பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/916

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . செங்கேடு திருப்புகழ் உரை 443 370 எல்லை கடந்து உருகும்படிச் செய்யும் மீன் போன்ற கண்ணினர், கற்கண்டுபோன்ற செவ்விய சொல்லினராகிய மடப்பம் பொருந்திய மாதர்களின் சேர்க்கை யின்பத்தில் முழுகிய வழியில் அறிவுகலங்கி, மயங்கும் வினைக்கு ஈடான நானும்: (எனது) சொற்களையும், (எனது) அறிவையும், (எனது) உயிரையும், (எனது) உணர்வையும் உனது திருவடித் தாமரை மலர்மேல் E_ றுதியுடன் பொருந்த வைக்க, (உன்னை) நினைக்கின்ற அடியார்களுடன் ஒன்றாம்படி கூடும்படியான பாக்கியத்தை என்று பெறுவேனோ! LDGðNGU (கிரெளஞ்சம்) இரண்டு கூறுபட, வளைபடு (வளைதல் பட்ட - மனம் சோர்வு பட்டிருந்த) தேவர்கள் குடி புகுந்து ஏற, தேவந்திரனது பொன்னுலகம் வாழ, மதம் பல கொண்ட யானை, தேர், குதிரை, பதாதி (காலாட்படை) இவை கொண்ட பலத்த சேனை அழிபட பழமை கொண்ட மீன்கள் உள்ள அலை நிறைந்த கடல் அலறி முறையிட, அசுரர்கள் திண்டாட்டம் கொள்ள, வெற்றிபெற்ற ஒளிவேலனே! பூதலத்தின் மிடி (தரித்திரம்) கெடும்படியான விளைச்சல் கள் உள்ள வயல்கள் சூழ்ந்த (வயல்கள் அலங்கரிக்கும்) திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே! (அடியரொடொன்றாக என்று பெறுவேனோ)