திருப்புகழ் 697 வரும் மயில் ஒத்தவர்  (திருமயிலை)
Thiruppugazh 697 varumayiloththavar  (thirumayilai)
Thiruppugazh - 697 varumayiloththavar - thirumayilaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தத்தன தானா தானன
     தனதன தத்தன தானா தானன
          தனதன தத்தன தானா தானன ...... தனதான

......... பாடல் .........

வருமயி லொத்தவ ரீவார் மாமுக
     மதியென வைத்தவர் தாவா காமிகள்
          வரிசையின் முற்றிய வாகா ராமியல் ...... மடமாதர்

மயலினி லுற்றவர் மோகா வாரிதி
     யதனிடை புக்கவ ராளாய் நீணிதி
          தருவிய லுத்தர்கள் மாடா மாமதி ...... மிகமூழ்கி

தருபர வுத்தம வேளே சீருறை
     அறுமுக நற்றவ லீலா கூருடை
          அயிலுறை கைத்தல சீலா பூரண ...... பரயோக

சரவண வெற்றிவி நோதா மாமணி
     தருமர வைக்கடி நீதா வாமணி
          மயிலுறை வித்தவு னாதா ராமணி ...... பெறுவேனோ

திரிரிரி தித்திதி தீதீ தீதிதி
     தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
          திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி ...... தொதிதீதோ

தெனவரி மத்தள மீதார் தேமுழ
     திடுவென மிக்கியல் வேதா வேதொழு
          திருநட மிட்டவர் காதே மூடிய ...... குருபோதம்

உரை செயு முத்தம வீரா நாரணி
     உமையவ ளுத்தர பூர்வா காரணி
          உறுஜக ரக்ஷணி நீரா வாரணி ...... தருசேயே

உயர்வர முற்றிய கோவே யாரண
     மறைமுடி வித்தக தேவே காரண
          ஒருமயி லைப்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வரும் மயில் ஒத்தவர் ஈவார் மா முக(ம்) மதி என வைத்தவர்
தாவா(த) காமிகள்
... அசைந்து வரும் மயில் போன்றவர்கள், பொருள்
கொடுப்பவர்கள் வந்தால் (அவர் முன்பு தமது) அழகிய முகத்தை பூரண
நிலவைப் போல வைத்துக் கொள்பவர்கள், எதிர் பாய்தல் இல்லாத
(உண்மையில் மோகம் கொள்ளாத) ஆசைக்காரிகள்,

வரிசையின் முற்றிய வாகு ஆர் ஆம் இயல் மடமாதர் ...
ஒருவிதமான ஒழுங்கைக் கைப்பிடிக்கும், அழகு நிறைந்த, தகுதி வாய்ந்த
மென்மையான (விலை) மாதர்கள்,

மயலினில் உற்று அவர் மோகா வாரிதி அதன் இடை புக்கு
அவர் ஆளாய் நீள் நிதி தரு இயல் உலுத்தர்கள்
... காம
வசப்பட்டு அவர்களுடைய மோகம் என்னும் கடலில் புகுந்து
அவர்களுடைய ஆளுகைக்கு உட்பட்டு (என்னுடைய) பெரிய
சொத்துக்களை எல்லாம் தத்தம் செய்தும், மரம் போன்று அருட் குணம்
இல்லாத லோபிகளாகிய விலைமாதர்கள்,

மாடா மா மதி மிக மூழ்கி ... இவ் வேசையர் மாட்டு ஈடுபட்டு, நல்ல
அறிவு அறவே அற்று மூழ்கிக் கிடப்பவன் நான்.

தரு பர உத்தம வேளே சீர் உறை அறு முக நல் தவ லீலா
கூர் உடை அயில் உறை கைத் தல சீலா பூரண
... திருவருளைத்
தரும் மேலான உத்தமனே, பெருமை வாய்ந்த ஆறு முகனே, நல்ல தவ
விளையாடல்களை புரிபவனே, கூர்மை கொண்ட வேலைப் பிடித்த
கரத்தனே, தரும மூர்த்தியே, பரிபூரணனே,

பர யோக சரவண வெற்றி விநோதா மா மணி தரும் அரவைக்
கடி நீதா ஆம் அணி மயில் உறை வித்த உன் ஆதார(ம்)
ஆ(ம்) அணி பெறுவேனோ
... மேலான யோக மூர்த்தியே, சரவண
பவனே, வெற்றி விநோதனே, உயர்ந்த மணியைத் தருகின்ற பாம்பை
அடக்குகின்ற, நீதியாயுள்ள, அழகிய மயிலின் மேல் வீற்றிருக்கும் ஞான
மூர்த்தியே, உனது பற்றுக் கோடு என்னும் பெருமையைப் பெறுவேனோ?

திரிரிரி தித்திதி தீதீ தீதிதி
தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ என
...
(இவ்வாறான ஒலிகளுடன்)

அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என ... திருமால் மத்தளம்
மீது நிரம்ப வாசிக்கும் இடத்தில் முழவு வாத்தியத்தை திடு திடு என்று
வாசிக்க,

மிக்கு இயல் வேதாவே தொழு திரு நடம் இட்டவர் காதே
மூடிய குரு போதம் உரை செய்யும் உத்தம வீரா
... மிகுந்த தகுதி
வாய்ந்த பிரமனும் (தாளம் போட்டுத்) தொழுகின்ற போது, திரு நடனம்
செய்கின்ற சிவபெருமான் தமது செவிகளை (உபதேசம் கேட்க) பொத்தச்
செய்த ஞானகுருவாக இருந்து ஞானப் பொருளை உபதேசித்த
மேலானவனே, வீரனே,

நாரணி உமையவள் உத்தர பூர்வ ஆகார அணி உறு ஜக
ரக்ஷணி நீர ஆவாரணி தரு சேயே
... நாராயணி, உமையவள்,
வடக்கு கிழக்கு முதலிய திசைகளின் ஆதி தேவதை, உலகை மிகவும்
காப்பவள், மறைக்கின்ற (திரோதான) சக்திக் குணம் உடையவள் ஈன்ற
குழந்தையே,

உயர் வரம் உற்றிய கோவே ஆரண மறை முடி வித்தக தேவே
காரண
... உயர்ந்த வரங்களைத் தரும் தலைவனே, வேத
உபநிஷதங்களின் முடிவில் விளங்கும் ஞானியே, மூல காரணனே,

ஒரு மயிலைப் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே. ... ஒப்பற்ற
மயிலாப்பூரில்* வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே.


* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின்
மையத்தில் இருக்கிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.673  pg 2.674  pg 2.675  pg 2.676 
 WIKI_urai Song number: 701 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 697 - varumayil oththavar (thirumayilai)

varumayi loththava reevAr mAmuka
     mathiyena vaiththavar thAvA kAmikaL
          varisaiyin mutRiya vAkA rAmiyal ...... madamAthar

mayalini lutRavr mOkA vArithi
     yathanidai pukkava rALAy neeNithi
          tharuviya luththrkaL mAdA mAmathi ...... mikamUzhki

tharupara vuththama vELE seeruRai
     aRumuka natRava leelA kUrudai
          ayiluRai kaiththala seelA pUraNa ...... parayOka

saravaNa vetRivi nOthA mAmaNi
     tharumara vaikkadi neethA vAmaNi
          mayiluRai viththavu nAthA rAmaNi ...... peRuvEnO

thiririri thiththithi theethee theethithi
     thokuthoku thoththoku thOthO thOthiku
          thimithimi thiththimi jEjE theethimi ...... thothitheethO

thenavari maththaLa meethAr thEmuzha
     thiduvena mikkiyal vEthA vEthozhu
          thirunada mittavar kAthE mUdiya ...... gurupOtham

uraiseyu muththama veerA nAraNi
     umaiyava Luththara pUrvA kAraNi
          uRujaka rakshaNi neerA vAraNi ...... tharusEyE

uyarvara mutRiya kOvE yAraNa
     maRaimudi viththaka thEvE kAraNa
          orumayi laippathi vAzhvE thEvarkaL ...... perumALE.

......... Meaning .........

varum mayil oththavar eevAr mA muka(m) mathi ena vaiththavar thAvA(tha) kAmikaL: They are like peacocks walking at a leisurely gait; when they sight any person with a loose purse, they put on a beautiful face like the full moon; they are such non-obtrusive lovers (implying that they are never truly passionate);

varisaiyin mutRiya vAku Ar Am iyal madamAthar: They adhere to some kind of orderliness; these whores are beautiful, dexterous and soft;

mayalinil utRu avar mOkA vArithi athan idai pukku avar ALAy neeL nithi tharu iyal uluththarkaL: being enchanted by them, I have sunk deeply into the sea of passion; even though I have given away my entire property to them under the spell of their hegemony, these tight-fisted whores stand like a tree without a tinge of grace;

mAdA mA mathi mika mUzhki: indulging in carnal pleasure with these women, I am drowned absolutely with no sense whatsoever;

tharu para uththama vELE seer uRai aRu muka nal thava leelA kUr udai ayil uRai kaith thala seelA pUraNa: Oh Supreme Lord with the greatness of showering grace, Oh Lord with six hallowed faces, Oh Performer of many sacremental sports, Oh Holder of the sharp spear, Oh Virtuous and All-inclusive Lord,

para yOka saravaNa vetRi vinOthA mA maNi tharum aravaik kadi neethA Am aNi mayil uRai viththa un AthAra(m) A(m) aNi peRuvEnO: Oh Lord of the great yOgAs, Oh SaravaNabhavA, Oh Victorious and Wonderful One, Oh Lord with the True Knowledge who mounts the beautiful and righteous peacock controlling the serpent that spews out the precious gem, will I ever get the distinction of Your attachment?

thiririri thiththithi theethee theethithi thokuthoku thoththoku thOthO thOthiku thimithimi thiththimi jEjE theethimi thothitheethO ena: (To the aforesaid sounds),

ari maththaLam meethu Ar thEm muzha thidu ena: Lord VishNu loudly beat the drum at the place where all percussion instruments were being played on;

mikku iyal vEthAvE thozhu thiru nadam ittavar kAthE mUdiya kuru pOtham urai seyyum uththama veerA: and BrahmA, the most competent Lord, kept the beats in His hands and offered worship while He danced the Cosmic Dance; You made that Lord SivA cover His ears with His palms to hear ardently Your preaching of the Supreme Principle of Knowledge, Oh Supreme Master, Oh valorous One,

nAraNi umaiyavaL uththara pUrva AkAra aNi uRu jaka rakshaNi neera AvAraNi tharu sEyE: She is NArAyaNi, UmAdEvi, the Primordial Goddess guarding the cardinal directions like the North and the East, the protector of the universe and One who has the Power of Supression (thirOthAnam); and You are the child delivered by that Goddess PArvathi!

uyar varam utRiya kOvE AraNa maRai mudi viththaka thEvE kAraNa: You are the Lord that bestows great boons upon devotees; You are the Wisest One seated on top of the VEdAs and the Upanishads; You are the Causal One, Oh Lord!

oru mayilaip pathi vAzhvE thEvarkaL perumALE.: You are seated in the matchless town of Mylapore*; You are the Lord of the celestials, Oh Great One!


* Mylapore (Thirumayilai), is in the heart of the city of Chennai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 697 varumayil oththavar - thirumayilai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2017-2030

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact us if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by us (the owners and webmasters of www.kaumaram.com),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
we are NOT responsible for any damage caused by downloading any item from this website.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[xhtml] 0504.2022[css]