திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 597 ஆலகால படப்பை (திருச்செங்கோடு) Thiruppugazh 597 AlakAlapadappai (thiruchchengkodu) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன ...... தனதான ......... பாடல் ......... ஆல காலப டப்பைம டப்பியர் ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர் யாவ ராயினு நத்திய ழைப்பவர் ...... தெருவூடே ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர் பேசி யாசைகொ டுத்தும ருட்டிகள் ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர் ...... பலரூடே மாலை யோதிவி ரித்துமு டிப்பவர் சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள் வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள் ...... உறவாலே மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள் காம போகவி னைக்குளு னைப்பணி வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி ...... லுழல்வேனோ மேலை வானொரு ரைத்தச ரற்கொரு பால னாகியு தித்தொர்மு நிக்கொரு வேள்வி காவல்ந டத்திய கற்குரு ...... அடியாலே மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின் மாது தோள்தழு விப்பதி புக்கிட வேறு தாயட விக்குள்வி டுத்தபி ...... னவனோடே ஞால மாதொடு புக்கவ னத்தினில் வாழும் வாலிப டக்கணை தொட்டவ னாடி ராவண னைச்செகு வித்தவன் ...... மருகோனே ஞான தேசிக சற்குரு உத்தம வேல வாநெரு வைப்பதி வித்தக நாக மாமலை சொற்பெற நிற்பதொர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஆலகால படப் பை மடப்பியர் ஈர வாள் அற எற்றும் விழிச்சியர் ... ஆலகால விஷத்தை உடைய பாம்பின் படம் போன்ற பெண்குறியை உடைய இளம் மாதர்கள். கொழுப்பு ஈரம் கொண்ட வாள் போல மிகவும் தாக்க வல்ல கண்களை உடையவர். யாவராயினும் நத்தி அழைப்பவர் தெரு ஊடே ஆடி ஆடி நடப்பது ஒர் பிச்சியர் ... யாராக இருந்தாலும் விரும்பி அழைப்பவர்கள். தெருவின் மத்தியில் ஆடி ஆடி நடக்கும் பித்துப் பிடித்தவர்கள். பேசி ஆசை கொடுத்து மருட்டிகள் ஆசை வீசி அணைக்கும் முலைச்சியர் பலர் ஊடே மாலை ஓதி விரித்து முடிப்பவர் ... தங்கள் பேச்சு வன்மையால் ஆசை காட்டி மயக்குபவர்கள். ஆசை வலையை வீசி அணைக்கின்ற மார்பினர். பலர் மத்தியிலும் மாலை அணிந்த கூந்தலை அவிழ்த்து முடிப்பவர். சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள் வாசம் வீசு மணத்தில் மினுக்கிகள் உறவாலே ... புடவை கீழே தாழும்படி தளர்த்தி இடுப்பில் சுற்றுபவர்கள். வாசனை வீசும் நறுமணம் கொண்டு மினுக்குபவர்கள். இத்தகைய விலைமாதர்களின் தொடர்பால், மாயை ஊடு விழுத்தி அழுத்திகள் காம போக வினைக்குள் உனைப் பணி வாழ்வு இலாமல் மலச் சனனத்தினில் உழல்வேனோ ... மாயையின் உள்ளே விழும்படிச் செய்து அழுத்துபவர்களின் காம போகச் செயல்களில் ஈடுபட்டதாலே, உன்னைப் பணியும் நல் வாழ்வு இல்லாமல் மும்மலங்களுக்கு ஈடான பிறப்பில் அலைவேனோ? மேலை வானொர் உரைத் தசரற்கு ஒரு பாலனாகி உதித்து ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ(க்) கற்கு உரு அடியாலே மேவியே ... மேல் உலகத்தில் உள்ள தேவர்கள் புகழ்ந்த தசரதற்கு ஒரு குழந்தையாகப் பிறந்து, ஒப்பற்ற விசுவாமித்திர முனிவருக்கு ஒரு யாகத்தில் காவல் புரிந்து, அந்த கல்லைத் திருவடியினால் (மிதித்துப்) பழைய வடிவத்தை (அகலிகை) எய்தும்படிச் செய்து, மிதிலைச் சிலை செற்று மின் மாது தோள் தழுவிப் பதி புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே ஞால மாதொடு புக்கு ... மிதிலையில் சனகர் முன் (சிவதனுசு என்ற) வில்லை முறித்து ஒளி பொருந்திய சீதையை மணம் புரிந்து அயோத்தி நகருக்குத் திரும்பி வந்து, மாற்றாந் தாயாகிய கைகேயி காட்டுக்குள் போகும்படிச் செய்ய, தம்பியாகிய இலக்குவனுடன் பூதேவி மகளாம் சீதையோடு சென்று, அ(வ்)வனத்தினில் வாழும் வாலி படக் கணை தொட்டவன் நாடி ராவணனைச் செகுவித்தவன் மருகோனே ... அந்தக் காட்டில் வாழ்ந்த வாலி இறக்கும்படி அம்பைச் செலுத்தியவனும், தேடிச் சென்று இராவணனை அழித்தவனுமாகிய ராமனின் மருகனே, ஞான தேசிக சற் குரு உத்தம வேலவா நெருவைப்பதி* வித்தக நாக மா மலை சொற் பெற நிற்பது ஒர் பெருமாளே. ... ஞான தேசிகனே, சற் குருவே, உத்தமனனாவனே, வேலவனே, நெருவூரில் வீற்றிருக்கும் ஞான மூர்த்தியே, திருச்செங்கோட்டில்** புகழ் பெற விளங்கி நிற்கும் பெருமாளே. |
* நெருவைப்பதி என்பது நெருவூர். கருவூருக்கு அருகே உள்ளது. |
** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது. |
'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.941 pg 1.942 pg 1.943 pg 1.944 pg 1.945 pg 1.946 WIKI_urai Song number: 379 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 597 - AlakAla padappai (thiruchchengkOdu) Ala kAlapa dappaima dappiyar eera vALaRa vetRumvi zhicchiyar yAva rAyinu naththiya zhaippavar ...... theruvUdE Adi yAdina dappathor picchiyar pEsi yAsaiko duththuma ruttikaL Asai veesiya Naikkumu laicchiyar ...... palarUdE mAlai yOthivi riththumu dippavar sElai thAzhane kizhththarai sutRikaL vAsam veesuma Naththilmi nukkikaL ...... uRavAlE mAyai yUduvi zhuththiya zhuththikaL kAma pOkavi naikkuLu naippaNi vAzhvi lAmalma lacchana naththini ...... luzhalvEnO mElai vAnoru raiththasa raRkoru pAla nAkiyu thiththormu nikkoru vELvi kAvalna daththiya kaRkuru ...... adiyAlE mEvi yEmithi laicchilai setRumin mAthu thOLthazhu vippathi pukkida vERu thAyada vikkuLvi duththapi ...... navanOdE njAla mAthodu pukkava naththinil vAzhum vAlipa dakkaNai thottava nAdi rAvaNa naiccheku viththavan ...... marukOnE njAna thEsika saRguru uththama vEla vAneru vaippathi viththaka nAka mAmalai soRpeRa niRpathor ...... perumALE. ......... Meaning ......... AlakAla padap pai madappiyar eera vAL aRa etRum vizhicchiyar: These young women have genitals that resemble the hood of a serpent carrying the terrible (AlakAla) poison. Their eyes, that look like sword with wet grease, are capable of fierce attack. yAvarAyinum naththi azhaippavar theru UdE Adi Adi nadappathu or picchiyar: Without discrimination, they cordially invite any man on the street. They are so crazy that they keep on dancing while walking in the street. pEsi Asai koduththu maruttikaL Asai veesi aNaikkum mulaicchiyar palar UdE mAlai Othi viriththu mudippavar: With their glib talk they tantalise the men-folk. They spread their net of passion and hug the men tightly to their bosom. In front of many people, they deliberately loosen their tufted hair adorned with flowers and then retie it into a knot. sElai thAzha nekizhththu arai sutRikaL vAsam veesu maNaththil minukkikaL uRavAlE: They intentionally slacken their sari so that it touches the floor and then wrap it around their waist. Spraying themselves with fragrant scents, they flaunt about. Because of my liaison with such whores, mAyai Udu vizhuththi azhuththikaL kAma pOka vinaikkuL unaip paNi vAzhvu ilAmal malas sananaththinil uzhalvEnO: and because of my indulging in erotic acts with them as a result of their pushing me into the pit of delusion, am I to roam about in vain in this world suffering from the three slags of this birth (namely, arrogance, karma and delusion) by forsaking the righteous life of prostrating at Your feet, Oh Lord? mElai vAnor uraith thasaraRku oru pAlanAki uthiththu or munikku oru vELvi kAval nadaththi a(k) kaRku uru adiyAlE mEviyE: He was born as a child to King Dasarathar lauded by all the DEvAs in the celestial land; He guarded the great sacrifice conducted by the unique sage ViswAmithrA; when His hallowed foot trod on a stone, it assumed its old form (of AkalyA DEvi); mithilaic chilai setRu min mAthu thOL thazhuvip pathi pukkida vERu thAy adavikkuL viduththa pinnavanOdE njAla mAthodu pukku: in Mithilai, He broke the mighty bow (Sivadhanush) in front of King Janakar, married the bright damsel Seethai and returned with her to AyOdhyA; upon the command of His step-mother KaikEyi banishing Him to the forest, He went there accompanied by His younger brother LakshmaNan and by Seethai, the daughter of Mother Earth; a(v)vanaththinil vAzhum vAli padak kaNai thottavan nAdi rAvaNanais sekuviththavan marukOnE: He wielded an arrow killing VAli who lived in the forest; He went after and destroyed the demon RAvaNan; and You are the nephew of that RAmA, Oh Lord! njAna thEsika saR kuru uththama vElavA neruvaippathi* viththaka nAka mA malai soR peRa niRpathu or perumALE.: Oh Spiritual Perceptor! Oh Great Master! Oh Personification of all virtues! Oh Lord with the Spear! Oh Symbol of Knowledge seated in NeruvUr! You have an abode in ThiruchchengkOdu** where Your fame is prominent, Oh Great One! |
* Neruvaippathi is known as NeruvUr which is located near the town, KarUr. |
** ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station. As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given. |
In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |