திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 634 கோங்க முகை (கழுகுமலை) Thiruppugazh 634 kOngamugai (kazhugumalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தாந்த தனன தனன தாந்த தனன தனன தாந்த தனன தனனந் ...... தனதான ......... பாடல் ......... கோங்க முகையு மெலிய வீங்கு புளக களப மேந்து குவடு குழையும் ...... படிகாதல் கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவு மினிய தேங்கு கலவி யமுதுண் ...... டியல்மாதர் வாங்கு பகழி விழியை மோந்து பகலு மிரவும் வாய்ந்த துயிலை மிகவுந் ...... தணியாத வாஞ்சை யுடைய அடிமை நீண்ட பிறவி யலையை நீந்தி அமல அடிவந் ...... தடைவேனோ ஓங்க லனைய பெரிய சோங்கு தகர மகர மோங்கு ததியின் முழுகும் ...... பொருசூரும் ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில துலவுந் ...... தனிவேலா வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருக வேங்கை வடிவு மருவுங் ...... குமரேசா வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டு மளவி லுதவும் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கோங்க முகையு(ம்) மெலிய வீங்கு புளக களபம் ஏந்து(ம்) குவடு குழையும்படி காதல் கூர்ந்து ... கோங்க மரத்தின் மொட்டும் மெலியும்படியாக பருத்து, புளகாங்கிதத்தையும் (சந்தனக்) கலவையையும் கொண்ட மலை போன்ற மார்பகங்கள் குழையும்படியாக காதல் மிகுந்து, குழையை அமளி தோய்ந்து குலவும் இனிய தேங்கு கலவி அமுது உண்டு ... தளிர் மலர் விரித்த படுக்கையில் தோய்ந்து குலவுகின்ற இனிமையானதும், நிறைந்ததுமான சேர்க்கை அமுதத்தை உண்டு, இயல் மாதர் வாங்கு பகழி விழியை மோந்து பகலும் இரவும் வாய்ந்த துயிலை மிகவும் தணியாத வாஞ்சை உடைய அடிமை ... அழகிய விலைமாதர்கள் செலுத்திய பாணமாகிய கண்களை மோந்து, பகலும் இரவும் ஏற்படும் தூக்கம் அதிகரித்து, குறைவுபடாத விருப்பம் பூண்ட அடிமையாகிய நான், நீண்ட பிறவி அலையை நீந்தி அமல அடி வந்து அடைவேனோ ... பெரிய பிறவிக் கடலை நீந்தி, குற்றமற்ற உனது திருவடியை சேரப் பெறுவேனோ? ஓங்கல் அனைய பெரிய சோங்கு தகர் அ(ம்) மகரம் ஓங்கு உததியின் முழுகும் பொரு சூரும் ஓய்ந்து பிரமன் வெருவ ... மலை போன்ற பெரிய கப்பல்களும், ஆண் சுறா மீன்களும், அந்த மகர மீன்களும் நிறைந்துள்ள கடலில் (மாமரமாக) முழுகிச் சண்டை செய்த சூரனும் தளர்ச்சி அடைய, பிரமன் அஞ்ச, வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில் அது உலவும் தனி வேலா ... அழகு அமைந்த கழுகு மலையில்* மயில் ஏறி உலவுகின்ற ஒப்பற்ற வேலனே, வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக வேங்கை வடிவு மருவும் குமரேசா ... புலிகள் உள்ள காட்டில் வேடர்கள் திகைக்க, வள்ளியாகிய பெண்ணின் மனம் உருக, வேங்கை மர உருவத்தை எடுத்த குமரேசா, வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே. ... வேண்டி நிற்கும் அடியார்களும் புலவர்களும் உன்னை வேண்ட, வேண்டுதற்கு அருமையான பொருளை (அவர்களுக்கு) வேண்டிய அளவுக்குத் தந்து உதவும் பெருமாளே. |
* கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.1035 pg 1.1036 pg 1.1037 WIKI_urai Song number: 416 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 634 - kOnga mugai (kazhugumalai) kOnga mukaiyu meliya veengu puLaka kaLapa mEnthu kuvadu kuzhaiyum ...... padikAthal kUrnthu kuzhaiyai amaLi thOynthu kulavu miniya thEngu kalavi yamuthuN ...... diyalmAthar vAngu pakazhi vizhiyai mOnthu pakalu miravum vAyntha thuyilai mikavun ...... thaNiyAtha vAnjai yudaiya adimai neeNda piRavi yalaiyai neenthi amala adivan ...... thadaivEnO Onga lanaiya periya sOngu thakara makara mOngu thathiyin muzhukum ...... porucUrum Oynthu piraman veruva vAyntha kuruku malaiyil Urnthu mayila thulavun ...... thanivElA vEngai yadavi maRavar Enga vanithai yuruka vEngai vadivu maruvung ...... kumarEsA vENdu madiyar pulavar vENda ariya poruLai vENdu maLavi luthavum ...... perumALE. ......... Meaning ......... kOnga mukaiyu(m) meliya veengu puLaka kaLapam Enthu(m) kuvadu kuzhaiyumpadi kAthal kUrnthu: The breasts of these whores are plumpier than the buds of kOngu tree (cherry plum); they are in a state of ecstasy, having been smeared with sandalwood paste, and look like mountains; the excessive passion makes them mellow; kuzhaiyai amaLi thOynthu kulavum iniya thEngu kalavi amuthu uNdu: lying on a bed, spread with fresh flowers, and cuddling them, imbibing the sweet nectar of union, filled up to the brim, iyal mAthar vAngu pakazhi vizhiyai mOnthu pakalum iravum vAyntha thuyilai mikavum thaNiyAtha vAnjai udaiya adimai: sniffing the arrow-like eyes wielded by the beautiful women, and feeling increasingly sleepy day and night, I have become a bonded slave to the unquenchable thirst of desire; neeNda piRavi alaiyai neenthi amala adi vanthu adaivEnO: when will I be able to swim across the vast sea of birth and attain Your unblemished and hallowed feet? Ongal anaiya periya sOngu thakar a(m) makaram Ongu uthathiyin muzhukum poru cUrum Oynthu piraman veruva: Huge ships looking like mountains, many male sharks and female makara fish are copiously seen in the sea in which the demon SUran hid as a mango tree; he grew weary fighting the war and BrahmA became very scared, vAyntha kuruku malaiyil Urnthu mayil athu ulavum thani vElA: when You mounted the peacock and roamed about in Mount Kazhugumalai*, Oh Lord with the matchless spear! vEngai adavi maRavar Enga vanithai uruka vEngai vadivu maruvum kumarEsA: The hunters living in the tiger-infested forest were perplexed and the damsel VaLLi's heart melted when You stood in the disguise of a neem tree, Oh Lord KumarA! vENdum adiyar pulavar vENda ariya poruLai vENdum aLavil uthavum perumALE.: As the entreating devotees and poets stand praying before You, the rarest thing that is beyond seeking is bestowed upon them by You to their heart's content, Oh Great One! |
* Kazhugumalai is near KOvilpatti on the route to SrivillipuththUr. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |