திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 712 சீர் உலாவிய (திருப்போரூர்) Thiruppugazh 712 seerulAviya (thiruppOrUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தானன தானன தான தானன தானன தான தானன தானன ...... தனதான ......... பாடல் ......... சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில் சேய சாயல்க லாமதி ...... முகமானார் தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை சேலு லாவிய கூர்விழி ...... குமிழ்நாசி தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர் சார்பி லேதிரி வேனைநி ...... னருளாலே சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய தாளில் வீழ வினாமிக ...... அருள்வாயே காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை காவல் மாதினொ டாவல்செய் ...... தணைவோனே காண ஆகம வேதபு ராண நூல்பல வோதிய கார ணாகரு ணாகர ...... முருகோனே போரு லாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடு பூப சேவக மாமயில் ...... மிசையோனே போதன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொழு போரி மாநகர் மேவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சீர் உலாவிய ஓதிமம் ஆன மா நடை மா மயில் சேய சாயல் ... பெருமை விளங்கும் அன்னத்துக்கு ஒப்பான அழகிய நடை, சிறந்த மயிலுக்கு ஒப்பான செம்மை வாய்ந்த சாயல், கலா மதி முகம் ஆனார் ... பூரண சந்திரன் போன்ற முகம் இவைகளைக் கொண்ட விலைமாதர்கள் தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை ... தேன் போன்று இனிய அழகிய பேச்சு, மேருமலை போல இளமை விளங்கும் பெரும் மார்பகங்கள், சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி ... சேல் மீன் போன்ற கூரிய கண்கள், குமிழைப் போன்ற மூக்கு, தார் உலாவிய நீள் குழல் வேய் அளாவிய தோளியர் ... மாலை விளங்கும் நீண்ட கூந்தல், மூங்கில் போன்று வழுக்கும் தோள்களை உடையவர்கள், சார்பிலே திரிவேனை நின் அருளாலே ... இவர்களின் இணக்கத்திலேயே திரிகின்ற என்னை, உனது திருவருளால், சாம வேதியர் வானவர் ஓதி நாண் மலர் தூவிய தாளில் வீழ வினா மிக அருள்வாயே ... சாம வேதம் வல்ல மறையோர்களும், தேவர்களும் போற்றி தினந்தோறும் புது மலர்களைத் தூவிய உனது திருவடியில் விழுந்து வணங்கும் விவேகத்தை நிரம்ப அருள் செய்வாயாக. கார் உலாவிய நீள் புன வேடர் மால் வரை மீது உறை காவல் மாதினொடு ஆவல் செய்து அணைவோனே ... மேகம் உலாவும் நீண்ட புனத்தில் உள்ள வேடர்கள் வாழ்ந்த பெரிய வள்ளிமலை மேலே இருந்து, காவல் புரிந்த வள்ளி மீது ஆசை கொண்டு அவளை அணைந்தவனே, காண ஆகம வேத புராண நூல் பல ஓதிய காரணா கருணாகர முருகோனே ... யாவரும் அறிய ஆகமம், வேதம், புராணம் பலவற்றையும் (சம்பந்தராக வந்து தேவாரமாக) ஓதித் துதித்துள்ள மூல காரணனே, கருணாகரனே, முருகனே, போர் உலாவிய சூரனை வாரி சேறு எழ வேல் விடு பூப ... போர் செய்ய வந்த சூரன் மீது வேலாயுதத்தை ஏவி, கடலும் சேறு படும்படிச் செய்த அரசனே, சேவக மா மயில் மிசையோனே ... வீரனே, அழகிய மயிலின் மீது அமர்வோனே, போதன் மாதவன் மாது உமை பாதி ஆதியுமே தொழு ... தாமரை மலரில் வாழ்பவன் (பிரமன்), திருமால், உமாதேவியைப் பாதி பாகத்தில் கொண்ட ஆதியாகிய சிவபிரான் ஆகிய மூவரும் தொழுகின்ற போரி மா நகர் மேவிய பெருமாளே. ... திருப் போரூரில் வீற்றிருக்கும் பெருமாளே. |
* திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.709 pg 2.710 WIKI_urai Song number: 716 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 712 - seer ulAviya (thiruppOrUr) seeru lAviya vOthima mAna mAnadai mAmayil sEya sAyalka lAmathi ...... mukamAnAr thEnu lAviya mAmozhi mEru nEriLa mAmulai sElu lAviya kUrvizhi ...... kumizhnAsi thAru lAviya neeLkuzhal vEya LAviya thOLiyar sArpi lEthiri vEnaini ...... naruLAlE sAma vEthiyar vAnava rOthi nANmalar thUviya thALil veezha vinAmika ...... aruLvAyE kAru lAviya neeLpuna vEdar mAlvarai meethuRai kAval mAthino dAvalsey ...... thaNaivOnE kANa Akama vEthapu rANa nUlpala vOthiya kAra NAkaru NAkara ...... murukOnE pOru lAviya cUranai vAri sERezha vElvidu bUpa sEvaka mAmayil ...... misaiyOnE pOthan mAdhavan mAthumai pAthi yAthiyu mEthozhu pOri mAnakar mEviya ...... perumALE. ......... Meaning ......... seer ulAviya Othimam Ana mA nadai mA mayil sEya sAyal: Their beautiful gait is like that of the famous swan; their grand look is like that of the great peacock; kalA mathi mukam AnAr: these whores have a face like that of the full moon; thEn ulAviya mA mozhi mEru nEr iLa mA mulai: their speech is sweet like honey; their youthful and large bosom is like the mount MEru; sEl ulAviya kUr vizhi kumizh nAsi: their sharp eyes are shaped like the sEl fish; their nose is well-formed; thAr ulAviya neeL kuzhal vEy aLAviya thOLiyar: their long hair is adorned with garlands; their shoulders are smooth like bamboo; sArpilE thirivEnai nin aruLAlE: I am roaming about in the company of such whores; kindly show mercy to me; sAma vEthiyar vAnavar Othi nAN malar thUviya thALil veezha vinA mika aruLvAyE: kindly bless me to have the astuteness to fall at and worship Your hallowed feet at which the brahmins who have mastered the SAma VEdA and the celestials offer fresh flowers everyday! kAr ulAviya neeL puna vEdar mAl varai meethu uRai kAval mAthinodu Aval seythu aNaivOnE: These hunters lived in the vast forests of VaLLimalai where clouds move over the hills; she was guarding the millet-field in that forest; You fell in love with that VaLLi and hugged her! kANa Akama vEtha purANa nUl pala Othiya kAraNA karuNAkara murukOnE: You are the Primordial One who came as ThirugnAna Sambandhar and sang many hymns (ThEvAram) describing the scriptures and mythologies for the benefit of all! You are full of compassion, Oh MurugA! pOr ulAviya cUranai vAri sERu ezha vEl vidu bUpa: You wielded the spear upon the warring demon SUran, causing mud to rise in the sea, Oh mighty King! sEvaka mA mayil misaiyOnE: Oh valorous One, You mount the beautiful peacock! pOthan mAdhavan mAthu umai pAthi AthiyumE thozhu: BrahmA, who is seated on the lotus, Lord VishNu and Lord SivA, in the half of whose body UmAdEvi is concorporate, worship pOri mA nakar mEviya perumALE.: this place called ThiruppOrUr,* which is Your abode, Oh Great One! |
* ThiruppOrUr is 16 miles northeast of Chengalpattu. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |