திருப்புகழ் 680 ஆலம் போல் எழு  (திருவேற்காடு)
Thiruppugazh 680 AlampOlezhu  (thiruvERkAdu)
Thiruppugazh - 680 AlampOlezhu - thiruvERkAduSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானந்தா தனதான தானந்தா தனதான
     தானந்தா தனதான ...... தனதான

......... பாடல் .........

ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல
     மாளம்போர் செயுமாய ...... விழியாலே

ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார
     ஆடம்பார் குவிநேய ...... முலையாலே

சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய
     வேளங்கார் துடிநீப ...... இடையாலே

சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு
     காலந்தா னொழிவேது ...... உரையாயோ

பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத
     மாதம்பா தருசேய ...... வயலூரா

பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர
     பாசந்தா திருமாலின் ...... மருகோனே

வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும்
     வீறங்கே யிருபாலு ...... முறவீறு

வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு
     வேலங்கா டுறைசீல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆலம் போல் எழு நீலம் மேல் அங்கு ஆய் வரி கோல மாளம்
போர் செயு(ம்) மாய விழியாலே
... ஆலகால விஷத்தைப் போல்
எழுந்து நீலோற்பல மலருக்கும் மேலானதாக அங்கு அமர்ந்து, ரேகைகள்
கொண்டு அழகு வாய்ந்து, கண்டோர் இறந்து போகும்படிச் சண்டை
செய்ய வல்ல மாயம் நிறைந்த கண்களாலே,

ஆரம் பால் தொடை சால ஆலும் கோபுர ஆர ஆடம்பார்
குவி நேய முலையாலே
... முத்து ஆரம் தம்மேல் மாலையாக மிகவும்
அசைகின்ற, கோபுரம் போல் எழுந்து ஆடம்பரமாகக் குவிந்துள்ள,
அன்புக்கு இடமான மார்பகங்களாலே,

சாலம் தாழ்வுறும் மால ஏல் அங்கு ஓர் பிடியாய வேள் அங்கு
ஆர் துடி நீப இடையாலே
... மிகவும் இளைத்திருப்பதும், ஆசை தரக்
கூடியதாகப் பொருந்தி அங்கு ஒரு பிடி அளவே இருப்பதும்,
விருப்பத்துக்கு அங்கு இடமாய் நிறைந்ததும், உடுக்கை போன்றதுமான
இடுப்பாலே,

சாரம் சார்விலனாய் அநேகம் காய் யமன் மீறு காலம் தான்
ஒழிவு ஏது உரையாயோ
... (என்னை வாழவிடாமல் செய்யும்
விலைமாதரை விட்டு) வேறு புகலிடம் இல்லாதவனாய் இருக்கும் எனக்கு,
நிறைய பிறப்புகளில் என் உயிரைக் கவர்ந்து சென்ற யமன் என்னை
அதிகாரம் செய்து வென்று செல்லும் காலம் தான் நீங்குதல் என்றைக்கு
எனச் சொல்ல மாட்டாயோ?

பால் அம்பால் மண(ம்) நாறுகால் அங்கே இ(ஈ)றிலாத மாது
அம்பா தரு சேயே வயலூரா
... பூமியின் இடமெல்லாம் கடல் நீரால்
சேர்க்கைதோன்றுங்கால் (பிரளய காலத்தில்), அப்போதும் அழிவில்லாத
தேவி அம்பிகை பெற்ற குழந்தையே, வயலூரில் குடிகொண்டுள்ள
தெய்வமே,

பாடு அம்பு ஆர் திரி சூல நீடு அந்தக அர வீர பாசம் தா
திருமாலின் மருகோனே
... பெருமை வாய்ந்த அம்பு போல கூர்மை
வாய்ந்த முத்தலைச் சூலத்தால், மேம்பட்டு நின்ற அந்தகாசுரனை*
வருத்தின வீரனாகிய சிவன் மீது அன்பைப் பொழியும் திருமாலின்
மருகனே,

வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு
அங்கே இரு பாலும் உற வீறு
... வேல் போலவும் அம்பு போலவும்
(உள்ள கண்களைக் கொண்ட) குறப் பெண்ணாகிய வள்ளியும், தேவர்கள்
வளர்த்த தேவயானை அம்மையும் பெருமிதத்துடன் அங்கே இரண்டு
புறமும் பொருந்த விளங்க

வேத அந்தா அபிராம நாத அந்தா ... வேதத்தின் முடிவில்
இருப்பவனே, அழகனே, ஒலியின் முடிவில் இருப்பவனே,

அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே. ...
திருவருளைப் பரப்பும் திருவேற்காட்டில்** வீற்றிருக்கும் தூயவனே,
பெருமாளே.


* அந்தகாசுரன் அரக்கன் இரணியனுக்கு மைந்தன், பிரகலாதனுக்குத் தம்பி.
இவன் தேவர்களை வருத்த, சிவபெருமான் பைரவ மூர்த்தியை ஏவினார்.
அவர் சூலத்தினால் அந்தகாசுரனைக் குத்தி அடக்கினார்.


** திருவேற்காடு, சென்னையின் அருகிலுள்ள ஆவடி ரயில் நிலையத்திலிருந்து
தென்கிழக்கில் 4 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.635  pg 2.636  pg 2.637  pg 2.638 
 WIKI_urai Song number: 684 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 680 - Alam pOl ezhu (thiruvERkAdu)

AlampO lezhuneela mElangAy varikOla
     mALampOr seyumAya ...... vizhiyAlE

ArampAl thodaisAla AlungO puravAra
     AdampAr kuvinEya ...... mulaiyAlE

sAlanthAzh vuRumAla ElangOr pidiyAya
     vELangAr thudineepa ...... idaiyAlE

sAranchAr vilanAya nEkangA yamanmeeRu
     kAlanthA nozhivEthu ...... uraiyAyO

pAlampAl maNanARu kAlangE yiRilAtha
     mAthampA tharusEya ...... vayalUrA

pAdampAr thiricUla needanthA karaveera
     pAsanthA thirumAlin ...... marukOnE

vElampAr kuRamAthu mElumpAr tharumAthum
     veeRangE yirupAlu ...... muRaveeRu

vEthanthA vapirAma nAthanthA varuLpAvu
     vElangA duRaiseela ...... perumALE.

......... Meaning .........

Alam pOl ezhu neelam mEl angu Ay vari kOla mALam pOr seyu(m) mAya vizhiyAlE: Their eyes are filled with AlakAla poison and sit prettier than the blue lily; they look beautiful with thin blood vessels and those magical eyes are capable of knocking suitors dead;

Aram pAl thodai sAla Alum kOpura Ara AdampAr kuvi nEya mulaiyAlE: their bosom, the seat of love, rise like towers, curving in a showy way, upon which pearl necklaces sway conspicuously;

sAlam thAzhvuRum mAla El angu Or pidiyAya vEL angu Ar thudi neepa idaiyAlE: their waist is slender like a hand-drum and is of the size of just a fist, highly provocative and sensuous;

sAram sArvilanAy anEkam kAy yaman meeRu kAlam thAn ozhivu Ethu uraiyAyO: (with all these characteristics, the whores would never let me live without them,) and I have no other safe haven; Yaman, the God of Death, who has snatched my life in many a birth continues to dominate me; will You not tell me when his hegemony over me will cease?

pAl ampAl maNa(m) nARukAl angE i(ee)RilAtha mAthu ampA tharu sEyE vayalUrA: Even on the final day when the aeons end, as the entire space on this earth is flooded with water, She is indestructible; You are the child of that Mother DEvi! You belong to the town of VayalUr, Oh Lord!

pAdu ampu Ar thiri cUla needu anthaka ara veera pAsam thA thirumAlin marukOnE: The mighty demon andhakAsuran* was attacked by Lord SivA with His trident whose edges were pointed like powerful arrows; You are the nephew of Lord VishNu who showers love on that SivA!

vEl ampu Ar kuRa mAthu mEl umpAr tharu mAthum: VaLLi, the damsel of the KuRavAs, and DEvayAnai, reared by the celestials, who both have eyes sharp like arrow and spear

veeRu angE iru pAlum uRa veeRu vEtha anthA apirAma nAtha anthA: are seated with pride on either side as You stand out prominently as the culmination of the VEdAs, Oh Handsome One, You prevail where sound ends!

aruL pAvu vElangAdu uRai seela perumALE.: You have Your abode in ThiruvERkAdu** which spreads grace throughout, Oh Immaculate and Great One!


* anthakAsuran was the son of the demon HiraNyan and the younger brother of PrahlAdhan. As he harassed the celestials, Lord SivA commanded Bhairava MUrthy to control him. He wielded the trident and subdued the demon.


** ThiruvERkAdu is near Chennai at a distance of 4 miles southeast of Avadi Railway Station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 680 Alam pOl ezhu - thiruvERkAdu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]