திருப்புகழ் 711 உருக்கு ஆர் வாளி  (திருப்போரூர்)
Thiruppugazh 711 urukkuArvALi  (thiruppOrUr)
Thiruppugazh - 711 urukkuArvALi - thiruppOrUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தா தான தந்த தனத்தா தான தந்த
     தனத்தா தான தந்த ...... தனதான

......... பாடல் .........

உருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள்
     உகப்பார் வால சந்த்ர ...... னுதனூலாம்

உருச்சேர் நீண்ம ருங்குல் பணைத்தோ ளோதி கொண்ட
     லுவப்பா மேல்வி ழுந்து ...... திரிவோர்கள்

அருக்கா மாதர் தங்கள் வரைக்கே யோடி யின்ப
     வலைக்கே பூணு நெஞ்ச ...... னதிபாவி

அசட்டால் மூடு கின்ற மசக்கால் மாயு மிந்த
     அவத்தா லீன மின்றி ...... யருள்வாயே

எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது கங்கை
     யினைச்சூ டாதி நம்பர் ...... புதல்வோனே

இருக்கா லேநி னைந்து துதிப்பார் நாவி னெஞ்சி
     லிருப்பா யானை தங்கு ...... மணிமார்பா

செருக்கா லேமி குந்த கடற்சூர் மாள வென்ற
     திறற்சேர் வேல்கை கொண்ட ...... முருகோனே

தினைக்கோர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க
     திருப்போ ரூர மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உருக்கு ஆர் வாளி கண்கள் பொருப்பு ஆர் வார் தனங்கள் ...
ஆலையிலே உருக்கி எடுத்த அம்பு போன்ற கண்கள், மலை போன்ற,
கச்சு அணிந்த, மார்பகங்கள்,

உகப்பு ஆர் வால சந்த்ர நுதல் நூலாம் உருச் சேர் நீள்
மருங்குல் பணைத் தோள் ஓதி கொண்டல்
... மகிழ்ச்சி நிரம்பும்
இளம் பிறையை ஒத்த நெற்றி, நூல் போன்ற மெல்லிய உரு அமைந்த
நீண்ட இடை, மூங்கில் போன்ற தோள், மேகம் போன்ற கூந்தல்,
(இவைகளைக் கொண்டவர்களும்),

உவப்பா மேல் விழுந்து திரிவோர்கள் அருக்கா மாதர் தங்கள்
வரைக்கே ஓடி
... மகிழ்ச்சியாக தங்கள் மேல் விழுந்து திரிகின்றவர்களை
அசட்டை செய்கின்றவர்களுமான பொது மாதர்களின் இருப்பிடத்துக்கே
ஓடிச்சென்று,

இன்ப வலைக்கே பூணு நெஞ்சன் அதிபாவி ... அந்தக் காம
வலைக்கே பூண்ட மனத்தினனும், மகா பாவியுமாகிய நான்

அசட்டால் மூடுகின்ற மசக்கால் மாயும் இந்த அவத்தால்
ஈனம் இன்றி அருள்வாயே
... எனது அசட்டுத் தனத்தாலும்,
மூடுகின்ற மனக் கலக்கத்தாலும், மழுங்கும் இந்தக் கேட்டினாலும்,
இழிவு அடையாதவாறு அருள் புரிவாயாக.

எருக்கு ஆர் தாளி தும்பை மருச் சேர் போது கங்கையினைச்
சூடு ஆதி நம்பர் புதல்வோனே
... எருக்கு, ஆத்தி, அறுகு, தும்பை
மலர், வாசனை பொருந்திய மலர்கள், கங்கை ஆறு இவைகளைச் சூடும்
முதற் பொருளாகிய சிவபெருமானது மகனே,

இருக்காலே நினைந்து துதிப்பார் நாவில் நெஞ்சில்
இருப்பாய் யானை தங்கும் மணி மார்பா
... ரிக்வேத மந்திரத்தால்
போற்றித் துதி செய்வோருடைய நாவிலும் மனதிலும் இருப்பவனே,
தேவயானை அணையும் அழகிய மார்பனே,

செருக்காலே மிகுந்த கடல் சூர் மாள வென்ற திறல் சேர் வேல்
கை கொண்ட முருகோனே
... ஆணவத்தால் மிக்கு எழுந்த, கடலில்
மாமரமாய் ஒளிந்து நின்ற, சூரன் அழியும்படி வென்ற வெற்றி வாய்ந்த
வேலாயுதத்தைக் கையில் ஏந்திய முருகனே,

தினைக்கு ஓர் காவல் கொண்ட குறத் தேன் மாது பங்க ...
தினைப் புனத்துக்கு ஒரு காவல் கொண்டிருந்த, குறவர் குலத்துக்குத்
தேன் போன்ற மாதாகிய வள்ளிக்கு மணாளனாகப் பக்கத்திலேயே
உள்ளவனே,

திருப் போரூர் அமர்ந்த பெருமாளே. ... திருப்போரூரில்*
வீற்றிருக்கும் பெருமாளே.


* திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.707  pg 2.708  pg 2.709  pg 2.710 
 WIKI_urai Song number: 715 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 711 - urukku Ar vALi (thiruppOrUr)

urukkAr vALi kaNkaL poruppAr vArtha nangaL
     ukappAr vAla chanthra ...... nuthanUlAm

urucchEr neeNma rungul paNaiththO LOthi koNda
     luvappA mElvi zhunthu ...... thirivOrkaL

arukkA mAthar thangaL varaikkE yOdi yinpa
     valaikkE pUNu nenja ...... nathipAvi

asattAl mUdu kinRa masakkAl mAyu mintha
     avaththA leena minRi ...... yaruLvAyE

erukkAr thALi thumpai marucchEr pOthu gangai
     yinaicchU dAthi nampar ...... puthalvOnE

irukkA lEni nainthu thuthippAr nAvi nenji
     liruppA yAnai thangu ...... maNimArpA

serukkA lEmi kuntha kadaRcUr mALa venRa
     thiRaRcEr vElkai koNda ...... murukOnE

thinaikkOr kAval koNda kuRaththEn mAthu panga
     thiruppO rUra marntha ...... perumALE.

......... Meaning .........

urukku Ar vALi kaNkaL poruppu Ar vAr thanangaL: Their eyes are like arrows moulded in a mill; their bosom, covered by blouse, is like mountain;

ukappu Ar vAla santhra nuthal nUlAm uruc chEr neeL marungul paNaith thOL Othi koNdal: their forehead is like the cheerful crescent moon; their long waistline is thin like a thread; their shoulder is like bamboo; and their hair is like the dark cloud;

uvappA mEl vizhunthu thirivOrkaL arukkA mAthar thangaL varaikkE Odi: these whores spurn those men who eagerly fall all over them; running to their places of residence,

inpa valaikkE pUNu nenjan athipAvi: I, the worst sinner, have been ensnared in their passionate net;

asattAl mUdukinRa masakkAl mAyum intha avaththAl eenam inRi aruLvAyE: kindly protect me from the humiliation caused by my stupidity, the delusion overpowering my mind and the disgrace that blunts my thinking!

erukku Ar thALi thumpai maruc chEr pOthu gangaiyinaic cUdu Athi nampar puthalvOnE: You are the son of Lord SivA, the primordial and foremost God, who wears on His matted hair the erukku leaf, Aththi (mountain ebony) leaf, aRugam (cynodon) grass, thumbai (leucas) and other fragrant flowers and the river Gangai!

irukkAlE ninainthu thuthippAr nAvil nenjil iruppAy yAnai thangum maNi mArpA: You reside on the tongue and in the heart of those devotees who praise You through the chanting of the manthrAs from Rigg VEdA; You hug DEvayAnai with Your hallowed chest!

serukkAlE mikuntha kadal cUr mALa venRa thiRal sEr vEl kai koNda murukOnE: He rose up with extreme arrogance and took the disguise of a mango tree, hiding in the sea; You destroyed that demon SUran by wielding the victorious spear held in Your hand, Oh MurugA!

thinaikku Or kAval koNda kuRath thEn mAthu panga: You stand as the consort by the side of VaLLi, the sweet honey-like KuRavA girl, who guarded the millet field, Oh Lord!

thirup pOrUr amarntha perumALE.: You have Your abode in ThiruppOrUr,* Oh Great One!


* ThiruppOrUr is 16 miles northeast of Chengalpattu.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 711 urukku Ar vALi - thiruppOrUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]