திருப்புகழ் 651 தாரணிக் கதி  (காசி)
Thiruppugazh 651 thAraNikkadhi  (kAsi)
Thiruppugazh - 651 thAraNikkadhi - kAsiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தத்தன தான தானன
     தான தத்தன தான தானன
          தான தத்தன தான தானன ...... தனதான

......... பாடல் .........

தார ணிக்கதி பாவி யாய்வெகு
     சூது மெத்திய மூட னாய்மன
          சாத னைக்கள வாணி யாயுறு ...... மதிமோக

தாப மிக்குள வீண னாய்பொரு
     வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
          தாமு யச்செயு மேது தேடிய ...... நினைவாகிப்

பூர ணச்சிவ ஞான காவிய
     மோது தற்புணர் வான நேயர்கள்
          பூசு மெய்த்திரு நீறி டாஇரு ...... வினையேனைப்

பூசி மெய்ப்பத மான சேவடி
     காண வைத்தருள் ஞான மாகிய
          போத கத்தினை யேயு மாறருள் ...... புரிவாயே

வார ணத்தினை யேக ராவுமு
     னேவ ளைத்திடு போதுமேவிய
          மாய வற்கித மாக வீறிய ...... மருகோனே

வாழு முப்புர வீற தானது
     நீறெ ழப்புகை யாக வேசெய்த
          மாம திப்பிறை வேணி யாரருள் ...... புதல்வோனே

கார ணக்குறி யான நீதிய
     ரான வர்க்குமு னாக வேநெறி
          காவி யச்சிவ நூலை யோதிய ...... கதிர்வேலா

கான கக்குற மாதை மேவிய
     ஞான சொற்கும ராப ராபர
          காசி யிற்பிர தாப மாயுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தார ணிக்கதி பாவியாய் ... இந்த உலகிலேயே அதிக பாவியாய்,

வெகு சூது மெத்திய மூட னாய் ... மிக்க சூது நிறைந்த மூடனாய்,

மன சாதனைக் களவாணியாய் ... மனத்திலே அழுந்திய திருட்டுப்
புத்தியை உடையவனாய்,

உறு மதிமோக தாப மிக்குள வீணனாய் ... மிகுந்த காம
மயக்கத்தில் தாகம் மிக்க வீணனாய்,

பொரு வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள் ... போருக்கு உற்ற வேல்
போன்ற கண்களை உடைய பொது மகளிர்

தாமுயச்செயும் ஏது தேடிய நினைவாகி ... தாம் பிழைப்பதற்கு
உதவும் செல்வத்தை தேடித் தரும் நினைவையே கொண்டு,

பூரணச்சிவ ஞான காவியம் ... பரிபூரணமான சிவஞான நூல்களை

ஓதுதற்புணர்வான நேயர்கள் ... ஓதுதலில் விருப்பம் கொண்டுள்ள
அன்பர்கள்

பூசு மெய்த்திரு நீறி டாஇரு வினையேனை ... பூசுகின்ற மகிமை
வாய்ந்த திருநீற்றை இட்டுக் கொள்ளாத இருவினையாளனாகிய
(புண்ணிய பாப வினையாளனாகிய) அடியேனை

பூசி மெய்ப்பதமான சேவடி ... திருநீற்றைப் பூசவைத்து,
உண்மைப்பதவியாகிய உன் திருவடிகளை

காண வைத்தருள் ஞான மாகிய ... தரிசனம் செய்வித்து
திருவருள்மயமான ஞானம் என்ற

போத கத்தினையேயு மாறருள் புரிவாயே ... தூய அறிவும்
எனக்குக் கிட்டுமாறு அருள் புரிவாயாக.

வாரணத்தினையே கராவுமுனே ... கஜேந்திரன் என்ற யானையை
முதலை முன்னொருநாள்

வளைத்திடு போதுமேவிய ... வளைத்து இழுத்த போது அங்கு வந்து
உதவிய

மாயவற்கு இதமாக வீறிய மருகோனே ... மாயவன் திருமாலுக்கு
மனம் மகிழச்செய்யும்படி விளங்கும் மருமகனே,

வாழு முப்புர வீற தானது ... பெருவாழ்வு வாழ்ந்த திரிபுரங்களின்
பொலிவெல்லாம்

நீறெழப்புகையாக வேசெய்த ... சாம்பலாகப் போகுமாறு புகை எழச்
செய்த

மாமதிப்பிறை வேணியார் அருள் புதல்வோனே ... சிறந்த
திங்கட்பிறை அணிந்த சடைப் பெருமான்சிவபிரான் அருளிய புதல்வனே,

காரணக்குறி யான நீதியர் ... யாவற்றிற்கும் மூல காரணனாகவும்,
இலக்காகவும் உள்ள நீதிப் பெருமான்

ஆனவர்க்கு முனாகவே ... சிவபிரானது சந்நிதிகளில்

நெறிகாவியச்சிவ நூலை யோதிய கதிர்வேலா ... அறநெறியை
ஓதும் பிரபந்தங்களான சிவநூலாகிய தேவாரத்தை, திருஞானசம்பந்தராக
அவதரித்து, ஓதின ஒளி வேலனே,

கானகக்குற மாதை மேவிய ... காட்டில் குறப்பெண் வள்ளியை
விரும்பி அடைந்த

ஞான சொற்குமரா பராபர ... ஞான மொழி பேசும் குமரனே,
யாவர்க்கும் மேலானவனே,

காசியிற் பிரதாப மாயுறை பெருமாளே. ... காசித்தலத்தில்*
பிரபலமாக வீற்றிருக்கும் பெருமாளே.


* காசி என்ற 'வாரணாசி' கங்கைக் கரையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது.
ஏழு முக்தித் தலங்களுள் காசியும் ஒன்று.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.560  pg 2.561  pg 2.562  pg 2.563 
 WIKI_urai Song number: 655 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 651 - dhAranikkathi (kAsi)

dhAraNik kathi pAviyAy vegu
     sUdhu meththiya mUdanAy mana
          sAdhanaik kaLa vANi yAyuRum ...... athi mOha

thApa mikkuLa veeNanAy poru
     vEl vizhichchiyar Agu mAdhargaL
          thAm uyachcheyum Edhu thEdiya ...... ninaivAgi

pUraNa siva nyAna kAviyam
     OdhudhaR puNar vAna nEyargaL
          pUsu meyth thiru neeR idA iru ...... vinaiyEnai

pUsi meyppadham Ana sEvadi
     kANa vaith tharuL nyAna mAgiya
          bOdhagath thinai yEyu mARaruL ...... purivAyE

vAraNath thinai yEkarAvu mu
     nE vaLaiththidu pOdhu mEviya
          mAyavaRk idhamAga veeRiya ...... marugOnE

vAzhu muppura veeRa dhAnadhu
     neeR ezhap pugai yAgavE seydha
          mA madhip piRai vENi yararuL ...... pudhalvOnE

kAraNak kuRiyAna needhiyar
     Anavarkku munAgavE neRi
          kAviyach siva nUlai Odhiya ...... kadhir vElA

kAnagak kuRa mAdhai mEviya
     nyAna soR kumarA parApara
          kAsiyiR pira thApamAy uRai ...... perumALE.

......... Meaning .........

dhAraNik kathi pAviyAy: I am the worst sinner in this world.

vegu sUdhu meththiya mUdanAy: I am a very deceitful fool.

mana sAdhanaik kaLa vANi yAy: I am a deliberate and determined thief.

uRum athi mOha thApa mikkuLa veeNanAy: I waste my life indulging in extreme lust.

poru vEl vizhichchiyar Agu mAdhargaL: The tempting women with combative spear-like eyes

thAm uyachcheyum Edhu thEdiya ninaivAgi: are always after my wealth, and to ensure their survival.

pUraNa siva nyAna kAviyam OdhudhaR puNar vAna nEyargaL: Those devotees, who are interested in chanting the complete Saivite Scriptures (like ThEvAram and ThiruvAchakam),

pUsu meyth thiru neeR idA iru vinaiyEnai: wear the holy ash (VibUthi); and I never bother to don the holy ash because of my karma (good and bad deeds).

pUsi meyppadham Ana sEvadi kANa vaiththu: Bless me to wear that ash so that I could attain the real goal of beholding Your holy feet.

aruL nyAna mAgiya bOdhagath thinai yEyu mARaruL purivAyE: Bless me to become worthy of realising the Pure Knowledge that is the True Wisdom, filled with Your holy grace.

vAraNath thinai yEkarAvu munE vaLaiththidu pOdhum: When, once, the elephant GajEndran was dragged and attacked by a crocodile,

Eviya mAyavaRk idhamAga veeRiya marugOnE: mystic Vishnu rushed to his rescue; and You are His delightful nephew!

vAzhu muppura veeRa dhAnadhu: Thiripuram, which once flourished grandly, lost its lustre

neeR ezhap pugai yAgavE: as it went up in smoke and was reduced to ashes

seydha mA madhip piRai vENi yararuL pudhalvOnE: by Lord SivA, who has adorned His matted locks with the great crescent moon; and You are His son!

kAraNak kuRiyAna needhiyar: One who is the cause for everything and the target, Lord of Justice

Anavarkku munAgavE: is Lord SivA; and in His shrines, You, as ThirugnAna Sambandhar, sang

neRi kAviyach siva nUlai Odhiya kadhir vElA: the Great hymns of Saivite DharmA (called ThEvAram), Oh holder of the bright spear!

kAnagak kuRa mAdhai mEviya: You sought VaLLi, the damsel of the KuRavAs, in the forest.

nyAna soR kumarA parApara: Oh Kumara, You always speak the language of True Knowledge and You are Supreme!

kAsiyiR pira thApamAy uRai perumALE.: You reside in KAsi* eminently, Oh Great One!


* KAsi, also known as Varanasi, is on the banks of River Ganges in Uttar Pradesh.
It is one of seven holy places proffering Eternal Bliss.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 651 thAraNik kadhi - kAsi


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]