திருப்புகழ் 710 அனுத்தே னேர்மொழி  (திருப்போரூர்)
Thiruppugazh 710 anuththEnErmozhi  (thiruppOrUr)
Thiruppugazh - 710 anuththEnErmozhi - thiruppOrUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தா தானன தானா தானன
     தனத்தா தானன தானா தானன
          தனத்தா தானன தானா தானன ...... தனதான

......... பாடல் .........

அனுத்தே னேர்மொழி யாலே மாமய
     லுடைத்தார் போலவு மோர்நா ளானதி
          லடுத்தே தூதுகள் நூறா றானதும் ...... விடுவார்கள்

அழைத்தே வீடினி லேதா னேகுவர்
     நகைத்தே மோடிக ளாவார் காதலொ
          டடுத்தே மாமுலை மீதே மார்புற ...... அணைவார்பின்

குனித்தே பாகிலை யீவார் பாதியில்
     கடிப்பார் வாயிதழ் வாய்நீ ரானது
          குடிப்பார் தேனென நானா லீலைகள் ...... புரிவார்கள்

குறித்தே மாமய லாலே நீள்பொருள்
     பறிப்பா ராசுகள் சூழ்மா பாதக
          குணத்தார் மாதர்கள் மேலா சாவிட ...... அருள்வாயே

வனத்தே வேடுவர் மாதா மோர்மினை
     யெடுத்தே தான்வர வேதான் யாவரும்
          வளைத்தே சூழவு மோர்வா ளால்வெலும் ...... விறல்வீரா

மலர்த்தே னோடையி லோர்மா வானதை
     பிடித்தே நீள்கர வாதா டாழியை
          மனத்தா லேவிய மாமா லானவர் ...... மருகோனே

சினத்தே சூரர்கள் போராய் மாளவு
     மெடுத்தோர் வேல்விடு தீரா தாரணி
          திருத்தோ ளாஇரு பாதா தாமரை ...... முருகோனே

திருத்தேர் சூழ்மதி ளேரார் தூபிக
     ளடுக்கார் மாளிகை யேநீ ளேருள
          திருப்போ ரூருறை தேவா தேவர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அனுத் தேன் நேர் மொழியாலே மா மயல் உடைத்தார்
போலவும் ஓர் நாள் ஆனதில் அடுத்தே தூதுகள் நூறு ஆறு
ஆனதும் விடுவார்கள்
... நல்ல தேனுக்கு ஒப்பான பேச்சுக்களால்
மிக்க மோகம் கொண்டவர்கள் போல நடித்து, ஒரே தினத்தில் மேலுக்கு
மேல் தூதுகளை நூற்றியாறு முறை விடுவார்கள்.

அழைத்தே வீடினிலே தான் ஏகுவர் நகைத்தே
மோடிகளாவார் காதலொடு அடுத்தே மா முலை மீதே மார்பு
உற அணைவார்
... அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டுக்குள்ளே
போவார்கள். சிரிப்புடனே பிணக்கத்தையும் செருக்கையும் காட்டுவர்.
பாசாங்கு அன்புடன் நெருங்கி தங்களுடைய பெரிய மார்பகங்களின்
மேலே மார்பு பொருந்தும்படி அணைவார்கள்.

பின் குனித்தே பாகு இலை ஈவார் பாதியில் கடிப்பார் வாய்
இதழ் வாய் நீரானது குடிப்பார் தேன் என நானா லீலைகள்
புரிவார்கள்
... பின்பு குனிந்து பாக்கு வெற்றிலை கொடுப்பர். அங்ஙனம்
கொடுக்கும்போது பாதியில் வாயிலிருப்பதைக் கடிப்பார்கள். இதழூறலைத்
தேன் போலப் பாவித்துக் குடிப்பர். விதம் விதமான காம லீலைகளைச்
செய்வர்.

குறித்தே மா மயலாலே நீள் பொருள் பறிப்பார் ஆசுகள் சூழ்
மா பாதக குணத்தார் மாதர்கள் மேல் ஆசா விட
அருள்வாயே
... ஒரு காரியத்தைக் குறிப்பாக வைத்துக் கொண்டு மிக்க
மோக விளைவு ஊட்டி பெரும் பொருள் அனைத்தையும் பறிப்பார்கள்.
குற்றங்கள் நிறைந்த மகா பாவ குணத்தை உடையவர்கள். அத்தகைய
விலைமாதர்கள் மீதுள்ள ஆசையை ஒழிக்க அருள் புரிவாயாக.

வனத்தே வேடுவர் மாதாம் ஓர் மினை எடுத்தே தான் வரவே
தான் யாவரும் வளைத்தே சூழவும் ஓர் வாளால் வெலும் விறல்
வீரா
... காட்டில் வேடர் குலத்துப் பெண்ணாகிய மின்னல் போன்ற
வள்ளியை நீ எடுத்துப் போகவே, வேடர் யாவரும் உன்னை வளைத்துச்
சூழ, ஒரு வாள் கொண்டு அவர்களை வென்ற பெருமை வாய்ந்தவனே,

மலர்த் தேன் ஓடையில் ஓர் மா வானதை பிடித்தே நீள் கர
வாதாட ஆழியை மனத்தால் ஏவிய மா மால் ஆனவர்
மருகோனே
... மலர்களின் தேன் சொட்டும் ஓடையில் ஒரு பெரிய
யானையை (கஜேந்திரனை)ப் பிடித்துக் கொண்டு, ஒரு நீண்ட முதலை
போர் செய்ய, சக்கரத்தை (முதலையின் மீது) மனம் கொண்டு செலுத்திய
சிறந்த திருமாலுக்கு மருகனே,

சினத்தே சூரர்கள் போர் ஆய் மாளவும் எடுத்து ஓர் வேல்
விடு தீரா தார் அணி திருத் தோளா இரு பாதா தாமரை
முருகோனே
... கோபித்து சூரர்கள் போர் செய்து இறக்கும்படி ஒரு
வேலை எடுத்துச் செலுத்திய தீரனே, மாலை அணிந்த அழகிய
தோளனே, இரண்டு பாதத் தாமரைகளைக் கொண்ட முருகோனே,

திருத் தேர் சூழ் மதிள் ஏர் ஆர் தூபிகள் அடுக்கார்
மாளிகையே நீள் ஏர் உள திருப்போரூர் உறை தேவா
தேவர்கள் பெருமாளே.
... அழகிய தேரும், சூழ்ந்துள்ள மதிலும், எழில்
நிறைந்த கோபுரங்களும், அடுக்கு மெத்தைகள் கொண்ட மாளிகைகளும்
ஆகிய நீடிய சிறப்புகள் வாய்ந்த திருப் போரூரில்* வீற்றிருக்கும் தேவனே,
தேவர்களின் பெருமாளே.


* திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.705  pg 2.706  pg 2.707  pg 2.708 
 WIKI_urai Song number: 714 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 710 - anuththE nErmozhi (thiruppOrUr)

anuththE nErmozhi yAlE mAmaya
     ludaiththAr pOlavu mOrnA LAnathi
          laduththE thUthukaL nURA RAnathum ...... viduvArkaL

azhaiththE veedini lEthA nEkuvar
     nakaiththE mOdika LAvAr kAthalo
          daduththE mAmulai meethE mArpuRa ...... aNaivArpin

kuniththE pAkilai yeevAr pAthiyil
     kadippAr vAyithazh vAynee rAnathu
          kudippAr thEnena nAnA leelaikaL ...... purivArkaL

kuRiththE mAmaya lAlE neeLporuL
     paRippA rAsukaL cUzhmA pAthaka
          kuNaththAr mAtharkaL mElA sAvida ...... aruLvAyE

vanaththE vEduvar mAthA mOrminai
     yeduththE thAnvara vEthAn yAvarum
          vaLaiththE cUzhavu mOrvA LAlvelum ...... viRalveerA

malarththE nOdaiyi lOrmA vAnathai
     pidiththE neeLkara vAthA dAzhiyai
          manaththA lEviya mAmA lAnavar ...... marukOnE

sinaththE cUrarkaL pOrAy mALavu
     meduththOr vElvidu theerA thAraNi
          thiruththO LAiru pAthA thAmarai ...... murukOnE

thiruththEr cUzhmathi LErAr thUpika
     LadukkAr mALikai yEnee LEruLa
          thiruppO rUruRai thEvA thEvarkaL ...... perumALE.

......... Meaning .........

anuth thEn nEr mozhiyAlE mA mayal udaiththAr pOlavum Or nAL Anathil aduththE thUthukaL nURu ARu Anathum viduvArkaL: With their speech sweet like pure honey, they feign excessive passion and send their emissaries (to their suitors) repeatedly, at least a hundred and six times;

azhaiththE veedinilE thAn Ekuvar nakaiththE mOdikaLAvAr kAthalodu aduththE mA mulai meethE mArpu uRa aNaivAr: they take home their suitors and present smiling and sulky face alternately; they close in on their suitors with feigned love and hug their chest tightly thrusting it upon their big bosom;

pin kuniththE pAku ilai eevAr pAthiyil kadippAr vAy ithazh vAy neerAnathu kudippAr thEn ena nAnA leelaikaL purivArkaL: then they bend towards them and offer the betel-nut and leaves for chewing; while offering it, in the mid-course they take a bite for themselves from the mouth; they imbibe the saliva as if it were honey; they carry on with many an erotic act;

kuRiththE mA mayalAlE neeL poruL paRippAr AsukaL cUzh mA pAthaka kuNaththAr mAtharkaL mEl AsA vida aruLvAyE: steadfast in their objective, they provoke so much passion that ultimately they grab a lot of money, fleecing out their suitors; they are notorious for their sinful activities, full of blemishes; kindly bless me so that I could get rid of my desire for such whores, Oh Lord!

vanaththE vEduvar mAthAm Or minai eduththE thAn varavE thAn yAvarum vaLaiththE cUzhavum Or vALAl velum viRal veerA: When You eloped with lightning-like VaLLi, the damsel of the hunters, in the forest, all the hunters surrounded You; with a single sword in Your hand, You conquered them all, Oh Renowned One!

malarth thEn Odaiyil Or mA vAnathai pidiththE neeL kara vAthAda Azhiyai manaththAl Eviya mA mAl Anavar marukOnE: In a pond filled with flowers oozing honey, a huge elephant (GajEndran) was grabbed by a long croccodile which fought with the elephant; He then wielded His weapon, the disc, with full concentration (killing the crocodile); and You are the nephew of that Lord VishNu!

sinaththE cUrarkaL pOr Ay mALavum eduththu Or vEl vidu theerA thAr aNi thiruth thOLA iru pAthA thAmarai murukOnE: In the war with the demons, You were so enraged that You took the spear in Your hand and wielded it on them killing all, Oh Valorous One! You wear garlands on Your broad shoulders, Oh Lord! Your two hallowed feet are like lotus, Oh MurugA!

thiruth thEr cUzh mathiL Er Ar thUpikaL adukkAr mALikaiyE neeL Er uLa thiruppOrUr uRai thEvA thEvarkaL perumALE.: This town has a beautiful chariot, fortress walls encircling it, fine-looking temple towers, multi-storied mansions and similar long-lasting eminent features; You are seated here in ThiruppOrUr*, Oh Lord! You are the celestials' Lord, Oh Great One!


* ThiruppOrUr is 16 miles northeast of Chengalpattu.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 710 anuththE nErmozhi - thiruppOrUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]