திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 611 ஆதிமக மாயி (ஊதிமலை) Thiruppugazh 611 AdhimagamAyi (Udhimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான ......... பாடல் ......... ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த ஆவுடைய மாது தந்த ...... குமரேசா ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து பூரணசி வாக மங்க ...... ளறியாதே பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து போகமுற வேவி ரும்பு ...... மடியேனை நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர நீலமயி லேறி வந்த ...... வடிவேலா ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து ஊழியுணர் வார்கள் தங்கள் ...... வினைதீர ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஆதிமக மாயி யம்பை ... முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும், அம்பாளும், தேவி சிவனார்மகிழ்ந்த ஆவுடைய மாது ... தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள்* என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார் தந்த குமரேசா ... பெற்றருளிய குமாரக் கடவுளே, ஆதரவதாய் வருந்தி ... அன்புடன் மனம் கசிந்து உருகி, ஆதியருணேச ரென்று ... முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே என்று துதித்து, ஆளும் உனையே வணங்க அருள்வாயே ... ஆட்கொள்கின்ற உன்னை வணங்க அருள்வாய். பூதமதுவான ஐந்து பேதமிடவே அலைந்து ... ஐந்து பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய இந்த உடம்போடு எங்கெல்லாமோ அலைந்து, பூரண சிவாகமங்கள் அறியாதே ... நிறைவான சிவ ஆகமங்களைத் தெரிந்துகொள்ளாமல், பூணுமுலை மாதர் தங்கள் ... நகைகள் அணிந்த மார்புடைய பெண்களின் ஆசைவகை யேநி னைந்து ... விதவிதமான ஆசைகளையே நினைந்து, போகமுறவே விரும்பும் அடியேனை ... இன்பம் சுகிக்கவே விரும்பும் என்னை நீதயவதாய் இரங்கி ... நீ மிக்க கருணை கொண்டு இரக்கப்பட்டு நேசவருளே புரிந்து ... அன்போடு திருவருள் புரிந்து, நீதிநெறியே விளங்க ... சைவ நீதியும் சன்மார்க்க நெறியும் விளங்குமாறு உபதேச நேர்மை ... எனக்கு உபதேசம் செய்த தன்மையானது, சிவனார் திகழ்ந்த காதிலுரை ... சிவபிரானின் விளங்கும் காதில் உரைத்த வேத மந்த்ர ... ஓம் என்னும் பிரணவ மந்திரப் பொருளே ஆகும். நீலமயி லேறி வந்த ... அவ்வாறு எனக்கு உபதேசிக்க நீலமயிலில் ஏறி வந்தருளிய, வடிவேலா ... கூர்மையான வேலாயுதத்தைக் கொண்ட கடவுளே, ஓதுமறை யாகமஞ்சொல் ... ஓதப்படும் வேதங்கள், ஆகமங்கள் ஆகியவை கூறும் யோகமதுவே புரிந்து ... சிவயோகத்தையே செய்து, ஊழியுணர்வார்கள் தங்கள் ... விதியின் வழியை நன்கு உணரும் பெரியோர்களின் வினைதீர ... வினைகள் தீருமாறு ஊனும் உயிராய் வளர்ந்து ... அவர்களின் உடலோடும் உயிரோடும் கலந்து வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ... கீர்த்தியுடன் சிவானுபவ வாழ்வைத் தந்த ஊதிமலை* மீது உகந்த பெருமாளே. ... ஊதிமலை** மேல் உள்ளம் உவந்து வாழும் பெருமாளே. |
* ஆவுடையாள் என்றால் பசு ஏறும் பிராட்டி - திருப்பரங்குன்றத்தில் உள்ள பார்வதி தேவிக்கு ஆவுடை நாயகி எனப் பெயர் உண்டு. |
** ஊதிமலை கோவை மாவட்டத்தில் தாராபுரத்திலிருந்து காங்கேயம் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.977 pg 1.978 pg 1.979 pg 1.980 WIKI_urai Song number: 393 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 611 - Adhimaga mAyi (Udhimalai) Adhimaga mAyi ambai dhEvi sivanAr magizhndha Avudaiya mAdhu thandha ...... kumarEsA Adharava dhAy varundhi Adhi aruNEsar endru ALum unaiyE vaNanga ...... aruLvAyE bUtham adhuvAna aindhu bEdham idavE alaindhu pUraNa sivAgamangaL ...... aRiyAdhE pUNumulai mAdhar thangaL Asai vagaiyE ninaindhu bOgamuRavE virumbum ...... adiyEnai needhayava dhAy irangi nEsa aruLE purindhu needhineRiyE viLanga ...... upadhEsa nErmai sivanAr thigazhndha kAdhilurai vEdhamanthra neelamayil ERi vandha ...... vadivElA OdhumaRai Aga mansol yOgamadhuvE purindhu UzhiyuNar vArgaL thangaL ...... vinaitheera Unum uyirAy vaLarndhu Osaiyudan vAzhvu thandha Udhimalai meedh ugandha ...... perumALE. ......... Meaning ......... Adhimaga mAyi ambai: First and foremost Mother, the Great, dhEvi sivanAr magizhndha Avudaiya mAdhu: and the consort of Lord SivA, with the name Aavudaiya Nayaki* in whose company the Lord delights, thandha kumarEsA: She delivered You, Oh Kumaresa! Adharava dhAy varundhi Adhi aruNEsar endru: When I call Your name with love and melting heart as the Prime Lord with Golden Red complexion, ALum unaiyE vaNanga aruLvAyE: You must bless me to worship You, my Protector! bUtham adhuvAna aindhu bEdham idavE alaindhu: With this body of mine, which was formed by the permutations of the five elements, I was wandering all over, pUraNa sivAgamangaL aRiyAdhE: without knowing the fulsome scriptures or Vedas; pUNumulai mAdhar thangaL Asai vagaiyE ninaindhu: thinking constantly about the bejewelled chests of women and the varieties of passionate desires; bOgamuRavE virumbum adiyEnai: and my longing was only for such lustful acts. needhayava dhAy irangi nEsa aruLE purindhu: Then, You took pity on me, and with Your gracious love, needhineRiyE viLanga: showing the Saivite Way and the righteous path, upadhEsa nErmai: taught me in a manner similar to sivanAr thigazhndha kAdhilurai vEdhamanthra: Your preaching of OM, the VEda ManthrA, into the ears of Lord SivA. neelamayil ERi vandha vadivElA: You came to me mounted on Your blue peacock, Oh VElA! OdhumaRai Aga mansol yOgamadhuvE purindhu UzhiyuNar vArgaL: For those who practise, and realize the Truth from, yOgAs in accordance with the directions of the scriptures, thangaL vinaitheera Unum uyirAy vaLarndhu: their bondage is broken by You; and You integrate fully with their bodies and souls Osaiyudan vAzhvu thandha: and add lasting divine bliss to their lives at Udhimalai meedh ugandha perumALE.: Udhimalai** which is Your favourite abode, Oh Great One! |
* Aavudaiya NAyagi means literally the Goddess mounting a cow; this is the name of PArvathi in ThirupparangkundRam. |
** Udhimalai is in Coimbatore District, 10 miles away from ThArApuram on the way to KangkEyam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |