திருப்புகழ் 603 புற்புதம்  (திருச்செங்கோடு)
Thiruppugazh 603 puRpudham  (thiruchchengkodu)
Thiruppugazh - 603 puRpudham - thiruchchengkoduSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்ததன தான தத்ததன தான
     தத்ததன தான ...... தனதான

......... பாடல் .........

புற்புதமெ னாம அற்பநிலை யாத
     பொய்க்குடில்கு லாவு ...... மனையாளும்

புத்திரரும் வீடு மித்திரரு மான
     புத்திசலி யாத ...... பெருவாழ்வு

நிற்பதொரு கோடி கற்பமென மாய
     நிட்டையுடன் வாழு ...... மடியேன்யான்

நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
     நிற்கும்வகை யோத ...... நினைவாயே

சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
     சக்ரகதை பாணி ...... மருகோனே

தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற
     வைத்தவொரு காழி ...... மறையோனே

கற்புவழு வாது வெற்படியின் மேவு
     கற்றைமற வாணர் ...... கொடிகோவே

கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
     கற்பதரு நாடர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

புற்புதம் என் நாமம் ... நீர்க்குமிழி என்னும் பெயரோடு

அற்ப நிலையாத ... சிறிது காலமும் நிலைக்காத

பொய்க்குடில் ... பொய்க் குடிசை போல் இருக்கும் இந்த உடலோடு

குலாவு மனையாளும் ... குலாவுகின்ற என் மனைவியும்,

புத்திரரும் வீடு மித்திரரும ஆன் ... புதல்வர்களும், வீடும்,
நண்பர்களும், ஆன சூழலில்

புத்திசலியாத பெருவாழ்வு ... புத்தி சோர்வடையாமல், இந்த வாழ்வு
பெரும் வாழ்வு,

நிற்பதொரு கோடி கற்பமென ... இது நிலைத்து நிற்பது ஒரு கோடி
கற்ப காலம் என்று கருதும்

மாய நிட்டையுடன் ... மயக்க தியான நிலையில்

வாழும் அடியேன்யான் ... வாழ்கின்ற அடியேனாகிய யான்

நித்தநின தாளில் வைத்ததொரு காதல் ... நாள்தோறும் உனது
பதத்தில் வைத்த ஒப்பற்ற அன்பானது

நிற்கும்வகை ஓத நினைவாயே ... நிலைத்து நிற்கும் வழியை
உபதேசிக்க நீ நினைத்தருள வேண்டும்.

சற்பகிரி நாத ... நாக மலையாகிய* இந்தத் திருச்செங்கோட்டுத்
தலத்தின் நாதனே,

முத்தமிழ்விநோத ... மூன்று தமிழிலும்** நன்கு பொழுது போக்குபவனே,

சக்ரகதை பாணி மருகோனே ... சக்கரத்தையும் கதையையும்
கரங்களில் ஏந்திய திருமால் மருகனே,

தர்க்கசமண் மூகர் ... வாது செய்து தோற்று வாயிழந்த ஊமைகளாய்
நின்ற சமணர்களை

மிக்க கழுவேற வைத்த ... மிகுந்த கழுமரங்களில் ஏறவைத்த

ஒரு காழி மறையோனே ... ஒப்பற்ற சீகாழி அந்தணனாம்
திருஞானசம்பந்தனே***,

கற்பு வழுவாது ... கற்புநிலை பிறழாது இருப்பவளும்,

வெற்பு அடியின் மேவு கற்றைமறவாணர் கொடிகோவே ...
வள்ளிமலைக்கு அடியில் கூட்டமாக வாழும் வேடர்களின்
குலக்கொடியானவளுமான வள்ளியின் கணவனே,

கைத்த அசுரேசர் மொய்த்தகுல கால ... உன்னை வெறுத்த அசுரத்
தலைவர்களின் நெருங்கிய குலத்துக்கு யமனே,

கற்பதரு நாடர் பெருமாளே. ... கற்பக விருக்ஷம் உள்ள
தேவநாட்டவருக்குப் பெருமாளே.


* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து
6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால்
நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.


'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே'
- என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.


** இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்.


*** முருகப் பெருமானே திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்பது
அருணகிரிநாதர் சுவாமிகளின் கருத்து.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.953  pg 1.954  pg 1.955  pg 1.956 
 WIKI_urai Song number: 385 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 603 - puRpudham (thiruchchengkOdu)

puRpudhame nAma aRpanilai yAdha
     poykkudilku lAvu ...... manaiyALum

puththirarum veedu miththiraru mAna
     buththi saliyAdha ...... peruvAzhvu

niRpadhoru kOdi kaRpamena mAya
     nishtaiyudan vAzhum ...... adiyEnyAn

niththanina thALil vaiththadhoru kAdhal
     niRkum vagai Odha ...... ninaivAyE

saRpagiri nAtha muththamizhvi nOdha
     chakragadhai pANi ...... marugOnE

tharkkasamaN mUgar mikkakazhu vERa
     vaiththavoru kAzhi ...... maRaiyOnE

kaRpuvazhu vAdhu veRpadiyin mEvu
     katrai maRa vANar ...... kodikOvE

kaiththa asurEsar moyththakula kAla
     kaRpatharu nAdar ...... perumALE.

......... Meaning .........

puRpudhame nAma aRpanilai yAdha poykkudil: My body is like an air bubble and flimsy, like a false hut, with a short life;

kulAvu manaiyALum: and without realizing this fact, my wife loves my body and caresses it.

puththirarum veedu miththiraru mAna: I have my children, house and my friends and

buththi saliyAdha peruvAzhvu: I firmly believe that my life is very great indeed!

niRpadhoru kOdi kaRpamena: I wishfully think that this life is going to last a million years!

mAya nishtaiyudan vAzhum adiyEnyAn: I, poor self, am carrying on under this myth of deep delusion.

niththanina thALil vaiththadhoru kAdhal: The unique love placed by me everyday at Your lotus feet

niRkum vagai Odha ninaivAyE: must stand for ever, and You have to think of teaching me the way to ensure it.

saRpagiri nAtha: You are the Lord at NAgagiri (also known as ThiruchchengkOdu**)!

muththamizh vinOdha: You love to delight in the three branches of Tamil.*

chakragadhai pANi marugOnE: You are the nephew of Vishnu holding ChakrA (Wheel) and GadhA in His hands!

tharkkasamaN mUgar: The SamaNA (Jain) sages were dumbfounded when they lost their debate with You,

mikkakazhu vERa vaiththavoru kAzhi maRaiyOnE: and You sent them to the gallows, Oh ThirugnAna SambandhA, the Brahmin Poet from SeegAzhi!***

kaRpuvazhu vAdhu: She is resolutely chaste;

veRpadiyin mEvu katrai maRa vANar kodi kOvE: she is VaLLi, the darling daughter of the hunters who throng the foothills of VaLLimali; and You are her consort!

kaiththa asurEsar moyththakula kAla: You were the Death-God for the closeknit dynasties of demons (asuras) who hated You!

kaRpatharu nAdar perumALE.: You are cherished by DEvAs in whose land is the KaRpaga Tree, Oh Great One!


* The three aspects (branches) of Tamil are:

iyal - Literature; isai - Music; and nAdagam - Drama.


** ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station.
As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given.


In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes!


** According to AruNagirinAthar, ThirugnAna SambandhAr is the incarnation of Murugan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 603 puRpudham - thiruchchengkodu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]