திருப்புகழ் 620 மாந்தளிர்கள் போல  (பூம்பறை)
Thiruppugazh 620 mAndhaLirgaLpOla  (pUmbaRai)
Thiruppugazh - 620 mAndhaLirgaLpOla - pUmbaRaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாந்ததன தான தாந்ததன தான
     தாந்ததன தான ...... தனதான

......... பாடல் .........

மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
     வாந்தவிய மாக ...... முறைபேசி

வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி
     வாழ்ந்தமனை தேடி ...... உறவாடி

ஏந்துமுலை மீது சாந்துபல பூசி
     ஏங்குமிடை வாட ...... விளையாடி

ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல்
     ஏய்ந்தவிலைமாதர் ...... உறவாமோ

பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
     தாஞ்செகண சேசெ ...... எனவோசை

பாங்குபெறு தாள மேங்கநட மாடு
     பாண்டவர்ச காயன் ...... மருகோனே

பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
     பூங்கதலி கோடி ...... திகழ்சோலை

பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
     பூம்பறையின் மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மாந்தளிர்கள் போல வேய்ந்த உடல் மாதர்
வா (பா)ந்தவியமாக முறை பேசி
... மாந்தளிர் போல் நிறமுள்ள
தோலால் மூடப்பட்ட உடலை உடைய விலைமாதர்கள் (காமுகரிடம்)
உறவு முறைகள் பலவற்றை உரிமையுடன் பேசிக் காட்ட வல்லவர்.

வாஞ்சை பெரு மோக சாந்தி தர நாடிவாழ்ந்த மனை தேடி
உறவாடி
... அவர்கள் மீது விருப்பமும், பெருத்த மோகமும் ஏற்பட்டு,
அதற்கு அமைதியைத் தர வேண்டி (அப்பொது மகளிர்) வாழ்ந்த
வீடுகளைத் தேடி, அவர்களோடு உறவாடி,

ஏந்து முலை மீது சாந்து பல பூசி ஏங்கும் இடை வாட
விளையாடி
... உயர்ந்து நிற்கும் மார்பில் சந்தனம் முதலிய பல நறு
மணங்களைப் பூசி, இளைத்து நிற்கும் இடை ஒடுங்க சரசமாக
விளையாடிப் (பின்னர்),

ஈங்கிசைகள் மேவ லாஞ்சனை இல்லாமல் ஏய்ந்த விலைமாதர்
உறவாமோ
... உபத்திரவங்கள் (ஹிம்சைகள்) உண்டாக, வெட்கம்
இன்றிக் கூடிய வேசையர்களின் உறவு நன்றோ?

பாந்த(ள்) முடி மீது தாந்த திமி தோதி தாஞ் செகண சேசெ
என ஓசை
... (காளிங்கன் என்ற) பாம்பின் முடியின் மேல் தாந்த
திமிதோதி தாஞ் செகண சேசெ என்ற இவ்வாறான தாள ஒத்துக்களோடு
ஓசைகளை

பாங்கு பெற தாளம் ஏங்க நடமாடும் பாண்டவர் சகாயன்
மருகோனே
... அழகாகத் தருகின்ற தாளம் ஒலிக்க நடனம்
ஆடியவனும், பாண்டவர்களின் துணைவனுமாகிய கண்ணனுடைய
மருகனே,

பூந்தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி
திகழ் சோலை
... பூக்களும் தளிர்களும் விளங்கும் வேங்கை மரங்களும்,
பலா மரங்களும், அழகிய வாழை மரங்களும் கோடிக் கணக்காகத் திகழும்
சோலைகளுடன்,

பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும்
பெருமாளே.
... அழகிய குளமும், உலவித் திரியும் கோம்பை* நாய்களும்
இருக்கும் பூம்பறையில்** வீற்றிருக்கும் பெருமாளே.


* கோம்பை - செந்நிறமான உயர் ஜாதி நாய்கள். மதுரை மாவட்டத்தில் உள்ளன.
காவலுக்கு ஏற்றவை.


** பூம்பறை கொடைக்கானலுக்கு மேற்கே 12 மைலில் வராககிரி மீது உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1001  pg 1.1002  pg 1.1003  pg 1.1004 
 WIKI_urai Song number: 402 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 620 - mAndhaLirgaL pOla (pUmbaRai)

mAnthaLirkaL pOla vEynthavudal mAthar
     vAnthaviya mAka ...... muRaipEsi

vAnjaiperu mOka sAnthithara nAdi
     vAzhnthamanai thEdi ...... uRavAdi

Enthumulai meethu sAnthupala pUsi
     Engumidai vAda ...... viLaiyAdi

eengisaikaL mEva lAnjanaiyi lAmal
     Eynthavilai mAthar ...... uRavAmO

pAnthaNmudi meethu thAnthathimi thOthi
     thAnjekaNa chEche ...... enavOsai

pAngupeRu thALa mEnganada mAdu
     pANdavarsa kAyan ...... marukOnE

pUnthaLirkaL veeRu vEngaikaLpa lAsu
     pUngathali kOdi ...... thikazhsOlai

pUnthadamu lAvu kOmpaikaLku lAvu
     pUmpaRaiyin mEvu ...... perumALE.

......... Meaning .........

mAnthaLirkaL pOla vEyntha udal mAthar vA(pA)nthaviyamAka muRai pEsi: The skin covering their body has the complexion of the young leaf bud of the mango tree; and these whores take liberty (with their suitors) and are capable of calling them by many a relationship.

vAnjai peru mOka sAnthi thara nAdivAzhntha manai thEdi uRavAdi: Hankering after them and affected by extreme passion, I sought to calm my mind by going in search of the whore-houses and carried on my liaison with them;

Enthu mulai meethu sAnthu pala pUsi Engum idai vAda viLaiyAdi: smearing pastes of sandalwood powder and other aromatic substances on their highly developed bosom and engaging in love-some acts that made their slim waist even more slender,

eengisaikaL mEva lAnjanai illAmal Eyntha vilai mAthar uRavAmO: I suffered later from many woes; was it worth the effort to have had such association with those shameless whores?

pAntha(L) mudi meethu thAntha thimi thOthi thAnj chekaNa chEche ena Osai: Upon the hood of the serpent (KALingan), He danced to the meter of "thAntha thimi thOthi thAnj chekaNa chEche"

pAngu peRa thALam Enga nadamAdum pANdavar sakAyan marukOnE: making a resonating rhythmic sound; He was the protector of the PANdavAs; and You are the nephew of that KrishNA!

pUnthaLirkaL veeRu vEngaikaL palAsu pUm kathali kOdi thikazh sOlai: There are many groves filled with millions of neem trees, jack-fruit trees and plantains, lush with flowers and young leaves,

pUm thadam ulAvu kOmpaikaL kulAvu pUmpaRaiyil mEvum perumALE.: along with beautiful ponds, around this town where kOmbai* dogs roam about; this place PUmpaRai** is Your abode, Oh Great One!


* kOmbai dogs are of a high class breed, reddish brown in colour, found in Madhurai District; they are great house-guards.


** PUmpaRai is located on top of VarAkagiri, 12 miles west of the resort-town, KodaikkAnal.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 620 mAndhaLirgaL pOla - pUmbaRai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]