திருப்புகழ் 640 கடகட கருவிகள்  (கதிர்காமம்)
Thiruppugazh 640 kadakadakaruvigaL  (kadhirgAmam)
Thiruppugazh - 640 kadakadakaruvigaL - kadhirgAmamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தனதன தனதன
     தானத் தனந்தந் ...... தனதான

......... பாடல் .........

கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்
     காமத் தரங்கம் ...... மலைவீரா

கனகத நககுலி புணரித குணகுக
     காமத் தனஞ்சம் ...... புயனோட

வடசிக ரகிரித விடுபட நடமிடு
     மாவிற் புகுங்கந் ...... தவழாது

வழிவழி தமரென வழிபடு கிலனென
     வாவிக் கினம்பொன் ...... றிடுமோதான்

அடவியி ருடியபி நவகும ரியடிமை
     யாயப் புனஞ்சென் ...... றயர்வோனே

அயிலவ சமுடன ததிதிரி தருகவி
     யாளப் புயங்கொண் ...... டருள்வோனே

இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
     ஏழைக் கிடங்கண் ...... டவர்வாழ்வே

இதமொழி பகரினு மதமொழி பகரினு
     மேழைக் கிரங்கும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கடகட கருவிகள் தப ... கடகட என்று சப்திக்கும் பறைகளின்
பேரொலியும் அடங்குமாறு

வகிர் அதிர் ... வரிப்புலிகளின் ஒலி அதிர்கின்ற

கதிர் காம ... கதிர்காமத்துக் கடவுளே,

தரங்கம் அலைவீரா ... அலைகள் வீசும் கடலினை உனது வேலால்
அலைவுறச் செய்த வீரனே,

கனகத நககுலி ... பெருமையையும் கோபத்தையும் உடைய மலை
போன்ற யானை வளர்த்த தேவயானையை

புணர் இத குண குக ... மணந்த இனிய குணத்தோனே, என் இதய
குகையில் இருக்கும் குகனே,

காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட ... மன்மதனின் தந்தை திருமால்
பயப்பட, பிரம்மா ஓடிட,

வடசிகரகிரி தவிடுபட நடமிடு ... வட மேரு மலைச் சிகரம்
தவிடுபொடியாக நடனம் செய்யும்

மாவிற் புகுங்கந்த ... குதிரை போன்ற மயில் மீது ஏறி வருகின்ற கந்தக்
கடவுளே,

வழாது வழிவழி தமரென ... தவறாமல் வழிவழியாக வந்த உறவினன்
என்னும்படி யான்

வழிபடுகிலன் ... வழிபடுகின்றவனாக இல்லேன் எனினும்

என் அவா விக்கினம் பொன்றிடுமோதான் ... எனது
மூவாசைகளும் துன்பங்களும் அழிந்து ஒழிந்திடுமோ?

அடவியிருடி அபிநவ குமரியடிமையாய ... காட்டில் சிவமுனிவர்
உருவத்தில் தவத்திலிருந்த ரிஷியின்அற்புதப் புதுமையான குமாரி*
வள்ளிக்கு அடிமையாகிச் சென்று

புனஞ்சென்று அயர்வோனே ... அவள் இருந்த தினைப்புனத்துக்குப்
போய், தளர்ச்சி அடைந்தவனே,

அவசமுடன் அ ததி திரிதரு கவியாள ... மயக்கத்துடன் ஒருநாள்
காட்டிலே திரிந்து கொண்டிருந்த கவியாகிய பொய்யாமொழிப் புலவரை
ஆண்டருள**

அயில் புயங்கொண்டு அருள்வோனே ... வேலினைத் தோளில்
ஏந்திச் சென்று அருள் புரிந்தவனே,

இடமொரு மரகத மயில்மிசை வடிவுள ... தம் உடலின் இடது
பாகத்தில் ஓர் மரகத மயிலை மிஞ்சிய அழகுள்ள

ஏழைக்கு இடங்கண்டவர்வாழ்வே ... ஏந்திழையாம் பார்வதிக்கு
இடம் தந்தவரான சிவபிரானின் செல்வனே,

இதமொழி பகரினு மதமொழி பகரினும் ... அடியேன் இனிய
மொழிகளைக் கூறினாலும், ஆணவம் தொனிக்கும் பேச்சுக்களைப்
பேசினாலும்,

ஏழைக்கு இரங்கும் பெருமாளே. ... இந்த ஏழையினிடத்தில்
கருணை காட்டும் பெருமாளே.


* சிவமுநிவராக உருவெடுத்த திருமால் காட்டில் தவம் செய்த போது
திருமகள் மானின் உருக்கொண்டு எதிர்ப்பட, முநிவர் திருஷ்டி மான் மீது
பட்டு, மான் கருவுற்று வள்ளிக்கிழங்குக் குழியில் பெண் குழந்தையை
ஈன்றுவிட்டு ஓடியது. வேடர் தலைவன் குழந்தையைக் கண்டு வள்ளி
எனப் பெயரிட்டான்.


** சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க,
அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக
வந்து, காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1047  pg 1.1048  pg 1.1049  pg 1.1050 
 WIKI_urai Song number: 422 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 640 - kadakada karuvigaL (kadhirgAmam)

kadakada karuvigaL thapavagi radhirkadhir
     kAmath tharangam ...... malaiveerA

kanakadha nagakuli puNaridha guNaguha
     kAmath thananjam ...... buyanOda

vadasika ragiridha vidupada natamidu
     mAviR pugungan ...... thavazhAdhu

vazhivazhi thamarena vazhipadu gilanena
     vAvik kinampon ...... dridumOthAn

adaviyi rudiyabi navakuma riyadimai
     yAyap punansen ...... drayarvOnE

ayilava samudana thadhithiri tharukavi
     yALap buyankoN ...... daruLvOnE

idamoru marakatha mayilmisai vadivuLa
     Ezhaik kidankaN ...... davarvAzhvE

idhamozhi pagarinu madhamozhi pagarinum
     Ezhaik kirangum ...... perumALE.

......... Meaning .........

kadakada karuvigaL thapavagi radhirkadhirkAma: The striped tigers in Your abode KadhirgAmam roar louder than, and drown, the rattling noise of the drums.

tharangam malaiveerA: Your valour displayed by the Spear shakes the waves of the sea!

kanakadha nagakuli puNaridha guNa: With a kind heart, You married DEvayAnai, reared by AirAvatham, the elephant of IndrA, noted for its fame and rage.

guha: You dwell inside the cave of my heart, Oh GuhA!

kAmath thananjam buyanOda: Vishnu, father of Manmathan, was scared; BrahmA fled from the place;

vadasika ragiridha vidupada: and the northern mount MEru saw its peak reduced to powder

natamidu mAviR pugun kantha: when Your peacock (more like a horse) danced; and You mounted on it, KanthA!

vazhAdhu vazhivazhi thamarena vazhipadugilan: I do not worship You in a traditional way as Your devotees do.

enavA vikkinam pondridumOthAn: Nevertheless, will my desires and miseries ever be extinguished?

adavi yirudiy abinava kumari yadimaiyAy: You desired to be the slave of VaLLi, the wonderful daughter of a sage meditating in the forest*,

appunansendr ayarvOnE: and faced a lot of trouble going to her millet field!

avasamudan athadhi thiritharu kavi: Once there was a poet (PoyyAmozhi) who was roaming in the forest in a trance;

yALa ayil buyankoN daruLvOnE: You challenged him and took him on in the disguise of a hunter with a spear!**

idamoru marakatha mayilmisai vadivuLa: He gave the left side of His body to this emerald-green peahen,

EzhaikkuidankaN davarvAzhvE: called PArvathi; and He is SivA. You are His treasure!

idhamozhi pagarinu madhamozhi pagarinum: Whether I praise You with kind words or I speak to You arrogantly,

Ezhaik kirangum perumALE.: You are always extremely gracious to this poor soul, Oh Great One!


* Vishnu took the form of a Saivite sage and was meditating in a forest. Lakshmi took the form of a deer and distracted Vishnu. When the sage's sight fell on the deer, she conceived and delivered a baby girl. The baby was left in a pit of VaLLi roots. When the hunters discovered the baby and reared her, she was named VaLLi.


** PoyyAmozhi was a poet bent upon praising SivA only and was totally against Murugan. In an interesting episode, Murugan came in the disguise of a hunter with a spear, challenged the poet and eventually won him over.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 640 kadakada karuvigaL - kadhirgAmam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]