திருப்புகழ் 654 சிகரம் அருந்த  (மாயாபுரி)
Thiruppugazh 654 sigaramarundha  (mAyAburi)
Thiruppugazh - 654 sigaramarundha - mAyAburiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனந்த தானன ...... தனதான
     தனன தனந்த தானன ...... தனதான

......... பாடல் .........

சிகர மருந்த வாழ்வது ...... சிவஞானம்
     சிதறி யலைந்து போவது ...... செயலாசை

மகர நெருங்க வீழ்வது ...... மகமாய
     மருவி நினைந்தி டாவருள் ...... புரிவாயே

அகர நெருங்கி னாமய ...... முறவாகி
     அவச மொடுங்கை யாறொடு ...... முனமேகிக்

ககன மிசைந்த சூரியர் ...... புகமாயை
     கருணை பொழிந்து மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம் ... சிவாயநம என்ற
பஞ்சாட்சரத்திலுள்ள 'சி'கரம் ஆகிய எழுத்தை உச்சரிப்பதால்
கிடைக்கக்கூடியது சிவஞானமாகும்.

சிதறி யலைந்து போவது செயலாசை ... அந்த உச்சரிப்பால்
அலைந்து அழிந்து போவன மனம், வாக்கு, காயம் இவற்றின்
செயலும் ஆசைகளும் ஆகும்.

மகர நெருங்க வீழ்வது மகமாய ... மகரம் என்னும் எழுத்தை
நெருங்க உச்சரிக்கும்போது வீழ்ந்து அழிவதுதான் மஹாமாயை.

மருவி நினைந்திடா அருள்புரிவாயே ... உன்னை தியானித்து
அதன் பயனாக நினைப்பு மறப்பு இரண்டுமே இல்லாத நிலையை
அருள் புரிவாயாக.

அகர நெருங்கின் ஆமயம் உறவாகி ... (வீரமஹேந்திரபுரத்தின்)*
வீதிகளுக்கு மிக அருகே வந்தால் துன்பம் ஏற்பட்டு,

அவசமொடுங் கையாறொடும் முனம் ஏகி ... மயக்கத்துடனும்,
தன்செயல் அற்றும் முன்பு சூரன்அரசாண்ட காலத்தில் அவதியுற்றுச்
சென்று,

ககனம் இசைந்த சூரியர் ... ஆகாயத்தில் இருந்த பன்னிரண்டு
சூரியர்களும்

புக கருணை பொழிந்து ... உன்னிடம் தஞ்சம் புக (சூர சம்ஹாரம்
செய்து) அவர்களுக்குக் கருணை பொழிந்தனையே.

மாயை மேவிய பெருமாளே. ... மாயாபுரியில்** வீற்றிருக்கும்
பெருமாளே.


* சூரனது அரசாட்சியில் அவனது தலைநகராம் வீரமஹேந்திரபுரத்தின்
வழியாகச் செல்லும் சூரியன் தனது உக்ரத்தைக் குறைத்துக்கொள்ள சூரன்
ஆணையிட்டதால் சூரியன் பட்ட துன்பம் முருகனால் தீர்த்துவைக்கப்பட்டது.


** மாயாபுரி முக்தித் தலங்களில் ஒன்றான ஹரித்துவாரம் - உத்தரப்பிரதேசத்தில்
உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.568  pg 2.569 
 WIKI_urai Song number: 658 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 654 - sigaram arundha (mAyApuri)

sikaram arundha vAzhvadhu ...... sivanyAnam
     sidhaRi alaindhu pOvadhu ...... seyalAsai

makara nerunga veezhvadhu ...... magamAya
     maruvi ninain dhidA aruL ...... purivAyE

akara nerungin Amayam ...... uRavAgi
     avasa modung kaiyARodu ...... munamEgi

gaganam isaindha sUriyar ...... pugamAyai
     karuNai pozhindhu mEviya ...... perumALE.

......... Meaning .........

sikaram arundha vAzhvadhu sivanyAnam: If the letter "Si" in the Sacred Five Letters "SivAyanama" is pronounced, one derives Knowledge of SivA.

sidhaRi alaindhu pOvadhu seyalAsai: That Knowledge will torment and destroy all desires arising in the Mind, the Speech and the Action.

makara nerunga veezhvadhu magamAya: If the letter "ma" is stressed from those Five Letters, the Great Deluge (MahA MAyA) dies instantly.

maruvi ninain dhidA aruL purivAyE: Kindly make me concentrate on You so that I reach a stage where memory and forgetfulness both do not exist.

akara nerungin Amayam uRavAgi: Whenever the Sun approached the streets (of Veeramahendrapuram*), he was in distress

avasa modung kaiyARodu munamEgi: that was the time when SUran ruled making the Sun disconcerted and disturbed; and

gaganam isaindha sUriyar puga: all the twelve Suns (AdhithyAs) in the skies surrendered to You.

karuNai pozhindhu: You were so kind to the Suns (that You rescued them from SUran by destroying him).

mAyai mEviya perumALE.: You chose MAyApuri** as Your abode, Oh Great One!


* When SUran ruled VeeramahEndrapuram, he ordered the Sun to decrease the intensity of its heat rays while passing through the streets of the city. The Sun was so intimidated by SUran that he and other suns surrendered to MurugA who destroyed SUran to relieve all DEvAs from their ordeal.


** MayApuri is one of the Sacred Places in India, which is also known as Hardwar (HaridwAr), in Uttar Pradesh.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 654 sigaram arundha - mAyAburi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]