பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1018

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - குன்றக்குடி) திருப்புகழ் உரை 545 407 வலிமையும் அகலமும் உள்ள குடத்துக்கு ஒப்பாக வளர்கின்ற இரு கொங்கைகளின் மேலே விழுகின்ற புணர்ச்சி தருகின்ற பெண்களுடன் உறவுபூண்டு. கனத்த கூந்தற் கட்டாகிய நிழலில் இருந்து, தேனின் இனிப்பைத் தருகின்ற கொவ்வைக்க்னி போன்ற வாயிதழை மென்று, த்ாட்ன்னச் செயலாலே (காம சாத்திரப்படி தட்டுகை என்னும் செயல் செய்து) உடுக்கை போன்ற இடை துவள, வாள்போன்ற கன்கள் காதில் உள்ள குழைகள் அளவும் சென்று போர்புரிய, நிரம்ப மூடியிருக்கும் புட்ைவை தளர்ந்து விழ வண்டு, குயில், மயில், க்ாடை இவைகளின் ஒலி உண்டாக, ஆசையுடன் கூர்மையான வளைந்த நகக்குறிகளை வைத்து, தோளின்மேல் தூங்கும் மயக்க இன்பத்தை விரும்புதலை ஒழிக்கமாட்டேனா. இடிபோல முழங்கும் முரசு (பேரிகை) வாத்தியத்தை ஒலித்து, போர் செயும் அசுரர்கள் தோல்வியுற்று முறிபட்டுப் பொடியாக, ஏழு கடல்களும் பயங்கொண்டு - கோ - என்று சப்திக்க. அதிக கோபமுள்ள யமதுரதர்களும் என் செய்வோம் என்று நடு நடுங்க வேலாயுத்த்தைச் செலுத்தும் மயிலோனே! போர்க்கள்த்திற் பெருங்க்ாற்றுபோலச் (சிறகை வீசிப் பறக்கும்) மயிலோனே! அழகு நிறைந்த அம்பிகாபதி (அக்கினிசுரர் என்னும்) சிவப்ெரும்ானும், கணபதி (ப்ொய்யாக் கணபதி) என்னும் விநாயகப் பெருமானும் சிறப்புடன் வாழ்கின்ற இடமாகிய வய்லூரிலும், குன்ற்மா ந்கர் என்னும் குன்றக்குடியிலும் வீற்றிருப்பவனே! விதம் விதமாக (உன்னைப்) புகழ்ந்து இந்திரன், திருமால் பிரமன், சந்திரன், சூரியன் இவர்கள் வழிபடுவதை அறிந்து அவர்களுக்கு வாழ்வு அருள் பெருமாளே! (அவச இன்பமேவுத லொழிவேனோ)