திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 585 அன்பாக வந்து (திருச்செங்கோடு) Thiruppugazh 585 anbAgavandhu (thiruchchengkodu) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த ...... தனதான ......... பாடல் ......... அன்பாக வந்து உன்றாள் பணிந்து ஐம்பூத மொன்ற ...... நினையாமல் அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க ளம்போரு கங்கள் ...... முலைதானும் கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடு கின்ற ...... குழலாரைக் கொண்டே நினைந்து மன்பேது மண்டி குன்றா மலைந்து ...... அலைவேனோ மன்றாடி தந்த மைந்தா மிகுந்த வம்பார் கடம்பை ...... யணிவோனே வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த ...... வடிவேலா சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும் செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த செங்கோ டமர்ந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அன்பாக வந்து உன்தாள் பணிந்து ... அன்புடன் வந்து உன் பாதங்களைப் பணிந்து, ஐம்பூதம் ஒன்ற நினையாமல் ... பஞ்ச பூதங்களுடனும் ஒருவழிப்பட்டு உன்னை நினையாமல், அன்பால் மிகுந்து ... அன்பு அதிகமாய்ப் போய், நஞ்சாரு கண்கள் ... விஷம் நிறைந்த கண்களும், அம்போருகங்கள் முலைதானும் ... தாமரை மொட்டுப் போன்ற மார்பகங்களும், கொந்தே மிகுந்து ... பூங்கொத்துக்கள் நிறைந்து வண்டாடி நின்று கொண்டாடுகின்ற ... வண்டுகள் விளையாடி மகிழ்கின்ற குழலாரைக் கொண்டே நினைந்து ... கூந்தலும் உடைய பொது மகளிரை மனதில் நினைத்தே, மன்பேது மண்டி ... மிக்க அறியாமை பெருகி குன்றா மலைந்து அலைவேனோ ... மனம் குன்றி ஒருவழிப்படாது அலைந்து திரிவேனோ? மன்றாடி தந்த மைந்தா ... சபையில் நடனமாடும் சிவபிரான் தந்த குமரனே, மிகுந்த வம்பார் கடம்பை அணிவோனே ... மிக்க வாசனை நிறைந்த கடப்பமாலையை அணிபவனே, வந்தே பணிந்து நின்றார் பவங்கள் ... வந்து பணிந்து நின்ற அடியார்களின் பிறப்புக்களை வம்பே தொலைந்த வடிவேலா ... அடியோடு தொலைக்கும் கூரிய வேலை உடையவனே, சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ ... பல இடங்களுக்கும் சென்று கந்தா என அழைக்கும்போது செஞ்சேவல் கொண்டு வரவேணும் ... செவ்விய சேவலை ஏந்தி என்முன் வரவேண்டும். செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த ... செந்நெல் பயிரும் தாமரையும் ஒன்றாக வளரும் செங்கோடு அமர்ந்த பெருமாளே. ... திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. |
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது. |
'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.907 pg 1.908 pg 1.909 pg 1.910 WIKI_urai Song number: 367 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு சம்பந்தம் குருக்கள் Thiru P. Sambandam Gurukkal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
சாந்தி கிருஷ்ணகுமார் Ms Shanthi Krishnakumar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 585 - anbAga vandhu (thiruchchengkOdu) anbAga vandhu unthAL paNindhu aimbUtha mondra ...... ninaiyAmal anbAl migundhu nanjAru kaNgaL ambOru gangaL ...... mulaithAnum kondhE migundhu vaNdadi nindru koNdAdu gindra ...... kuzhalAraik koNdE ninaindhu manbEdhu maNdi kundrA malaindhu ...... alaivEnO mandrAdi thandha maindhA migundha vambAr kadambai ...... aNivOnE vandhE paNindhu nindrAr bavangaL vambE tholaindha ...... vadivElA sendrE idangaL kandhA enumpo senchEval koNdu ...... varavENum senchAli kanja mondrAy vaLarndha sengkOdamarndha ...... perumALE. ......... Meaning ......... anbAga vandhu unthAL paNindhu: (Instead of) coming to You filled with love and falling at Your feet, aimbUtha mondra ninaiyAmal: with all the five elements mingling within me in my thought riveted on You, anbAl migundhu: I roam around with excessive infatuation for women and nanjAru kaNgaL: (falling for) eyes filled with poison, ambOru gangaL mulaithAnum: breasts like lotus buds, kondhE migundhu vaNdadi nindru koNdAdu gindra kuzhalAraik: and women with a bunch of flowers on their hair, with beetles humming around! koNdE ninaindhu: Constantly thinking about them, manbEdhu maNdi: my ignorance intensifies; kundrA malaindhu alaivEnO: and with depressed mind, I am wandering in a perplexed state - how long can I go on like this? mandrAdi thandha maindhA: You are the son of the Cosmic Dancer at Shrines! migundha vambAr kadambai aNivOnE: You wear the fragrant kadappa garland! vandhE paNindhu nindrAr: For those devotees that bow to You, bavangaL vambE tholaindha vadivElA: their future births are completely ended by Your sharp spear! sendrE idangaL kandhA enumpo: Wherever I go, if I simply call You "KandhA", senchEval koNdu varavENum: You must come to me with Your Red Rooster! senchAli kanja mondrAy vaLarndha: There is a place where red paddy and lotus grow together, sengkOdamarndha perumALE.: which is known as ThiruchchengkOdu*, where You reside, Oh Great One! |
* ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station. As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given. |
In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |