திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 576 கரதல முங்குறி (விராலிமலை) Thiruppugazh 576 karadhalamungkuRi (virAlimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தந்தன தந்த தந்தன தனதன தந்தன தந்த தந்தன தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான ......... பாடல் ......... கரதல முங்குறி கொண்ட கண்டமும் விரவியெ ழுந்துசு ருண்டு வண்டடர் கனவிய கொண்டைகு லைந்த லைந்திட ...... அதிபாரக் களபசு கந்தமி குந்த கொங்கைக ளிளகமு யங்கிம யங்கி யன்புசெய் கனியித ழுண்டுது வண்டு பஞ்சணை ...... மிசைவீழா இரதம ருந்தியு றுங்க ருங்கயல் பொருதுசி வந்துகு விந்தி டும்படி யிதவிய வுந்தியெ னுந்த டந்தனி ...... லுறமூழ்கி இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய் வனிதையர் தங்கள்ம ருங்கி ணங்கிய இளமைகி ழம்படு முன்ப தம்பெற ...... வுணர்வேனோ பரதசி லம்புபு லம்பு மம்பத வரிமுக எண்கினு டன்கு ரங்கணி பணிவிடை சென்றுமு யன்ற குன்றணி ...... யிடையேபோய்ப் பகடியி லங்கைக லங்க அம்பொனின் மகுடசி ரந்தச முந்து ணிந்தெழு படியுந டுங்கவி ழும்ப னம்பழ ...... மெனவாகும் மருதமு தைந்தமு குந்த னன்புறு மருககு விந்தும லர்ந்த பங்கய வயலியில் வம்பவிழ் சண்ப கம்பெரி ...... யவிராலி மலையில்வி ளங்கிய கந்த என்றுனை மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கரதலமும் குறி கொண்ட கண்டமும் விரவி எழுந்து சுருண்டு வண்டு அடர் கனவிய கொண்டை குலைந்து அலைந்திட ... கையும், நகக் குறி கொண்ட கழுத்தும் ஒருங்கே எழுந்தும், சுருண்டு, வண்டு நெருங்கிய பெருமை வாய்ந்த கூந்தல் குலைந்து அசையவும், அதி பாரக் களப சுகந்த மிகுந்த கொங்கைகள் இளக முயங்கி மயங்கி அன்பு செய் கனி இதழ் உண்டு துவண்டு பஞ்சணை மிசை வீழா ... அதிக கனம் வாய்ந்த, கலவை நறு மணம் மிக்க தனங்கள் நெகிழ்ந்து அசையும்படியும் இணைந்து, காம மயக்கில் மயங்கி அன்பு காட்டும் கொவ்வைக் கனி போன்ற வாயிதழ் உண்டு, சோர்வு உற்று பஞ்சு மெத்தையின் மீது வீழ்ந்து, இரதம் அருந்தி உறும் கரும் கயல் பொருது சிவந்து குவிந்திடும் படி இதவிய உந்தி எனும் தடம் தனில் உற மூழ்கி ... வாயூறு நீரைப் பருகி, பொருந்திய கரிய மீன் போன்ற கண்கள் ஒன்றுபட்டுச் சிவந்து குவியுமாறு, இன்பத்தைத் தரும் கொப்பூழ் என்னும் குளத்தில் பொருந்தி முழுகி, இனியது ஒர் இன்பம் விளைந்து அளைந்து பொய் வனிதையர் தங்கள் மருங்கி இணங்கிய இளமை கிழம் படும் முன் பதம் பெற உணர்வேனோ ... இனிமை தரும் ஓர் இன்பம் உண்டாக அதை அனுபவித்து, பொய் நிறைந்த பொது மகளிர் வசம் ஈடுபட்ட என் இளமை முதுமையாக மாறிக்கொண்டு வரும்போதாவது உனது திருவடிகளைப் பெறும் வழியை உணர்ந்து கொள்வேனோ? பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு அணி பணிவிடை சென்று முயன்ற குன்று அணி இடையே போய் ... பரத நாட்டியத்துக்கு அணிந்து கொள்ளும் சலங்கைகள் ஒலிக்கும் அழகிய திருவடிகளை உடையவனே, ஒளி பொருந்திய முகத்தை உடைய ஜாம்பவான் முதலான கரடிப் படையும் குரங்குப் படையும் ஏவல் புரிய போருக்குச் சென்று, முயற்சி செய்து மலை வரிசைகளின் இடையே போய், பகடி இலங்கை கலங்க அம் பொனின் மகுட சிரம் தசமும் துணிந்து எழு படியும் நடுங்க விழும் பனம் பழம் எனவாகும் மருதம் உதைந்த முகுந்தன் அன்புறு மருக ... மோசக்காரனான ராவணனது இலங்கை கலங்கும்படி, அழகிய பொன்னாலாகிய கிரீடங்களை அணிந்த பத்துத் தலைகளும் துணிக்கப்பட்டு, ஏழு உலகங்களும் நடுங்கும்படி பனம்பழம் போல் விழும்படி ஆக்கின (ராம)ரும், மருத மரங்களை ஒடிந்து விழ வைத்த (கண்ணனுமாகிய) திருமால் அன்பு வைத்துள்ள மருகனே, குவிந்து மலர்ந்த பங்கய வயலியில் அம்பு அவிழ் சண்பகம் பெரிய விராலி மலையில் விளங்கிய கந்த ... குவிந்து மலர்கின்ற தாமரைகள் நிறைந்த வயலூரிலும், மணம் வீசும் சண்பக மலர்கள் விளங்கும் பெருமை வாய்ந்த விராலி மலையிலும்* விளங்கிய கந்தனே, என்று உனை மகிழ்வொடு வந்தி செய் மைந்தன் என்றனை வழி வழி அன்பு செய் தொண்டு கொண்டு அருள் பெருமாளே. ... என்றும் உன்னை வாழ்த்தி மகிழ்ச்சியுடன் வந்தனை செய்கின்ற பிள்ளையாகிய அடியேனுடைய வழிவழியாக அன்பு செய்கின்ற பாடற் பணியை ஏற்றுக்கொண்டு அருளும் பெருமாளே. |
* விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.885 pg 1.886 pg 1.887 pg 1.888 pg 1.889 pg 1.890 WIKI_urai Song number: 358 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 576 - karadhala mungkuRi (virAlimalai) karathala munguRi koNda kaNdamum viraviye zhunthusu ruNdu vaNdadar kanaviya koNdaiku laintha lainthida ...... athipArak kaLapasu kanthami kuntha kongaika LiLakamu yangima yangi yanpusey kaniyitha zhuNduthu vaNdu panjaNai ...... misaiveezhA irathama runthiyu Rumka rumkayal poruthusi vanthuku vinthi dumpadi yithaviya vunthiye nuntha danthani ...... luRamUzhki iniyatho rinpamvi Laintha Lainthupoy vanithaiyar thangaLma rungi Nangiya iLamaiki zhampadu munpa thampeRa ...... vuNarvEnO parathasi lampupu lampu mampatha varimuka eNkinu danku rangaNi paNividai senRumu yanRa kunRaNi ...... yidaiyEpOyp pakadiyi langaika langa amponin makudasi ranthasa munthu Ninthezhu padiyuna dungavi zhumpa nampazha ...... menavAkum maruthamu thainthamu kuntha nanpuRu marukaku vinthuma larntha pangaya vayaliyil vampavizh saNpa kamperi ...... yavirAli malaiyilvi Langiya kantha enRunai makizhvodu vanthisey maintha nenRanai vazhivazhi yanpusey thoNdu koNdaruL ...... perumALE. ......... Meaning ......... karathalamum kuRi koNda kaNdamum viravi ezhunthu suruNdu vaNdu adar kanaviya koNdai kulainthu alainthida: Their arm and neck, pecked with many nail-marks, ascend simultaneously; their curly, dense and rich hair becomes dishevelled and flutters in waves; athi pArak kaLapa sukantha mikuntha kongaikaL iLaka muyangi mayangi anpu sey kani ithazh uNdu thuvaNdu panjaNai misai veezhA: they hug me tightly with their heavy bosom, smeared with fragrant paste and moving in a mellowed manner; they provocatively offer, for tasting, their passionate and delusory lips that are red like the kovvai fruit; becoming exhausted, I collapse on their cotton mattress; iratham arunthi uRum karum kayal poruthu sivanthu kuvinthidum padi ithaviya unthi enum thadam thanil uRa mUzhki: imbibing the saliva that gushes from their mouth, making their twin eyes, black as the fish, converge and turn red, drowning in the pond of their blissful belly, iniyathu or inpam viLainthu aLainthu poy vanithaiyar thangaL marungi iNangiya iLamai kizham padum mun patham peRa uNarvEnO: enjoying the sweet experience of exhilaration, I am seeing that my youth, which indulged in those untruthful whores, is fading away and growing old; at least, now, will I be able to realise the method of attaining Your hallowed feet, Oh Lord? paratha silampu pulampum am patha vari muka eNkinudan kurangu aNi paNividai senRu muyanRa kunRu aNi idaiyE pOy: Oh Lord with hallowed feet adorned with jingling anklets usually worn for performing classical dance (Bharatha nAttiyam)! An army of bears headed by the bright-faced bear, JAmbavAn, and another army of monkeys obeyed the command and went to war; with great effort, they crossed a series of mounts to reach pakadi ilangai kalanga am ponin makuda siram thasamum thuNinthu ezhu padiyum nadunga vizhum panam pazham enavAkum marutham uthaintha mukunthan anpuRu maruka: LankA, the kingdom of the treacherous demon RAvaNan; shattering that LankA and knocking down his ten heads adorned with beautiful golden crowns, He (RAmA) wielded an arrow petrifying the seven worlds and felling the heads like palm fruits; coming as KrishNa, He uprooted the marutha trees; and You are the dear nephew of that Lord VishNu! kuvinthu malarntha pangaya vayaliyil ampu avizh saNpakam periya virAli malaiyil viLangiya kantha: You are seated in VayalUr where lotus buds blossom abundantly and also in VirAlimalai* where the fragrant shanbaga flowers flourish, Oh Lord! enRu unai makizhvodu vanthi sey mainthan enRanai vazhi vazhi anpu sey thoNdu koNdu aruL perumALE.: I am Your child who always worships You with delight and benediction; kindly accept my traditional service of rendering songs of Your glory and bless me, Oh Great One! |
* VirAlimalai is located 20 miles from Tiruchi on the route to Madhurai, near MaNappARai. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |