திருப்புகழ் 637 அலகின் மாறு  (கதிர்காமம்)
Thiruppugazh 637 alaginmARu  (kadhirgAmam)
Thiruppugazh - 637 alaginmARu - kadhirgAmamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

......... பாடல் .........

அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி
     அடைவில் ஞாளி கோமாளி ...... அறமீயா

அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்
     அருளி லாத தோடோய ...... மருளாகிப்

பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு
     பருவ மேக மேதாரு ...... வெனயாதும்

பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாத
     பரிசில் தேடி மாயாத ...... படிபாராய்

இலகு வேலை நீள்வாடை யெரிகொள் வேலை மாசூரி
     லெறியும் வேலை மாறாத ...... திறல்வீரா

இமய மாது பாகீர திநதி பால காசார
     லிறைவி கான மால்வேடர் ...... சுதைபாகா

கலக வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீத
     கதிர காம மூதூரி ...... லிளையோனே

கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அலகின்மாறு மாறாத கலதி பூத வேதாளி ... (யான் ஒரு)
விளக்குமாறு, மாறுதல் இல்லாத மூதேவி, பூதம், காளி,

அடைவு இல் ஞாளி கோமாளி ... தகுதி இல்லாத நாய், கோணங்கி,

அறம் ஈயா அழிவு கோளி ... தருமம் செய்யாமல் அழிவைத் தேடிக்
கொள்ளுபவன்,

நாணாது புழுகு பூசி வாழ் மாதர் ... எனக்குச் சிறிதும் வெட்கம்
இல்லாமல், புனுகு போன்ற வாசனைகளைப் பூசி வாழும்
விலைமாதர்களின்

அருள் இலாத தோள் தோய மருள் ஆகி ... அன்பு இல்லாத
தோள்களைச் சேர வேண்டி, காம மயக்கம் கொண்டு (அவர்களுக்குக்
கொடுக்கப் பொருள் தேடி, மற்றவர்களை)

பல கலை ஆகார மேரு மலை கர அசலா ... பல கலைகளுக்கும்
இருப்பிடமானவனே, மேரு மலை போன்ற புயமலைகளை உடையவனே,

வீசு பருவ மேகமே தாரு என ... மழை வீசும் பருவ காலத்து மேகமே,
கற்பக மரமே என்று

யாதும் பரிவு உறாத மா பாதர் வரிசை பாடி ... (பலவிதமாகக்)
கூறினாலும் ஒரு சிறிதும் அன்பு இல்லாத மகா பாதகர்களின்
பெருமைகளைப்புகழ்ந்து பாடி,

ஓயாத பரிசில் தேடி மாயாதபடி பாராய் ... ஓய்வே இல்லாமல்
பரிசுப் பொருளைத் தேடி நான் இறந்து போகா வண்ணம் கண் பார்த்து
அருளுக.

இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை ... விளங்கும்
வேலாயுதத்தை பெரிய வடமுகாக்கினியைக் கொண்ட கடல் மீதும்,

மா சூரில் எறியும் வேலை மாறாத திறல் வீரா ... மாமரமாகிய
சூரன் மீதும் செலுத்திய தொழிலைக் கைவிடாத திறமையான வீரனே,

இமய மாது பாகீரதி நதி பாலகா ... இமவான் மகள் பார்வதி,
கங்கை நதி இவர்கள் இருவருக்கும் பாலகனே,

சாரல் இறைவி கானம் மால் வேடர் சுதை பாகா ... வள்ளி மலைச்
சாரலில் இருந்த தலைவியும், காட்டில் இருந்த பெருமை வாய்ந்த வேடர்
(நம்பிராஜனின்) புதல்வியுமான வள்ளியைப் பக்கத்தில் கொண்டவனே,

கலக வாரி போல் மோதி ... பேரொலி கொண்ட கடல் போல் அலை
மோதி வரும்

வட ஐ ஆறு சூழ் சீத ... வடக்கு திசையிலிருந்து வரும் மாணிக்க
கங்கை என்னும் அழகிய ஆறு சூழ்ந்து குளிர்ச்சி தரும்

கதிரகாமம் மூது ஊரில் இளையோனே ... கதிர் காமம் என்னும்
பழைய நகரில் வீற்றிருக்கும் இளையோனே,

கனக நாடு வீடு ஆய கடவுள் யானை வாழ்வான ...
பொன்னுலகு இருப்பிடமான தேவ யானைக்கு வாழ்வாய் அமைந்த

கருணை மேருவே தேவர் பெருமாளே. ... கருணை மேருவே,
தேவர்கள் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1041  pg 1.1042 
 WIKI_urai Song number: 419 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 637 - alagin mARu (kadhirgAmam)

alakin mARu mARAtha kalathi pUtha vEthALi
     adaivil njALi kOmALi ...... aRameeyA

azhivu kOLi nANAthu puzhuku pUsi vAzhmAthar
     aruLi lAtha thOdOya ...... maruLAki

palaka lAka rAmEru malaika rAsa lAveesu
     paruva mEka mEthAru ...... venayAthum

parivu RAtha mApAthar varisai pAdi yOyAtha
     parisil thEdi mAyAtha ...... padipArAy

ilaku vElai neeLvAdai yerikoL vElai mAcUri
     leRiyum vElai mARAtha ...... thiRalveerA

imaya mAthu pAkeera thinathi pAla kAsAra
     liRaivi kAna mAlvEdar...... suthaipAkA

kalaka vAri pOlmOthi vadavai yARu sUzhseetha
     kathira kAma mUthUri ...... liLaiyOnE

kanaka nAdu veedAya kadavuL yAnai vAzhvAna
     karuNai mEru vEthEvar...... perumALE.

......... Meaning .........

alakinmARu mARAtha kalathi pUtha vEthALi: I am like a broomstick, an unchangeable witch, and a devil;

adaivu il njALi kOmALi: a worthless dog, a silly clown,

aRameeyA azhivu kOLi: I destroy myself by not giving alms to others;

nANAthu puzhuku pUsi vAzh mAthar: shamelessly, I hanker after whores wearing perfumes like musk,

aruL ilAtha thOL thOya maruL Aki: with a delusory lust to hug their loveless shoulders, (and in search of riches to shower on them)

pala kalai AkAra mEru malai kara asalA: (I praise others singing) "Oh, you are the seat of many an art; Your charitable arms are as strong as Mount Meru;

veesu paruva mEkamE thAru ena kaRpaka maramE enRu: Your benevolence is comparable to the seasonal rain-bearing clouds; and You are like KaRpagam, the wish-yielding celestial tree" and so on.

yAthum parivu uRAtha mA pAthar varisai pAdi: My songs are wasted praising those unsympathetic and treacherous sinners;

OyAtha parisil thEdi mAyAthapadi pArAy: Kindly bestow Your grace on me so that I do not die roaming about constantly in search of gifts!

ilaku vElai neeL vAdai eri koL vElai: You wielded the elegant spear on the seas on which the Northern Inferno* (VadamukAgni) was burning;

mA cUril eRiyum vElai mARAtha thiRal veerA: You never abstain from Your task of precisely throwing Your spear on SUran, who had disguised as a mango tree, Oh Great Warrior!

imaya mAthu pAkeerathi nathi pAlakA: You are the dear son of two mothers, one, PArvathi, the Daughter of HimavAn, and the other, River Ganga.

sAral iRaivi kAnam mAl vEdar suthai pAkA: She is the Goddess living in the valley of VaLLimalai; She is the daughter of the famous hunter (NambirAjan); She is Your consort VaLLi by Your side!

kalaka vAri pOl mOthi vada ai ARu sUzh seetha: Like the roaring seas this beautiful river (MaNikka Ganga) flows furiously from the northern side of this cool place,

kathirakAmam mUthu Uril iLaiyOnE: known as KadhirgAmam, an ancient town, which is Your abode, Oh Young One!

kanaka nAdu veedu Aya kadavuL yAnai vAzhvAna: She is DEvayAnai whose hometown is the golden celestial land, and You are her Life!

karuNai mEruvE thEvar perumALE.: You are the most compassionate one like Mount Meru. You are worshipped by the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 637 alagin mARu - kadhirgAmam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]