திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 588 கரை அற உருகுதல் (திருச்செங்கோடு) Thiruppugazh 588 karaiaRaurugudhal (thiruchchengkodu) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தனதன தனதன தனதன தந்தான தந்த ...... தனதான ......... பாடல் ......... கரையற வுருகுதல் தருகயல் விழியினர் கண்டான செஞ்சொல் ...... மடமாதர் கலவியில் முழுகிய நெறியினி லறிவுக லங்காம யங்கும் ...... வினையேனும் உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும் உன்பாத கஞ்ச ...... மலர்மீதே உரவொடு புனைதர நினைதரு மடியரொ டொன்றாக என்று ...... பெறுவேனோ வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி வந்தேற இந்த்ர ...... புரிவாழ மதவித கஜரத துரகத பததியின் வன்சேனை மங்க ...... முதுமீன திரைமலி சலநிதி முறையிட நிசிசரர் திண்டாட வென்ற ...... கதிர்வேலா ஜெகதல மிடிகெட விளைவன வயலணி செங்கோட மர்ந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கரை அற உருகுதல் தரு கயல் விழியினர் ... எல்லை கடந்து உருகும்படி செய்யும் கயல் மீன் போன்ற கண்களை உடையவரும், கண்டு ஆன செம் சொல் மடமாதர் ... கற்கண்டு போன்ற இனிய பேச்சுக்களை உடையவரும் ஆகிய விலைமாதர்களின் கலவியில் முழுகிய நெறியினில் அறிவு கலங்கா மயங்கும் வினையேனும் ... இணைப்பிலே மூழ்கிய வழியில் அறிவு கலங்கி மயங்குகின்ற, வினைக்கு ஈடான, நானும், உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும் உன் பாத கஞ்ச மலர் மீதே ... என் சொற்களையும், அறிவையும், உயிரையும், உணர்வையும் உனது திருவடித் தாமரையின் மேல் உரவொடு புனை தர நினைதரும் அடியரொடு ஒன்றாக என்று பெறுவேனோ ... உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டி, உன்னை எப்போதும் நினைக்கின்ற அடியார்களுடன் ஒன்றாகும்படியான பாக்கியத்தை என்று பெறுவேனோ? வரை இரு துணி பட வளை படு சுரர் குடி வந்து ஏற இந்த்ர புரி வாழ ... கிரெளஞ்ச மலை இரண்டு கூறுபடவும், சிறையில் அடைபட்டிருந்த தேவர்கள் தங்கள் ஊரில் குடியேறவும், தேவேந்திரனது பொன்னுலகம் வாழவும், மத வித கஜ ரத துரக பத(தா)யின் வன் சேனை மங்க ... மதம் கொண்ட யானை, தேர், குதிரை, காலாட்படை இவைகளைக் கொண்ட வலிமை வாய்ந்த அசுரர் சேனை அழிந்துபடவும், முது மீன திரை மலி சல நிதி முறை இட நிசிசரர் திண்டாட வென்ற கதிர்வேலா ... முதிய மீன்கள் உள்ள அலைகள் நிறைந்த கடல் அலறி முறையிடவும், அசுரர்கள் திண்டாட்டம் கொள்ளவும் வெற்றி கொண்ட வேலை உடையவனே, ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி செங்கோடு அமர்ந்த பெருமாளே. ... பூதலத்தின் வறுமை கெடும்படியான விளைச்சல்கள் உடைய வயல்கள் சூழ்ந்த திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. |
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது. |
'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.915 pg 1.916 WIKI_urai Song number: 370 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 588 - karai aRa urugudhal (thiruchchengkOdu) karaiyaRa vurukuthal tharukayal vizhiyinar kaNdAna senjol ...... madamAthar kalaviyil muzhukiya neRiyini laRivuka langAma yangum ...... vinaiyEnum uraiyaiyu maRivaiyum uyiraiyu muNarvaiyum unpAtha kanja ...... malarmeethE uravodu punaithara ninaitharu madiyaro donRAka enRu ...... peRuvEnO varaiyiru thuNipada vaLaipadu surarkudi vanthERa inthra ...... purivAzha mathavitha gajaratha thurakatha pathathiyin vansEnai manga ...... muthumeena thiraimali salanithi muRaiyida nisisarar thiNdAda venRa ...... kathirvElA jekathala midikeda viLaivana vayalaNi sengOda marntha ...... perumALE. ......... Meaning ......... karai aRa urukuthal tharu kayal vizhiyinar: Their eyes are like kayal fish which make one melt beyond limit; kaNdu Ana sem sol madamAthar: and their speech is sweet like sugar-candy; with such whores, kalaviyil muzhukiya neRiyinil aRivu kalangA mayangum vinaiyEnum: I have been immersed in carnal pleasure, in a state of a muddled mind, totally under delusion, due to the havoc played on me by past deeds; uraiyaiyum aRivaiyum uyiraiyum uNarvaiyum un pAtha kanja malar meethE uravodu punai thara ninaitharum adiyarodu onRAka enRu peRuvEnO: to enable me to resolutely dedicate my words, intellect, life and feelings at Your hallowed lotus feet, when shall I be fortunate to mingle with Your devotees who always think of You? varai iru thuNi pada vaLai padu surar kudi vanthu ERa inthra puri vAzha: In order that the mount Krouncha is split into two, the imprisoned DEvAs are resettled in their land, the celestial land of IndrA prospers, matha vitha kaja ratha thuraka patha(a)thiyin van sEnai manga: the mighty armies of the demons consisting of wild elephants, chariots, horses and soldiers are destroyed, muthu meena thirai mali sala nithi muRai ida nisisarar thiNdAda venRa kathirvElA: the wavy sea full of old fish screams pleadingly and the demons run away helter skelter, You wielded the triumphant spear, Oh Lord! jekathala midi keda viLaivana vayal aNi sengOdu amarntha perumALE.: The paddy fields surrounding this place ThiruchchengkOdu* yield an abundant crop to alleviate the poverty of the world, and it is Your abode, Oh Great One! |
* ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station. As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given. |
In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |