பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி) திருப்புகழ் உரை 5 யானையை (கஜேந்திரனை) முதலை முன்பு வளைத்து (இழுத்த) போது அங்கு வந்து சேர்ந்து (உதவின) திருமாலுக்கு இன்பம் தரும் வழியில் மேம்பட்டு விளங்கும் மருமகனே! வாழ்ந்திருந்த முப்புரங்களின் பொலிவு சாம்பலாகவும், புகை எழவும் செய்த சிறந்த திங்கட்பிறை அணிந்துள்ள சடைப்பெருமான் அருளிய புதல்வனே! (எவைக்கும் மூல) காரண இலக்குப் பொருளான நீதிப் பெருமானான சிவபிரானுடைய சந்நிதிகளிலே அறநெறியை ஒதும் பிரபந்தமாகிய சிவநூலாம் திருநெறித் தமிழ்" எனப்படும் தேவாரத்தைச் (சம்பந்த மூர்த்தியாய்) ஒதின ஒளிவேலனே! காட்டில் குறப்பெண் வள்ளியை விரும்பி அடைந்த ஞானமொழி பேசும் குமரனே! மேலாம் பொருளே காசித் தலத்தில் பிரபலமாக வீற்றிருக்கும் பெருமாளே! (போதகத்தினை ஏயுமாறருள் புரிவாயே) 656. ஒருமாதும் அவள் கணவனும் வாழ்ந்து பொருந்தி காம இச்சை என்னும் சிறுமை தம்மீது அடைய (அதன் மூலமாய்)ப் பணிபோலச் சுக்கிலம் தோன்றி உள்ளே பரவ, பிரமதேவனது அருள் கூடி - வண்டு (தடிகை போல) தடித்து வளருவது போல ஆகி, நாள் பல செல்ல, பந்தின் அளவாகிப் (பின்பு) பனம் பழத்தின் (அளவாகி), (பின்னர்) இளநீர் போலவும், குடம் போலவும் நெருங்கி வளர்ந்து பின்னும் பலபல வளர்ச்சியுடன் . புணர்தல் செய்த அந்த இடத்தின் வழியாக மாதம் பத்து ஆகத் தலைகீழாக வந்து பூமியில் (மதலாய் என) மகன் எனப் பேர் பெற்று, மனதுக்கு இனிய குழந்தையாகி - (அனை தாதையும்) அன்னையும் - தாயும், தந்தையும் அன்புமிக்கு (அல்லது மருள் ஆசை மயக்கம் மிக்கு)