பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1049

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை இடமொரு மரகத மயில்மிசை வடிவுள ஏழைக் கிடங்கண் டவர்வாழ்வே. இதமொழி பகரினு மதமொழி பகரினு மேழைக் கிரங்கும் பெருமாளே. (5) 423 . கிருபை கூர தனதனன தானத்த தனதனன தானத்த தனதனன தானத்த தனதான தானனா சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட தனமசைய வீதிக்குள் மயில்போ லுலாவியே (முன் பக்கத் தொடர்ச்சி) பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே என்பேதை செல்லற் கியைந்தனளே - மின்போலு மாணவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங் காணவேல் முட்டைக்குங் காடு' எனப் பாடினர். கள்ளி தீப்பட்டு பொறி பறக்குமாயின் வேல முள் சாம்பலாகப் போயிருக்குமே, அது எவ்வாறு தைக்கும்? நீ பாடின பாடலிற் பொருட்குற்றம் உளதே என எள்ளி நகையாடினர் முருகவேள். பொய்யா மொழியார் வெட்கமுற்றுத் தலைவணங்க, உன் பெயரைக் கூறுக நான் பாடுகிறேன் பார் - என்று கூறி, அவர் பெயர் பொய்யமொழி எனக் கூறக்கேட்டு. விழுந்த துளி அந்தரத்தே வேமென்றும் விழின் எழுந்து சுடர்சுடு மென்றுஞ் - செழுங்கொண்டல் பெய்யாத கானகத்துப் பெய்வளையும் போயினளே பொய்யா மொழிபகைஞர் போல்’ என அருமையாகப் பாடிக், கோழிக்குஞ்சைப் பாடமாட்டேன் என்றாயே இப்போது முட்டையையும் பாடிவிட்டாயே எனக் கூறி, அவருக்கு நல்லறிவு ஊட்டி ஆட்கொண்டனர் ஆண்டவர். இவ் வரலாற்றை 'பொய்யா மொழிப்புலவர் மதுரையிற் சங்கம் புரக்க எழுநாள் மறவனாய்ப் புறவுற வளைத்தெனது பெயர் முட்டை பாடெனப் பொன்போலும் என்றுபாட வெய்யான பாலைக்கி தேலாது நும்பெயர் விளம்பென விளம்ப அவர்மேல் (அடுத்த பக்கம் பார்க்க)