திருப்புகழ் 701 தோடு உறும் குழை  (மாடம்பாக்கம்)
Thiruppugazh 701 thOduuRumkuzhai  (mAdambAkkam)
Thiruppugazh - 701 thOduuRumkuzhai - mAdambAkkamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தந்தன தானா தானன
     தான தந்தன தானா தானன
          தான தந்தன தானா தானன ...... தனதான

......... பாடல் .........

தோடு றுங்குழை யாலே கோல்வளை
     சூடு செங்கைக ளாலே யாழ்தரு
          கீத மென்குர லாலே தூமணி ...... நகையாலே

தூம மென்குழ லாலே யூறிய
     தேனி லங்கித ழாலே யாலவி
          லோச னங்களி னாலே சோபித ...... அழகாலே

பாட கம்புனை தாளா லேமிக
     வீசு தண்பனி நீரா லேவளர்
          பார கொங்கைக ளாலே கோலிய ...... விலைமாதர்

பாவ கங்களி னாலே யான்மயல்
     மூழ்கி நின்றய ராதே நூபுர
          பாத பங்கய மீதே யாள்வது ...... கருதாயோ

நாட ருஞ்சுடர் தானா வோதுசி
     வாக மங்களி னானா பேதவ
          நாத தந்த்ரக லாமா போதக ...... வடிவாகி

நால்வி தந்தரு வேதா வேதமு
     நாடி நின்றதொர் மாயா தீதம
          னோல யந்தரு நாதா ஆறிரு ...... புயவேளே

வாட யங்கியவேலா லேபொரு
     சூர்த டிந்தருள் வீரா மாமயி
          லேறு கந்தவி நோதா கூறென ...... அரனார்முன்

வாச கம்பிற வாதோர் ஞானசு
     கோத யம்புகல் வாசா தேசிக
          மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தோடு உறும் குழையாலே கோல் வளை சூடு செம்
கைகளாலே
... தோடு என்னும் ஆபரணமும் குண்டலங்களும் தரித்த
செவிகளினாலும், திரட்சியாக உள்ள வளையல்களைத் தரித்த சிவந்த
கைகளாலும்,

யாழ் தரு கீத மென் குரலாலே தூ மணி நகையாலே ... யாழைப்
போல இனிய இசை கொண்ட மென்மையான குரலாலும், பரிசுத்தமான
ஒளி வீசும் பற்களாலும்,

தூமம் மென் குழலாலே ஊறிய தேன் இலங்கு இதழாலே ஆல
விலோசனங்களினாலே சோபித அழகாலே
... (அகில்) புகை
ஊட்டிய மெல்லிய கூந்தலாலும், தேன் ஊறியது போல் விளங்கும்
வாயிதழாலும், ஆலகால விஷத்தைப் போன்ற கண்களாலும், அவற்றின்
ஒளி வீசும் அழகாலும்,

பாடகம் புனை தாளாலே மிக வீசு தண் பனி நீராலே வளர்
பார கொங்கைகளாலே கோலிய விலைமாதர்
... பாடகம் என்னும்
கொலுசைப் புனைந்த கால்களாலும், மிகவும் மணக்கும் பன்னீர் பூசப்பட்டு
வளர்ந்துள்ள பாரமான மார்பகங்களாலும் (ஆடவர்களை) வளைக்கும்
வேசிகளுடைய

பாவகங்களினாலே யான் மயல் மூழ்கி நின்று அயராதே ...
வஞ்சக நடிப்பால் நான் காம மயக்கத்தில் முழுகி நின்று சோர்வு
அடையாமல்,

நூபுர பாத பங்கயம் மீதே ஆள்வது கருதாயோ ... (உனது)
சிலம்பு அணிந்த திருவடித் தாமரையின் மேல் என்னை ஏற்றுக்கொள்வதை
நீ நினைக்க மாட்டாயோ?

நாட அரும் சுடர் தானா ஓது சிவ ஆகமங்களின் நானா பேத
அநாத (னே)
... நாடிக் காண்பதற்கு அரிதான ஜோதிப் பொருளான
சிவபெருமானாக ஓதுகின்ற சிவ ஆகமங்களில், பலவிதமான பேதங்களால்
போற்றப்படும், தனக்கு மேல் தலைவன் இல்லாத பரம் பொருளே,

தந்த்ர கலா மா போதக வடிவாகி நால் விதம் தரு வேதா ...
மந்திர தந்திர சாஸ்திரங்களில் கூறப்படும் சிறந்த ஞான வடிவினனாகி,
ருக், யஜூர், சாமம், அதர்வணம் என்னும் நால் வகையான வேதங்களையும்
ஓதித் தரும் பிரமனும்,

வேதமும் நாடி நின்றது ஒர் மாயா அதீத மனோலயம் தரு
நாதா ஆறிரு புயவேளே
... வேதங்களும் நாடி நின்றதான, ஒப்பற்ற
மாயைகளைக் கடந்து நிற்கும் மன ஒடுக்கத்தை (சாந்தியைத்) தரும்
நாதனே, பன்னிரு திருப்புயங்களை உடையவனே,

வாள் தயங்கிய வேலாலே பொரு சூர் தடிந்து அருள் வீரா மா
மயில் ஏறு கந்த விநோதா கூறு என
... ஒளி பொருந்திய வேலைக்
கொண்டு சண்டை செய்த சூரனை அழித்தருளிய வீரனே, சிறந்த மயிலை
வாகனமாகக் கொண்ட கந்தனே, விநோதனே, நீ சொல்லுக என்று கேட்க

அரனார் முன் வாசகம் பிறவாதோர் ஞான சுக உதயம் புகல்
வாசா தேசிக
... சிவபெருமானது முன்னிலையில் வாக்கால்
தோற்றுவிக்க முடியாததான ஒப்பற்ற ஞான சுகத்தைப் பிறப்பிக்கும்
பிரணவப் பொருளை உபதேசம் செய்த குரு மூர்த்தியே,

மாடையம் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே. ... மாடம்பாக்கம்*
என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருஞ்செல்வமே, தேவர்களின்
பெருமாளே.


* மாடம்பாக்கம் தாம்பரத்தின் அருகில் வண்டலூருக்கு 7 மைல் கிழக்கில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.683  pg 2.684  pg 2.685  pg 2.686 
 WIKI_urai Song number: 705 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 701 - thOdu uRum kuzhai (mAdambAkkam)

thOdu Rungkuzhai yAlE kOlvaLai
     cUdu sengaika LAlE yAzhtharu
          keetha menkura lAlE thUmaNi ...... nakaiyAlE

thUma menkuzha lAlE yURiya
     thEni langitha zhAlE yAlavi
          lOsa nangaLi nAlE sOpitha ...... azhakAlE

pAda kampunai thALA lEmika
     veesu thaNpani neerA lEvaLar
          pAra kongaika LAlE kOliya ...... vilaimAthar

pAva kangaLi nAlE yAnmayal
     mUzhki ninRaya rAthE nUpura
          pAtha pangaya meethE yALvathu ...... karuthAyO

nAda rumchudar thAnA vOthusi
     vAka mangaLi nAnA pEthava
          nAtha thanthraka lAmA pOthaka ...... vadivAki

nAlvi thantharu vEthA vEthamu
     nAdi ninRathor mAyA theethama
          nOla yantharu nAthA ARiru ...... puyavELE

vAda yangiyavElA lEporu
     cUrtha dintharuL veerA mAmayi
          lERu kanthavi nOthA kURena ...... aranArmun

vAsa kampiRa vAthOr njAnasu
     kOtha yampukal vAsA thEsika
          mAdai yampathi vAzhvE thEvarkaL ...... perumALE.

......... Meaning .........

thOdu uRum kuzhaiyAlE kOl vaLai cUdu sem kaikaLAlE: With their ears wearing the stud called thOdu and swinging ear-studs, with their reddish arms wearing robust bangles,

yAzh tharu keetha men kuralAlE thU maNi nakaiyAlE: with their sweet and soft voice that sounds like the music from yAzh (a string instrument), with their pure and sparkling teeth,

thUmam men kuzhalAlE URiya thEn ilangu ithazhAlE Ala vilOsanangaLinAlE sOpitha azhakAlE: with their silk-soft hair dried in the smoke of fragrant incence, with their moist lips tasting like honey-drip, with their eyes that look like AlakAla poison, with the radiance from those eyes,

pAdakam punai thALAlE mika veesu thaN pani neerAlE vaLar pAra kongaikaLAlE kOliya vilai mAthar: with their feet adorned by the anklet, pAdakam, and with their huge bosom spruced up by smearing it with aromatic rose water, these whores hook and pull (men) towards them;

pAvakangaLinAlE yAn mayal mUzhki ninRu ayarAthE: lest I am enticed by their treacherous acts and drown in delusive passion,

nUpura pAtha pangayam meethE ALvathu karuthAyO: will You not kindly consider taking me on Your lotus feet adorned with anklets?

nAda arum sudar thAnA Othu siva AkamangkaLin nAnA pEtha anAtha(nE): In the treatises of SivA AgamAs which describe Lord SivA as an effulgence beyond comprehension of any one who seeks to see it, You are praised by several diverse principles as the Supreme Lord who does not have any one superior to Him!

thanthra kalA mA pOthaka vadivAki nAl vitham tharu vEthA: He is of the form of Pure Knowledge as described in scriptures on meditation (ManthrA) and mysticism; He is Lord BrahmA who preaches the four VEdAs, namely, Rigg, Yajur, SAmam and AtharvaNam;

vEthamum nAdi ninRathu or mAyA atheetha manOlayam tharu nAthA ARiru puyavELE: He, along with the VEdAs, seeks You as the Lord who transcends beyond the reach of the matchless delusion and One who gives tranquility! You are the Lord with twelve hallowed shoulders!

vAL thayangiya vElAlE poru cUr thadinthu aruL veerA mA mayil ERu kantha vinOthA kURu ena: "Oh valorous One, You destroyed the battling demon SUran with Your bright spear! You mount the great peacock as Your vehicle, Oh KandhA! You are full of miracles! Please teach me!" -

aranAr mun vAsakam piRavAthOr njAna suka uthayam pukal vAsA thEsika: so said Lord SivA to whom You preached the meaning of PraNava ManthrA that generates a bliss of knowledge that cannot be created through description by words, Oh Great Master!

mAdaiyam pathi vAzhvE thEvarkaL perumALE.: You have an abode in MAdambAkkam*, Oh Great Treasure; and You are the Lord of the celestials, Oh Great One!


* MAdambAkkam is near Tambaram, 7 miles east of VaNdalUr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 701 thOdu uRum kuzhai - mAdambAkkam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]