திருப்புகழ் 580 மாயா சொரூபம்  (விராலிமலை)
Thiruppugazh 580 mAyAsorUbam  (virAlimalai)
Thiruppugazh - 580 mAyAsorUbam - virAlimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானா தனான தனத்த தத்தன
     தானா தனான தனத்த தத்தன
          தானா தனான தனத்த தத்தன ...... தனதான

......... பாடல் .........

மாயா சொரூப முழுச்ச மத்திகள்
     ஓயா வுபாய மனப்ப சப்பிகள்
          வாணா ளையீரும் விழிக்க டைச்சிகள் ...... முநிவோரும்

மாலா கிவாட நகைத்து ருக்கிகள்
     ஏகா சமீது தனத்தி றப்பிகள்
          வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள் ...... வெகுமோகம்

ஆயா தவாசை யெழுப்பு மெத்திகள்
     ஈயா தபோதி லறப்பி ணக்கிகள்
          ஆவே சநீருண் மதப்பொ றிச்சிகள் ...... பழிபாவம்

ஆமா றெணாத திருட்டு மட்டைகள்
     கோமா ளமான குறிக்க ழுத்திகள்
          ஆசா ரவீன விலைத்த னத்திய ...... ருறவாமோ

காயா தபால்நெய் தயிர்க்கு டத்தினை
     ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள்
          காணா தவாறு குடிக்கு மப்பொழு ...... துரலோடே

கார்போ லுமேனி தனைப்பி ணித்தொரு
     போர்போ லசோதை பிடித்த டித்திட
          காதோ டுகாது கையிற்பி டித்தழு ...... தினிதூதும்

வேயா லநேக விதப்ப சுத்திரள்
     சாயா மல்மீள அழைக்கு மச்சுதன்
          வீறா னமாம னெனப்ப டைத்தருள் ...... வயலூரா

வீணாள் கொடாத படைச்செ ருக்கினில்
     சூர்மா ளவேலை விடுக்கும் அற்புத
          வேலா விராலி மலைத்த லத்துறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மாயா சொரூப முழுச் சமத்திகள் ஓயா உபாய மனப் பசப்பிகள்
வாழ் நாளை ஈரும் விழிக் கடைச்சிகள் முநிவோரும் மால்
ஆகி வாட நகைத்து உருக்கிகள்
... மாயையே உரு எடுத்தாற்
போன்ற முழுமையான சாமர்த்தியம் உள்ளவர்கள். முடிவில்லாத தந்திரம்
நிறைந்த மனத்தோடு பசப்புபவர்கள். வாழ் நாட்களை அறுத்து
வீணாக்கும் கடைக் கண்ணை உடையவர்கள். முனிவர்களும் காம
மயக்கத்தால் வாடும்படி சிரித்து, அவர்களை உருக்க வல்லவர்கள்.

ஏகாசம் மீது தனம் திறப்பிகள் வாரீர் இரீர் என் முழுப்
புரட்டிகள் வெகு மோகம் ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்
ஈயாத போதில் அறப் பிணக்கிகள்
... மேலே இட்ட ஆடையின்
மீது மார்பகத்தைத் திறந்து காட்டுபவர்கள். வாருங்கள், இருங்கள்
என்றெல்லாம் கூறும் முழு மோசக்காரிகள். மிக்க மோகத்தையும்
ஆய்வதற்கு இடமில்லாத வகையில் காம ஆசையை எழுப்புகின்ற
வஞ்சனை வாய்ந்தவர்கள். காசு கொடுக்காத போது மிகவும்
மாறுபட்டு நிற்பவர்கள்.

ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள் பழி பாவம் ஆ(கு)மாறு
எ(ண்)ணாத திருட்டு மட்டைகள் கோமாளமான குறிக்
கழுத்திகள் ஆசார ஈன விலைத் தனத்தியர் உறவாமோ
... கள்
உண்டு மகிழ்ச்சி கொள்ளும் மனத்தினர்கள். பழி பாவம் ஆகுமோ என்று
நினைக்காத திருட்டு வீணிகள். வேடிக்கையான நகக் குறிகள் உள்ள
கழுத்தை உடையவர்கள். ஆசாரம் குறைவாக உள்ள மார்பகங்களை
விலைக்கு அளிப்பவர்கள். இத்தகையோரின் உறவு நல்லதோ?

காயாத பால் நெய் தயிர்க் குடத்தினை ஏயா எண்ணாமல்
எடுத்து இடைச்சிகள் காணாதவாறு குடிக்கும் அப்பொழுது
...
காய்ச்சாத பால், நெய், தயிர்க் குடங்களை பொருந்திய மனத்துடன்
சற்றும் யோசிக்காமல் எடுத்து இடைச்சியர்கள் பார்க்காத வண்ணம்
(கண்ணன்) குடித்துக் கொண்டிருக்கும் போது,

உரலோடே கார் போலு மேனிதனைப் பிணித்து ஒரு போர்
போல் அசோதை பிடித்து அடித்திட காதோடு காது கையில்
பிடித்து அழுது
... உரலுடன் அவனுடைய மேகம் போன்ற
திருமேனியைக் கட்டி ஒரு போரிடுவது போல் (தாயாகிய) யசோதை
பிடித்து அடிக்க, அப்போது இரண்டு காதுகளையும் கைகளால்
பிடித்துக் கொண்டு அழுது,

இனிது ஊதும் வேயால் அநேக விதப் பசுந் திரள் சாயாமல்
மீள அழைக்கும் அச்சுதன் வீறான மாமன் எனப் படைத்து
அருள் வயலூரா
... இனிமையாக ஊதும் புல்லாங்குழலால் பல
விதமான பசுக் கூட்டங்களை தளராத வண்ணம் அழைத்து வரும்
(கண்ணனாம்) திருமாலை சிறப்பு வாய்ந்த மாமனாகக் கொண்டருளும்
வயலூரானே,

வீணாள் கொடாத படைச் செருக்கினில் சூர் மாள வேலை
விடுக்கும் அற்புத வேலா விராலி மலைத் தலத்து உறை
பெருமாளே.
... ஒரு நாளும் வீணாகாதபடி என்றும் போர் இருந்த படை
நம்மிடம் உண்டு என்னும் அகந்தை கொண்டிருந்த சூரன் இறந்து பட
(அவன் மாமரமாய் நின்ற) கடலில் ஏவிய அற்புத வேலாயுதத்தை
ஏந்தியவனே, விராலி மலை* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில்
மணப்பாறைக்கு அருகே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.897  pg 1.898  pg 1.899  pg 1.900 
 WIKI_urai Song number: 362 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 580 - mAyA sorUbam (virAlimalai)

mAyA sorUpa muzhuccha maththikaL
     OyA vupAya manappa sappikaL
          vANA Laiyeerum vizhikka daicchikaL ...... munivOrum

mAlA kivAda nakaiththu rukkikaL
     EkA sameethu thanaththi RappikaL
          vAree rireeren muzhuppu rattikaL ...... vekumOkam

AyA thavAsai yezhuppu meththikaL
     eeyA thapOthi laRappi NakkikaL
          AvE saneeruN mathappo RicchikaL ...... pazhipAvam

AmA ReNAtha thiruttu mattaikaL
     kOmA LamAna kuRikka zhuththikaL
          AsA raveena vilaiththa naththiya ...... ruRavAmO

kAyA thapAlney thayirkku daththinai
     EyA veNAma leduththi daicchikaL
          kANA thavARu kudikku mappozhu ...... thuralOdE

kArpO lumEni thanaippi Niththoru
     pOrpO lasOthai pidiththa diththida
          kAthO dukAthu kaiyiRpi diththazhu ...... thinithUthum

vEyA lanEka vithappa suththiraL
     sAyA malmeeLa azhaikku macchuthan
          veeRA namAma nenappa daiththaruL ...... vayalUrA

veeNAL kodAtha padaicche rukkinil
     cUrmA LavElai vidukkum aRputha
          vElA virAli malaiththa laththuRai ...... perumALE.

......... Meaning .........

mAyA sorUpa muzhuc chamaththikaL OyA upAya manap pasappikaL vAzh nALai eerum vizhik kadaicchikaL munivOrum mAl Aki vAda nakaiththu urukkikaL: These women are personification of illusion and are full of astuteness. They deceive with sweet words with a heart that is filled with endless treachery. The corner of their eyes is capable of severing the living days and frittering them away. Even the sages are haunted by their passionate laughter with which they could melt them off.

EkAsam meethu thanam thiRappikaL vAreer ireer en muzhup purattikaL veku mOkam AyAtha Asai ezhuppum eththikaL eeyAtha pOthil aRap piNakkikaL: They reveal their bosom through the attire covering their chest. While saying "Please come on in and be seated", they are out to deceive their suitors thoroughly. Their cunningness does not give room to doubt their ability to provoke extremely sensual thoughts. If they are not paid, they could be extremely indifferent.

AvEsa neer uN mathap poRicchikaL pazhi pAvam A(ku)mARu e(N)NAtha thiruttu mattaikaL kOmALamAna kuRik kazhuththikaL AsAra eena vilaith thanaththiyar uRavAmO: They rejoice in the consumption of alcohol. They are full of thievery and vanity with no compunction whatsoever about slander or sin. Their neck shows funny nail-marks. They are ever ready to sell their blemished bosom for a price. How can a liaison with such whores do me any good?

kAyAtha pAl ney thayirk kudaththinai EyA eNNAmal eduththu idaicchikaL kANAthavARu kudikkum appozhuthu: When KrishNa set his heart on stealing raw milk, refined butter and curd behind the back of the shepherd-women and imbibed them without giving it a second thought,

uralOdE kAr pOlu mEnithanaip piNiththu oru pOr pOl asOthai pidiththu adiththida kAthOdu kAthu kaiyil pidiththu azhuthu: His black-cloud-like body was tied to the stone-barrel by His mother YasOdhai who literally went to war to tie Him down; as she slapped Him, He began to cry holding both His ears;

inithu Uthum vEyAl anEka vithap pasun thiraL sAyAmal meeLa azhaikkum acchuthan veeRAna mAman enap padaiththu aruL vayalUrA: when He played on the flute sweetly, many species of cows in herds followed Him home without tiring; that famous Lord VishNu is Your Uncle, Oh Lord of VayalUr!

veeNAL kodAtha padaic cherukkinil cUr mALa vElai vidukkum aRputha vElA virAli malaith thalaththu uRai perumALE.: The demon SUran was extremely proud that his weapons never remained idle even for a single day without partaking in a war; when he stood in the disguise of a mango tree in the sea, You wielded the wonderful spear held in Your hand on the sea to destroy him, Oh Lord! You have Your abode in VirAlimalai*, Oh Great One!


* VirAlimalai is located 20 miles from Tiruchi on the route to Madhurai, near MaNappARai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 580 mAyA sorUbam - virAlimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]