdhu: She is a young virgin; She has a blackish green complexion; She is the Mother Divine;

umai amali YAmaLai PUraNi: She is UmA; She is without any blemish; Her colour is emerald green; She is complete in all respects;

guNa kalAnidhi nAraNi tharu kOvE: She is the Treasure of all virtues and arts; and She is NArAyaNi. You are Her son, Oh Lord!

guruguhA kumarEsura saravaNA: Oh Master, Oh GuhA, Oh Lord KumarA, Oh SaravaNA,

sakaLEsura: You are the Lord who manifests in a form for us to worship!

kuRavar mA magaL AsaikoL maNiyE: You are the Gem that loves VaLLi, the great daughter of the KuRavAs!

sam bamara pArapraba aruNa padala: You wear the reddish Vetchi garlands around which the beetles hum!

thAraka mA suka: You are the substance of PraNava ManthrA! You are the object of eternal bliss!

pasura pAtana: You composed the hymns (ThEvAram) and taught their morals to the world!

pALitha pagaLEsa: You wear garments made of red silk! You are the presiding deity of all mountains!

basitha pAraNa: You feel fulfilled by adorning Yourself with the holy ash (VibUthi)!

vAraNa dhuvacha: You hold the Rooster in Your staff!

Edaga mA ayil paravu pANitha: You hold in Your hand the great and powerful Spear!

pAvala parayOga: You are the great poet! You are the Supreme Master of yOgAs!

samapa rAmadha sAdhala: You are responsible for the decline of other warring religions
     (like Buddham, ChamaNam, etc).

samaya mARiru dhEvatha: You are the underlying deity of all the twelve religions
     (6 inner ones and 6 outer)!*

samaya nAyaka: You are the Leader who protects Your devotees at the opportune time!

mAmayil mudhu veerA: You mount Your great Peacock, and You are the most knowledgeable warrior!

sakala lOkamu mAsaRu sakala vEdhamumE thozhu: All the worlds and the unblemished VEdAs worship

samara mApuri mEviya perumALE.: Your abode, SamaramApuri (ThiruppOrUr),** Oh Great One!


* The six inner religions are: Vairavam, VAmam, KaLAmukam, MAviratham, PAsupatham and Pingalam.
The six outer religions are: Saivam, VaishNavam, SAktham, Sauram, GaNApathyam and KaumAram.


** ThiruppOrUr is 16 miles to the northeast of Chengalpattu.


It is significant that this song is entirely in praise of Lord Murugan. The usual request or appeal is omitted.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 713 thimira mAmana - thiruppOrUr


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]