திருப்புகழ் 709 வாசித்த நூல்  (கோடைநகர்)
Thiruppugazh 709 vAsiththanUl  (kOdainagar)
Thiruppugazh - 709 vAsiththanUl - kOdainagarSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத்த தான தந்த தானத்த தான தந்த
     தானத்த தான தந்த ...... தனதான

......... பாடல் .........

வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து
     வாய்மைப்ர காச மென்று ...... நிலையாக

மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற
     வாயுப்பி ராண னொன்று ...... மடைமாறி

யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து
     ரோமத்து வார மெங்கு ...... முயிர்போக

யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு
     லோகத்தில் மாய்வ தென்று ...... மொழியாதோ

வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச
     மேலிட்ட சூர்த டிந்த ...... கதிர்வேலா

வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி
     வேடிச்சி காலி லன்று ...... விழுவோனே

கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்த
     கூளப்பு ராரி தந்த ...... சிறியோனே

கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட
     கோடைக்குள் வாழ வந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வாசித்த நூல் மதங்கள் பேசிக் கொடாத விந்து வாய்மை
ப்ரகாசம் என்று நிலையாக
... கற்றுள்ள நூல்களும் மதங்களும்
விளக்கம் தர முடியாத சிவதத்துவமாகிய உண்மை ஒளியானது என்றும்
நிலைத்திருக்கவேண்டி,

மாசிக் கபால மன்றில் நாசிக்குள் ஓடுகின்ற வாயுப் பிராணன்
ஒன்று மடைமாறி
... மேகம்போல் படர்ந்த மண்டை ஓடாகிய
வெளியிடத்தும், நாசிக்குள்ளும் ஓடுகின்ற பிராணவாயுவாகிய ஒன்றை,
அது செல்லும் வழியை மாற்றி,

யோசித்து அயர் உடம்பை நேசித்து உறாது அலைந்து ...
சுழுமுனையில் கூட்டி*, அதனால் தளர்கின்ற உடம்பின்மீது நேசம்
வைத்து, சிவயோக நிலையில் நிற்காது அலைபாய்ந்து,

ரோமத் துவாரம் எங்கும் உயிர் போக ... மயிர்த் தொளை எங்கும்
உயிர் பாய்ந்து ஓடும்வண்ணம்,

யோகச் சமாதி கொண்டு மோகப் பசாசு மண்டு லோகத்தில்
மாய்வது என்றும் ஒழியாதோ
... கர்மயோகச் சமாதி நிலையைப்
பூண்டு, மோகம் என்கின்ற பேய் நிரம்பியுள்ள இந்த உலகில்
இறந்துபோதல் என்பது என்றைக்கும் நீங்காதோ?

வீசு அப் பயோதி துஞ்ச வேதக் குலாலன் அஞ்ச மேலிட்ட
சூர் தடிந்த கதிர்வேலா
... அலை வீசும் கடல் வலிமை குன்ற, பிரமன்
என்கின்ற குயவன் அஞ்சி நிற்க, மேலே எதிர்த்துவந்த சூரனை வதம்
செய்த ஒளி வேலனே,

வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி வேடிச்சி காலில்
அன்று விழுவோனே
... வீரம் உள்ளன என்ற புகழைப் பெற்றுள்ள
(மன்மதனது) ஐந்து மலர்க் கணைகளால் காம மயக்கம் கொண்டு
வேடர்குல வள்ளியின் பாதங்களில் அன்று விழுந்தவனே,

கூசிப் புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த கூளப் புராரி
தந்த சிறியோனே
... அச்சம் அடைந்து போய் ஒதுங்கும்படி,
மாமனாகிய தட்சனை தயங்காது தலையை அரிந்தவரும், பயனற்ற
திரிபுரத்தைப் பகைத்து எரித்தவருமான சிவபெருமான் தந்த இளையோய்,

கோழிப் பதாகை கொண்ட கோலக் குமார கண்ட ...
கோழிக்கொடியைக் கொண்ட அழகிய குமரனே, வீரனே,

கோடைக்குள் வாழ வந்த பெருமாளே. ... கோடைநகரில்**
வாழ்கின்ற பெருமாளே.


* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:

நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு
'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று
பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள்,
சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம
கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும்.
இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும்
ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த
ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி,
ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை,
சுழுமுனை முதலியன) உள்ளன.

'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.

'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.

'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.

'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும்
ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.

சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால்
மன அமைதி ஏற்படும்.


** கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது.
சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.703  pg 2.704 
 WIKI_urai Song number: 713 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 709 - vAsiththa nUl (kOdainagar)

vAsiththa nUlma thangaL pEsikko dAtha vinthu
     vAymaipra kAsa menRu ...... nilaiyAka

mAsikka pAla manRil nAsikku LOdu kinRa
     vAyuppi rANa nonRu ...... madaimARi

yOsiththa yAru dampai nEsiththu RAtha lainthu
     rOmaththu vAra mengu ...... muyirpOka

yOkaccha mAthi koNdu mOkappa sAsu maNdu
     lOkaththil mAyva thenRu ...... mozhiyAthO

veesappa yOthi thunja vEthakku lAla nanja
     mElitta cUrtha dintha ...... kathirvElA

veerapra thApa panja pANaththi nAlma yangi
     vEdicchi kAli lanRu ...... vizhuvOnE

kUsippu kAvo thunga mAmatRi kAtha rintha
     kULappu rAri thantha ...... siRiyOnE

kOzhippa thAkai koNda kOlakku mAra kaNda
     kOdaikkuL vAzha vantha ...... perumALE.

......... Meaning .........

vAsiththa nUl mathangaL pEsik kodAtha vinthu vAymai prakAsam enRu nilaiyAka: The principle of SivA is of the form of true effulgence that could never be interpreted by texts that one learns nor by religions one observes; in order that the flame remains eternal,

mAsik kapAla manRil nAsikkuL OdukinRa vAyup pirANan onRu madaimARi: one has to change the course of the direction of oxygen that flows into the cosmos of the skull, spread like a cloud, and that runs through the nostrils,

yOsiththu ayar udampai nEsiththu uRAthu alainthu: merging it with the vein of Susumna* and then contemplate on the tiring body with love; rather than remaining in such a posture of Siva-yOgA steadily,

rOmath thuvAram engum uyir pOka: sensing the flow of life through each and every pore of the body,

yOkac chamAthi koNdu mOkap pasAsu maNdu lOkaththil mAyvathu enRum ozhiyAthO: and attaining the state of sublimation in Karma yOgA, one perishes on this earth which is filled up with the devil of passion; will there be no end to such a death?

veesu ap payOthi thunja vEthak kulAlan anja mElitta cUr thadintha kathirvElA: The wavy seas lost their force and Lord BrahmA, the Creator, was terrified when You destroyed the aggressive demon, SUran, with Your bright spear, Oh Lord!

veera prathApa panja pANaththinAl mayangi vEdicchi kAlil anRu vizhuvOnE: Consumed by passion due to the five flowery arrows, famous for their valour, shot by Manmathan (God of Love), You fell in a fit of passion the other day at the feet of VaLLi, the damsel of the hunters, Oh Lord!

kUsip pukA othunga mAman thikAthu arintha kULap purAri thantha siRiyOnE: He put him to shame, casting him into a corner; He severed the head of that Dhakshan, His father-in-law, without any qualms; He became enraged with the inept place, Thiripuram, and burnt it down; He is Lord SivA, and You are His younger child!

kOzhip pathAkai koNda kOlak kumAra kaNda: You have the staff of a rooster, Oh Handsome KumarA, the valorous one!

kOdaikkuL vAzha vantha perumALE.: You have Your abode in KOdainagar**, Oh Great One!


* In this song, several Siva-yOgA principles are explained:

The inhaled air is known as 'pUragam' and the exhaled air is 'rechagam'. The retained air is 'kumbagam'. The oxygen that enters the body climbs up step by step through several centres, known as 'chakrAs' and ultimately reaches 'sahasrAram' or 'bindhuchakram' on the top of the skull. At that point of union, nectar flows from that chakrA and seeps through and soaks the six centres of the body and returns to the basic chakrA, 'mUlAthAram'. Three zones (namely, the sun zone, the moon zone and the fire zone) and ten nerves ('nAdis') govern the six centres; the principal nerves are 'susumna', 'idaikala' and 'pingala'.

idakala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the left nostril;
pingala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the right nostril;
susumna: one of the ten 'nAdis' (nerves), situated between the above two 'nadis', and running through the spinal chord covering all the six centres of 'kundalini'. ('idakala' and 'pingala' are entwined around 'susumna').

If breathing is controlled through a yOgA called 'praNAyAmA', the mind becomes tranquil.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 709 vAsiththa nUl - kOdainagar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]