திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 610 மனையவள் நகைக்க (ஞானமலை) Thiruppugazh 610 manaiyavaLnagaikka (gnAnamalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தனத்த தான தனதன தனத்த தான தனதன தனத்த தான ...... தனதான ......... பாடல் ......... மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை ...... தமரோடும் மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும் வசைமொழி பிதற்றி நாளு ...... மடியேனை அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி னகமதை யெடுத்த சேம ...... மிதுவோவென் றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது மணுகிமு னளித்த பாத ...... மருள்வாயே தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை தமருக மறைக்கு ழாமு ...... மலைமோதத் தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு சமரிடை விடுத்த சோதி ...... முருகோனே எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத எழுதரிய பச்சை மேனி ...... யுமைபாலா இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக இலகிய சசிப்பெண் மேவு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மனையவள் நகைக்க வூரின் அனைவரு நகைக்க ... மனைவி நகைக்கவும், ஊரவர் யாவரும் நகைக்கவும், லோக மகளிரு நகைக்க ... உலகத்திலுள்ள மாதர்களெல்லாம் நகைக்கவும், தாதை தமரோடும் மனமது சலிப்ப ... தந்தையும் சுற்றத்தாரும் உள்ளம் வெறுப்படையவும், நாயன் உளமது சலிப்ப ... என்னுடைய மனமும் மிகச் சலிப்படையவும், யாரும் வசைமொழி பிதற்றி ... எல்லோரும் பழிமொழிகளை ஆராயாமல் கூறி, நாளும் அடியேனை அனைவரும் இழிப்ப ... தினம்தோறும் என்னை அனைவரும் இகழவும், நாடு மனவிருள் மிகுத்து ... எண்ணமிடும் மனத்தில் இருள் மிகுந்து நாடின் அகமதை யெடுத்த சேமம் ... யோசித்துப் பார்த்தால் நான் பிறந்து பெற்ற பயன் இதுவோவென்று அடியனு நினைத்து நாளும் ... இதுதானோ என்று நானும் நாள்தோறும் நினைத்து உடலுயிர் விடுத்த போதும் ... கடைசியில் உடலினின்றும் உயிரை விடத் துணிந்த சமயத்தில்* அணுகிமுன் அளித்த பாதம் அருள்வாயே ... என்னருகே வந்து முன்பு நீ அளித்த பாத தீக்ஷையை இப்போதும் அருள்வாயாக. தனதன தனத்த தான என முரசொலிப்ப ... தனதன தனத்த தான என்ற தாளத்தில் முரசு ஒலிக்க, வீணை தமருக மறைக்குழாமும் அலைமோத ... வீணை, உடுக்கை, வேத கோஷங்கள் இவையாவும் அலைமோதுவது போலப் பெருக, தடிநிகர் அயிற்கடாவி ... மின்னல் போன்ற ஒளிவிடும் வேலாயுதத்தை வீசி அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி முருகோனே ... அசுரர்கள் மாயும்படி போர்க்களத்தில் செலுத்திய ஜோதி முருகனே, எனைமனம் உருக்கி யோக அநுபுதி யளித்த பாத ... என் மனத்தை உருக்கி, யோக அநுபூதியை* அளித்த திருவடிகளை உடையவனே, எழுதரிய பச்சை மேனி உமைபாலா ... எழுதுதற்கு அரியதான மரகதப் பச்சை மேனியள் உமாதேவியின் பாலனே, இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக ... தேவர்கள் துதிக்க ஞானமலையில்** வீற்றிருக்கும் குறத்தி வள்ளியின் மணவாளனே, இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே. ... விளங்குகின்ற இந்திராணியின் மகள் தேவயானை விரும்பும் பெருமாளே. |
* அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது. தம் வாழ்க்கைத் துன்பத்தை நினைத்து உயிர் விடத் துணிந்ததையும், முருகன் அவருக்கு பாத தீக்ஷை தந்து யோக அநுபூதி அருளிய திறனையும் இங்கு விளக்குகின்றார். |
** ஞானமலை நாமக்கல்லுக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.975 pg 1.976 pg 1.977 pg 1.978 WIKI_urai Song number: 392 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 610 - manaiyavaL nagaikka (gnAnamalai) manaiyavaL nagaikka Urin anaivaru nagaikka lOka magaLiru nagaikka thAdhai ...... thamarOdum manamadhu salippa nAyan uLamadhu salippa yArum vasaimozhi pidhatri nALum ...... adiyEnai anaivarum izhippa nAdu manaviruL miguththu nAdin agamadhai eduththa sEmam ...... idhuvOvendru adiyanu ninaiththu nALum udaluyir viduththa pOdhum aNugimun aLiththa pAdham ...... aruLvAyE thanathana thanaththa thAna enamura solippa veeNai thamaruga maRaikku zhAmum ...... alaimOdhath thadiniga rayiRka dAvi asurargaL iRakku mARu samaridai viduththa jOthi ...... murugOnE enaimana murukki yOga anubuthi aLiththa pAdha ezhudhariya pacchai mEni ...... umaibAlA imaiyavar thudhippa gnAna malaiyuRai kuRaththi pAga ilagiya sasippeN mEvu ...... perumALE. ......... Meaning ......... manaiyavaL nagaikka Urin anaivaru nagaikka: My wife laughed at me, and the entire town also laughed at me; lOka magaLiru nagaikka: all the women of this world laughed at me; thAdhai thamarOdum manamadhu salippa: my father and all relatives were disgusted with me; nAyan uLamadhu salippa: I felt like a dog with a mind completely frustrated; yArum vasaimozhi pidhatri nALum adiyEnai: everyday, I was called awful names by each and everyone; anaivarum izhippa: and I became the target of all the people's jeering. nAdu manaviruL miguththu: My mind could not think and became totally dark. nAdin agamadhai eduththa sEmam idhuvOvendru adiyanu ninaiththu nALum: If I could think at all, the only thought that came to my mind everyday was "What is the purpose of my life in this body?". udaluyir viduththa pOdhum aNugimun: When my body prepared itself to shed its life, You came towards me* aLiththa pAdham aruLvAyE: and gracefully showed me Your two feet; will You show them again? thanathana thanaththa thAna enamura solippa: The drums beat to the meter "thanathana thanaththa thAna"; veeNai thamaruga maRaikku zhAmum alaimOdhath: and the instrument VeenNai, hand-drums (udukkai) and the chanting of VEdAs by multitude of people were all sounding like sea waves, when thadiniga rayiRka dAvi asurargaL iRakku mARu: You took Your spear, shining like a lightning, and forcefully threw it against the demons (asuras) samaridai viduththa jOthi murugOnE: in the battlefield, Oh MurugA, the Luminous One! enaimana murukki yOga anubuthi aLiththa pAdha: My heart simply melted when You preached me the yOgA Experience by showing Your lotus feet!* ezhudhariya pacchai mEni umaibAlA: You are the son of UmAdEvi whose emerald-green colour is undescribable! imaiyavar thudhippa gnAna malaiyuRai kuRaththi pAga: All the DEvAs praise You at GnAnamalai** which is the abode of Yourself and Your consort VaLLi, the damsel of the KuRavAs! ilagiya sasippeN mEvu perumALE.: You are also the consort of beautiful DEvayAnai, the daughter of IndrANi, Oh Great One! |
* These incidents actually took place in the life of AruNagirinAthar. Murugan came to his rescue when he attempted suicide by jumping from the tower of the temple at ThiruvaNNAmalai and preached to him the yOgA Experience. |
** GnAnamalai is said to be near NAmakkal. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |