திருப்புகழ் 699 ஆதவித பாரமுலை  (கோசைநகர்)
Thiruppugazh 699 AdhavidhabAramulai  (kOsainagar)
Thiruppugazh - 699 AdhavidhabAramulai - kOsainagarSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தனதான

......... பாடல் .........

ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற
     தாலிலையெ னாமதன ...... கலைலீலை

யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதி
     லாசைமிக வாயடிய ...... னலையாமல்

நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமு
     னானபத மாமலரை ...... நலமாக

நானநுதி னாதினமு மேநினைய வேகிருபை
     நாடியரு ளேயருள ...... வருவாயே

சீதமதி யாடரவு வேரறுகு மாஇறகு
     சீதசல மாசடில ...... பரமேசர்

சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவ
     சீறிவரு மாவசுரர் ...... குலகாலா

கோதைகுற மாதுகுண தேவமட மாதுமிரு
     பாலுமுற வீறிவரு ...... குமரேசா

கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு
     வேசமுரு காவமரர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆதம் இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல்
இலை எனா
... அன்பும் இன்பமும் தருவதான கனத்த மார்பகங்கள்,
விலைமாதர்களுடைய இடுப்பு நூலைப் போன்றது, வயிறு ஆலின்
இலையைப் போன்றது, என்று உவமை கூறி,

மதன கலை லீலை யாவும் விளைவான குழியான திரி
கோணம் அதில் ஆசை மிகவாய் அடியன் அலையாமல்
...
மன்மதனுடைய காம சாஸ்திர விளையாடல்கள் எல்லாம் உண்டாகும்
குழியான முக்கோணமான பெண்குறியில் மிக்க ஆசை கொண்டு
அடியேன் அலைச்சல் உறாமல்,

நாத சத கோடி மறை ஓலம் இடு நூபுரம் மு(ன்)னான பத மா
மலரை நலமாக நான் அநுதினா தினமுமே நினையவே
கிருபை நாடி அருளே அருள வருவாயே
... நாதனே, நூறு கோடி
ஆகம மந்திர உபதேசப் பொருள்களை சத்தத்தால் தெரிவிக்கும்
சிலம்புகள் முன்னதாகவே விளங்கும் பாதத் தாமரைத் திருவடிகளை
நன்மை பெறுமாறு, நான் நாள்தோறும் நினைக்கும்படி, உனது
கருணையை நாடிவரும்படி, உனது திருவருளை அருள் புரிய வருவாயாக.

சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில
பரமேசர் சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி
வரு மா அசுரர் குலகாலா
... குளிர்ச்சியான நிலா, ஆடும் பாம்பு,
அழகிய அறுகம் புல், கொக்கின் இறகு, குளிர்ந்த கங்கை நீர்
(இவைகளைக் கொண்ட) அழகிய சடையை உடைய சிவபெருமான்
உலகங்கள் செம்மை பெறவே தந்த கூரிய வேலனே, சிவனே, கோபித்து
வரும் பெரிய அசுரர்கள் குலத்துக்கு யமனே,

கோதை குறமாது குண தேவ மட மாதும் இரு பாலும் உற
வீறி வரு குமரேசா
... நல்லவளான குறப் பெண் வள்ளி, நற்குணம்
உள்ள தேவநாட்டு அழகிய மாது (தேவயானை) இரண்டு பக்கமும்
பொருந்த விளக்கத்துடன் வரும் குமரேசனே,

கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா
அமரர் பெருமாளே.
... கோசை நகர்* எனப்படும் கோயம்பேட்டில்
வீற்றிருக்கும் ஈசனே, அடியார்களுக்கு அன்பனே, சர்வேசனே,
முருகனே, தேவர்களின் பெருமாளே.


* கோயம்பேடு சென்னை நகரின் ஒரு பகுதி.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.679  pg 2.680 
 WIKI_urai Song number: 703 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 699 - Adhavidha bAramulai (kOsainagar)

Athavitha pAramulai mAtharidai nUlvayiRa
     thAlilaiye nAmathana ...... kalaileelai

yAvumviLai vAnakuzhi yAnathiri kONamathi
     lAsaimika vAyadiya ...... nalaiyAmal

nAthasatha kOdimaRai yOlamidu nUpuramu
     nAnapatha mAmalarai ...... nalamAka

nAnanuthi nAthinamu mEninaiya vEkirupai
     nAdiyaru LEyaruLa ...... varuvAyE

seethamathi yAdaravu vEraRuku mAiRaku
     seethasala mAsadila ...... paramEsar

seermaipeRa vEyuthavu kUrmaitharu vElasiva
     seeRivaru mAvasurar ...... kulakAlA

kOthaikuRa mAthukuNa thEvamada mAthumiru
     pAlumuRa veeRivaru ...... kumarEsA

kOsainakar vAzhavaru meesadiyar nEsasaru
     vEsamuru kAvamarar ...... perumALE.

......... Meaning .........

Atham itha pAra mulai mAthar idai nUl vayiRu athu Al ilai enA: Describing the huge breasts of the whores as those offering love and bliss, comparing their waist to the slender thread and their belly to the banyan leaf,

mathana kalai leelai yAvum viLaivAna kuzhiyAna thiri kONam athil Asai mikavAy adiyan alaiyAmal: I have been terribly obsessed with the pit of their genital of a triangular shape, considering it as the arena of all the sports defined in the text on eroticism by Manmathan (God of Love); without making me thus roam about desperately,

nAtha satha kOdi maRai Olam idu nUpuram mu(n)nAna patha mA malarai nalamAka nAn anuthinA thinamumE ninaiyavE kirupai nAdi aruLE aruLa varuvAyE : Oh Lord, kindly shower Your gracious blessings on me so that I could derive benefit by meditating every day on Your lotus feet that wear the prominent anklets whose jingling sound conveys all the essence of hundreds of millions of manthrAs contained in the scriptures and make me come to You seeking Your compassion!

seetha mathi Adu aravu Er aRuku mA iRaku seetha salam mA sadila paramEsar seermai peRavE uthavu kUrmai tharu vEla siva seeRi varu mA asurar kulakAlA: On His matted and beautiful hair, He wears the cool crescent moon, the dancing serpent, the pretty grass of aRukam, the feather of a crane and the chilly water of the river Gangai; for the benefit of this world, that Lord SivA delivered You as His child, Oh Lord with the sharp spear! You are none other than Lord SivA! You are the God of Death to all the hostile and confronting demons!

kOthai kuRamAthu kuNa thEva mada mAthum iru pAlum uRa veeRi varu kumarEsA: You come out elegantly with VaLLi, the chaste damsel of the KuRavAs, and DEvayAnai, the virtuous and beautiful maid of the celestial land, seated on Your either side, Oh Lord KumarA,

kOsai nakar vAzha varum eesa adiyar nEsa saruvEsa murukA amarar perumALE.: Oh Lord, You are seated in this town called KOsainagar*; You are the beloved of Your devotees; You are the God to all, Oh MurugA! You are worshipped by the celestials, Oh Great One!


* KOsainagar is now known as KOyambEdu which is a part of city of Chennai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 699 Adhavidha bAramulai - kOsainagar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]