பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்போசூர்) திருப்புகழ் உரை 153 717. இருள் கொண்டதாம் மனத்தையும் மிக்க அறியாமையையும் கொண்டவனான என்னுடையவருத்தம், ஆணவம், என்னும் இருட்டை (அரி) விலக்கும் சூரியனே! மூவுலகங்களுக்கும் ஒளிதரும் சூரியனே! சிவனே! மூலபுருஷனே (பன்னக பூஷண) . நாகாபரண வேத முதல்வரான சிவகுமாரனே! ஹரி நாராயணரது மருகனே! குமரி, (சாமளை) சாமள நிறம் (கருமை கலந்த பச்சைநிறம்) பொருந்தியவள், மாது, உமை, (அமலி) மலமற்றவள், (யாமளை) சியாமள நிறத்தை (பச்சை நிறத்தை) உடையவள், பூரணி (நிறைந்தவள்), குணச் செல்வி, கலைச் செல்வி, நாரணி பெற்ற தலைவனே! குருமூர்த்தியே! குகனே! குமரேசனே! சரவணனே! (சகளேசுர) உருவத்திருமேனி கொண்ட ஈசனே! குறவர்தம் சிறந்த மகள் - வள்ளி (மீது) ஆசை கொண்ட மணியே! (அல்லது) வள்ளி (உன் மீது) ஆசை கொண்ட மணியே! நனறாக (பமரம்) வண்டுகள் (மொய்க்கும்) பாரமான (ப்ரபா) ஒளி வீசுகின்ற (அருண) சிவந்த (படல) கூட்டமான (வெட்சி) LD/T&TJ)Gl*5Fçyul)NoßT அணிந்தவனே! (தாரக) பிரணவப் பொருளானவனே! (மாசுக) பெரிய சுகப்பொருளே! (பசுரபாடன) வாழ்க அந்தணர் என்னும் திருப்பாசுரம் பாடி (உலகுக்கு நீதி) (பாடன) உபதேசித்தவனே! (பாளித) - (செம்) . பட்டு அணிந்தவனே! (பகளேச) பளகேச (பளகம் - மலை) மலைக்கு அதிபனே குறிஞ்சிவேந்தே! (பசித) (பாரண) திருநீற்றில் திருப்தியுள்ளவனே! (வாரண துவச) கோழிக் கொடியனே! ஏடகமா அயில் இலைத் தன்மையைக் கொண்ட அல்லது மேன்மை கொண்ட சிறந்த வேலாயுதத்தை ஏந்திய (பாணித) கையனே! அல்லது கற்கண்டு போன்றவனே! பாடலில் வல்லவனே! மேலான யோக மூர்த்தியே!