திருப்புகழ் 625 கடினதட கும்ப  (குன்றக்குடி)
Thiruppugazh 625 kadinathadakumba  (kundRakkudi)
Thiruppugazh - 625 kadinathadakumba - kundRakkudiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தந்த தானன தனதனன தந்த தானன
     தனதனன தந்த தானன ...... தனதான

......... பாடல் .........

கடினதட கும்ப நேரென வளருமிரு கொங்கை மேல்விழு
     கலவிதரு கின்ற மாதரொ ...... டுறவாடிக்

கனவளக பந்தி யாகிய நிழல்தனிலி ருந்து தேனுமிழ்
     கனியிதழை மென்று தாடனை ...... செயலாலே

துடியிடைநு டங்க வாள்விழி குழைபொரநி ரம்ப மூடிய
     துகில்நெகிழ வண்டு கோகில ...... மயில்காடை

தொனியெழவி ழைந்து கூரிய கொடுநகமி சைந்து தோள்மிசை
     துயிலவச இன்ப மேவுத ...... லொழிவேனோ

இடிமுரச றைந்து பூசல்செய் அசுரர்கள்மு றிந்து தூளெழ
     எழுகடல்ப யந்து கோவென ...... அதிகோப

எமபடரு மென்செய் வோமென நடுநடுந டுங்க வேல்விடு
     இரணமுக சண்ட மாருத ...... மயிலோனே

வடிவுடைய அம்பி காபதி கணபதிசி றந்து வாழ்தட
     வயலிநகர் குன்ற மாநக ...... ருறைவோனே

வகைவகைபு கழ்ந்து வாசவன் அரிபிரமர் சந்த்ர சூரியர்
     வழிபடுதல் கண்டு வாழ்வருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கடின தட கும்ப நேர் என வளரும் இரு கொங்கை மேல் விழு
கலவி தருகின்ற மாதரொடு உறவாடி
... வலிமையுள்ளதும்,
அகலமானதும், குடத்துக்கு ஒப்பானதுமான வளர்கின்ற இரண்டு
மார்பகங்களின் மேலே விழுகின்ற புணர்ச்சி தருகின்ற விலைமாதருடன்
உறவு பூண்டு,

கன அளக பந்தியாகிய நிழல் தனில் இருந்து தேன் உமிழ்
கனி இதழை மென்று தாடனை செயலாலே
... கனத்த கூந்தல்
கட்டாகிய நிழலில் இருந்து, தேனின் இனிப்பைத் தருகின்ற கொவ்வைக்
கனி போன்ற வாயிதழை மென்று, காம சாஸ்திரப்படி தட்டுகை என்னும்
செயல் செய்து,

துடி இடை நுடங்க வாள் விழி குழை பொர நிரம்ப மூடிய
துகில் நெகிழ வண்டு கோகில(ம்) மயில் காடை தொனி எழ
...
உடுக்கை போன்ற இடை துவள, வாள் போன்ற கண்கள் குண்டலங்கள்
அளவும் சென்று போர் புரிய, முழுதும் மூடியிருக்கும் புடவை தளர்ந்து
விழ, வண்டு, குயில், மயில், காடை இவைகளின் புட்குரல் ஒலிக்க,

விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில (அ)வச
இன்ப மேவுதல் ஒழிவேனோ
... விரும்பி, கூர்மையான வளைந்த
நகக் குறிகளை வைத்து, தோளின் மேல் தூங்கும் மயக்க இன்பத்தை
நாடுதலை நான் தவிர்க்க மாட்டேனோ?

இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழ
எழு கடல் பயந்து கோ என அதி கோப எம படரும் என்
செய்வோம் என நடு நடு நடுங்க வேல் விடு இரண முக சண்ட
மாருத மயிலோனே
... இடி போல் முழங்கும் பேரிகையை ஒலித்துப்
போர் செய்யும் அசுரர்கள் தோல்வி உற்று முறிபட்டுப் பொடியாக, ஏழு
கடல்களும் அஞ்சி கோ என்று ஒலிக்க, மிகவும் கோபமுள்ள யம
தூதர்களும் என்ன செய்வோம் என்று மிக நடு நடுங்க, வேலைச் செலுத்தி,
போர்க்களத்தில் பெருங்காற்று போலச் சிறகை வீசிப் பறக்கும் மயில் மீது
அமர்ந்த வீரனே,

வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ் தட வயலி
நகர் குன்ற மா நகர் உறைவோனே
... அழகிய அக்கினீசுரர்
என்னும் சிவபெருமானும், பொய்யாக் கணபதியும்* சிறந்து விளங்கும்
இடமாகிய வயலூரிலும்*, குன்றக்குடியிலும்** வாழ்பவனே,

வகை வகை புகழ்ந்து வாசவன் அரி பிரமர் சந்த்ர சூரியர்
வழிபடுதல் கண்டு வாழ்வு அருள் பெருமாளே.
... வித விதமாக
உன்னைப் புகழ்ந்து இந்திரன், திருமால், பிரமன் ஆகியோரும்
சந்திரனும் சூரியனும் வழிபடுவதைப் பார்த்து அவர்களுக்கு வாழ்வு
அருளிய பெருமாளே.


* வயலூர் சிவபெருமானுக்கு 'அக்கினீசுவரர்' என்று பெயர். கணபதிக்குப்
'பொய்யாக் கணபதி' என்று பெயர்.


** குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே
7 மைலில் உள்ளது. இதற்கு 'மயூரமலை' என்ற பெயரும் உண்டு.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1017  pg 1.1018 
 WIKI_urai Song number: 407 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 625 - kadinathada kumba (kundRakkudi)

kadinathada kumpa nErena vaLarumiru kongai mElvizhu
     kalavitharu kinRa mAtharo ...... duRavAdik

kanavaLaka panthi yAkiya nizhalthanili runthu thEnumizh
     kaniyithazhai menRu thAdanai ...... seyalAlE

thudiyidainu danga vALvizhi kuzhaiporani rampa mUdiya
     thukilnekizha vaNdu kOkila ...... mayilkAdai

thoniyezhavi zhainthu kUriya kodunakami sainthu thOLmisai
     thuyilavasa inpa mEvutha ...... lozhivEnO

idimurasa Rainthu pUsalsey asurarkaLmu Rinthu thULezha
     ezhukadalpa yanthu kOvena ...... athikOpa

emapadaru mensey vOmena nadunaduna dunga vElvidu
     iraNamuka chaNda mArutha ...... mayilOnE

vadivudaiya ampi kApathi kaNapathisi Ranthu vAzhthada
     vayalinakar kunRa mAnaka ...... ruRaivOnE

vakaivakaipu kazhnthu vAsavan aripiramar chanthra cUriyar
     vazhipaduthal kaNdu vAzhvaruL ...... perumALE.

......... Meaning .........

kadina thada kumpa nEr ena vaLarum iru kongai mEl vizhu kalavi tharukinRa mAtharodu uRavAdi: Making love to the whores and falling over their strong, wide, pot-like and bloating breasts,

kana aLaka panthiyAkiya nizhal thanil irunthu thEn umizh kani ithazhai menRu thAdanai seyalAlE: resting under the shade of their thick tuft of hair, munching their kovvai-fruit-like lips that taste sweet like honey, patting them gently as defined in the text of erotica,

thudi idai nudanga vAL vizhi kuzhai pora nirampa mUdiya thukil nekizha vaNdu kOkila(m) mayil kAdai thoni ezha: seeing their hand-drum-like waist caving in, their sword-like eyes fighting with the swinging ear-studs, their fully-covering sari loosening and falling down, and various chirping sounds of beetle, cuckoo, peacock and partridge emanating from their throat,

vizhainthu kodu nakam isainthu thOL misai thuyila (a)vasa inpa mEvuthal ozhivEnO: I have been willingly accepting marks of sharp and crooked nails on my body; why can I not shun the pursuit of the blissful pleasure of sleeping on their shoulders?

idi murasu aRainthu pUsal sey asurarkaL muRinthu thUL ezha ezhu kadal payanthu kO ena athi kOpa ema padarum en seyvOm ena nadu nadu nadunga vEl vidu iraNa muka chaNda mArutha mayilOnE: The demons who beat their drums making a thunderous noise and waged a war were defeated and shattered to pieces; the seven seas were terrified, screaming loudly and the angry messengers of Yaman (God of Death) were shivering with fear wondering what they could do when You wielded the spear and mounted the peacock that blew its wings raising a storm in the battlefield, Oh Valorous One!

vadivudaiya ampikApathi kaNapathi siRanthu vAzh thada vayali nakar kunRa mA nakar uRaivOnE: The handsome Lord Agneeswarar (SivA) and the truthful Lord GaNapathi* are seated in the famous place VayalUr, which is also Your abode along with KundRakkudi**, Oh Lord!

vakai vakai pukazhnthu vAsavan ari piramar chanthra cUriyar vazhi paduthal kaNdu vAzhvu aruL perumALE.: Extolling You in various ways, Indra, Lord VishNu, Brahma, the Moon and the Sun offer worship, and seeing their devotion, You granted them prosperity, Oh Great One!


* The presiding Lord SivA in VayalUr is known as Agneeswarar; VinAyagar is known as the Truthful Ganapathi.


** KundRakkudi is in RAmanAthapuram district, 7 miles west of KAraikudi. It has another name called MayUramalai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 625 kadinathada kumba - kundRakkudi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]