பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/907

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை றிடர்பட மாமேரு யூதர மிடிபட வேதா னிசாசர ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே, 'மரகத ஆகார ஆயணு மிரணிய ஆகார வேதனும் fவசுவெனு மாகார ஈசனு மடிபேன. மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகிதர வனசர ராதார மாகிய பெருமாளே (1) திருச்செங்கோடு (இது தேவாரத்திற் கொடி மாடச் செங்குன்றுார் என வழங்கும். திருஞான சம்பந்த சுவாமிகளுடைய பாடல் பெற்றது. சேலம் மாவட்டம் சங்களிதுர்க்கம் புகை வண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கு 6 மைல் கோயில் மலைமேல் இருக்கின்றது. இங்கே சுப்பிரமணிய சுவாமி சந்நிதி தனியாகவும் பெரிதாகவு மிருக்கின்றது. செங்கோடனைச் சென்று கண்டுதொழ நாலா. யிரங்கண் படைத் திலனே யந்த நான்முகனே" (கந்த்ரலங். காரம்-9) என சுவாமிகள் வியந்து துதித்துள்ளனர். மலை சிவந்த நிறமாயிருப்பதால் இதற்குத் திருச்செங்கோடு எனப்பெயர் போந்தது. மேலை வீதியிலிருந்து பார்த்தால், மலை நாகம்போற் காணப்படுகின்றது. மலைக்கு நாககிரி என்றும் பெயர். 1181 ஆம் பாடலிற் " கொங்கின் புஜக கோத்திரி என்பதையுங் காண்க. அர்த்தநாரீசுரருடைய சந்நிதி விசேடமானது. மலையடிவாரத்தில் ஆறுமுகசுவாமி தேவி. மாருடன் திருக் கோயில் கொண்டிருக்கின்றார். இதற்குத் தலபுராணமுண்டு.) பாடபேதப்படி 323ஆம் பாடல் இத்தலத்துக்கு உரியதாம். 'திருமால். மரகத நிறம். மரகத நாராயணன் திருப்புகழ்:583. பிரமன். பொன் நிறம் பொன் நிற நான்முகன் சம்பந்தர்-III-7.9. ஈசன்-நெருப்பு உருவுஅழல் மேனியவன்'. சம்பந்தன் Ill-80.9. t வசு-அக்கினி. A 29