திருப்புகழ் 698 குசமாகி யாருமலை  (திருவான்மியூர்)
Thiruppugazh 698 kusamAgiyArumalai  (thiruvAnmiyUr)
Thiruppugazh - 698 kusamAgiyArumalai - thiruvAnmiyUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதான தானதன தனதான தானதன
     தனதான தானதன ...... தனதான

......... பாடல் .........

குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை
     குடிலான ஆல்வயிறு ...... குழையூடே

குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்
     குழல்கார தானகுண ...... மிலிமாதர்

புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி
     புலையேனு லாவிமிகு ...... புணர்வாகிப்

புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை
     பொலிவான பாதமல ...... ரருள்வாயே

நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு
     நிகழ்போத மானபர ...... முருகோனே

நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு
     நிபுணாநி சாசரர்கள் ...... குலகாலா

திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி
     சிவநாத ராலமயில் ...... அமுதேசர்

திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்
     திருவான்மி யூர்மருவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குசமாகி யாருமலை ... மார்பு எனப்பட்ட நிறைந்துள்ள மலை,

மரைமாநு ணூலினிடை ... தாமரையின் அழகிய நுண்ணிய நூல்
போன்ற இடை,

குடிலான ஆல்வயிறு ... கருவுக்கு இருப்பிடமான ஆலிலை போன்ற
வயிறு,

குழையூடே குறிபோகு மீனவிழி ... காதின் குண்டலங்களுக்கு
குறி போகின்ற மீன் போன்ற கண்கள்,

மதிமாமு காருமலர் ... சந்திரனைப் போன்ற அழகிய முகமாகிய
நிறைந்த மலர்,

குழல்கார் அதானகுணமிலிமாதர் ... மேகத்தைப் போன்ற கூந்தல்
என்ற நற்குணமில்லாத பொது மகளிரின்

புசவாசையால்மனது உனைநாடிடாதபடி ... தோள்களை
அணைக்கும் ஆசையால் என் மனம் உன்னை நாடாதபடி,

புலையேன் உலாவிமிகு புணர்வாகி ... இழிந்தவனாகிய நான்
இங்கும் அங்கும் உலவித் திரிந்து, தீய வழியிலே மிகுந்த சேர்க்கையாகி,

புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை ... புகழ் பெற்ற
இப்பூமியிலே அழிவுற்று முடிந்துபோகாதபடி

பொலிவான பாதமலரருள்வாயே ... உன் பிரகாசமான பாதத்
தாமரையைத் தந்தருள்வாயாக.

நிசநாரணாதி திரு மருகா ... மெய்யான நாராயணமூர்த்தியின்
அழகிய மருகனே,

உலாசமிகு நிகழ்போதமானபர முருகோனே ... உள்ளக் களிப்பை
மிகுத்து உண்டாக்கும் ஞான சொரூபமான மேலான முருகனே,

நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு நிபுணா ... பொக்கிஷம்
போன்ற சிறந்த ஞான மந்திரத்தை, சிவபிரானுடைய இரண்டு
செவிகளிலும் உபதேசித்து அருளிய சாமர்த்தியசாலியே,

நிசாசரர்கள் குலகாலா ... அசுரர்களின் குலத்துக்கே யமனாக
இருந்தவனே,

திசைமாமுக ஆழியரி மகவான் முனோர்கள் பணி ... நான்கு
திசைகளிலும் முகத்தைக் காட்டும் பிரமன், சுதர் னம் என்ற
சக்ரதாரியான திருமால், இந்திரன் முதலான தேவர்கள் பணிகின்ற

சிவநாதர் ஆலமயில் அமுதேசர் திகழ்பால ... சிவபெருமான்,
விஷத்தை உண்ட அமுதைப் போன்ற ஈசருடைய விளக்கம் வாய்ந்த
குழந்தையே,

மாகமுற மணிமாளி மாடமுயர் ... ஆகாயத்தை அளாவும்படியான
அழகிய மாளிகை மாடங்கள் உயர்ந்துள்ள

திருவான்மியூர்மருவு பெருமாளே. ... திருவான்மியூரில்*
வீற்றிருக்கும் பெருமாளே.


* திருவான்மியூர் சென்னையின் ஒரு பகுதி. மயிலாப்பூருக்குத் தெற்கே
3 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.677  pg 2.678 
 WIKI_urai Song number: 702 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 698 - kusamAki (thiruvAnmiyUr)

kusamAki yArumalai maraimAnu NUlinidai
     kudilAna AlvayiRu ...... kuzhaiyUdE

kuRipOku meenavizhi mathimAmu kArumalar
     kuzhalkAra thAnakuNa ...... milimAthar

pujavAsai yAlmanathu unainAdi dAthapadi
     pulaiyEnu lAvimiku ...... puNarvAkip

pukazhAna pUmimisai madivAyi RAthavakai
     polivAna pAthamala ...... raruLvAyE

nijanAra NAthithiru marukAvu lAsamiku
     nikazhpOtha mAnapara ...... murukOnE

nithinjAna pOthamara nirukAthi lEyuthavu
     nipuNAni sAsararkaL ...... kulakAlA

thisaimAmu kAzhiyari makavAnmu nOrkaLpaNi
     sivanAtha rAlamayil ...... amuthEsar

thikazhpAla mAkamuRa maNimALi mAdamuyar
     thiruvAnmi yUrmaruvu ...... perumALE.

......... Meaning .........

kusamAki yArumalai: The bosoms are large like mountain;

maraimAnu NUlinidai: the waistline is slender like the lotus fibre;

kudilAna AlvayiRu: the abdomen is like the banyan leaf;

kuzhaiyUdE kuRipOku meenavizhi: the fish-like eyes are wide aiming to reach the earstuds;

mathimAmu kArumalar: the flower-like face resembles the moon;

kuzhalkAra thAnakuNa milimAthar: and the hair is like the dark cloud. These are the attributes of the characterless whores.

pujavAsai yAlmanathu unai nAdidAthapadi: Craving to hug their shoulders, and neglecting to seek Your blessings,

pulaiyEnu lAvimiku puNarvAkip: I, the basest one, have been wandering aimlessly, indulging in excessive carnal pleasure.

pukazhAna pUmimisai madivAyi RAthavakai: I do not want to deteriorate like this and die in this famous world;

polivAna pAthamalar aruLvAyE: for that, kindly bless me with Your bright lotus feet!

nijanAra NAthithiru marukA: You are the handsome nephew of the real Lord, NArAyaNA!

vu lAsamiku nikazhpOtha mAnapara murukOnE: You are the supreme Lord, Oh MurugA, in the form of pure and blissful knowledge!

nithinjAna pOtham aran irukAthi lEyuthavu nipuNA: The treasure that is the consciousness of true knowledge was expertly imparted by You into both the ears of Lord SivA!

nisAsararkaL kulakAlA: You are the God of Death for the entire dynasty of demons!

thisaimAmu kAzhiyari makavAnmu nOrkaLpaNi: BrahmA, with four faces pointing to the four directions, Vishnu with the wheel Sudharsana as His weapon, IndrA and other celestials worship

sivanAtha rAlamayil amuthEsar thikazhpAla: the Great nectar-like Lord SivA who devoured poison; You are that SivA's renowned child!

mAkamuRa maNimALi mAdamuyar thiruvAnmi yUr maruvu perumALE.: The lovely palaces of this place, ThiruvAnmiyUr*, are so high that they stretch up to the skies, and it is Your abode, Oh Great One!


* ThiruvAnmiyUr is a part of Chennai City, 3 miles south of Mylapore.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 698 kusamAgi yArumalai - thiruvAnmiyUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]