திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 573 உருவேறவே ஜெபித்து (விராலிமலை) Thiruppugazh 573 uruvERavEjebiththu (virAlimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதான தான தத்த தனதான தான தத்த தனதான தான தத்த ...... தந்ததான ......... பாடல் ......... உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி யுடனாக ஆக மத்து ...... கந்துபேணி உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை யொழியாது வூதை விட்டி ...... ருந்துநாளும் தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர் தருவார்கள் ஞான வித்தை ...... தஞ்சமாமோ தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி தருமாகி லாகு மத்தை ...... கண்டிலேனே குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க குடிமாள மாய விட்டு ...... குந்திபாலர் குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட குறளாக னூறில் நெட்டை ...... கொண்டஆதி மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலைமே லுலாவு சித்த ...... அங்கைவேலா மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு வளைகூனை யேநி மிர்த்த ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... உரு ஏறவே ஜெபித்து ஒரு கோடி ஓமம் சித்தி உடனாக ... உருப்போடுகின்ற எண்ணிக்கை நிரம்ப ஆகி மனத்தில் பதியும்படி ஜெபம் செய்து, கோடிக் கணக்கான வேள்வியால் வரும் பேறுகள் கூடிவர, ஆகமத்து உகந்து பேணி உணர்வு ஆசை யாரிடத்தும் மருவாது ... சிவாகமத்து விதிகளை (சிவபூஜை செய்யும் முறைகளை) மகிழ்ச்சியுடன் அனுசரித்து விரும்பி, அறிதலும் ஆசையையும் யாரிடத்திலும் பொருந்த வைக்காமல், ஓர் எழுத்தை ஒழியாது ஊதை விட்டு இருந்து நாளும் ... ஓரெழுத்தாகிய பிரணவத்தை எப்போதும் ஓதி, நாள் தோறும் (பிராணாயாம முறைப்படி) சுவாசத்தை விடுத்திருந்து, தரியாத போதகத்தர் குருவாவர் ... நிலைத்த ஞானம் இல்லாத அறிவினர் குரு என்னும் பதவியை வகிப்பார்கள். ஓரொருத்தர் தருவார்கள் ஞான வித்தை தஞ்சம் ஆமோ ... ஒரு சிலர் ஞானோபதேசத்தையும் செய்வார்கள். அப்படிப்பட்ட ஞான உபதேசம் பற்றுக் கோடு ஆகுமோ? தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில் ஆகும் அத்தை கண்டு இலேனே ... நெற்றியில் புருவ மத்திய ஸ்தானத்தில் தியானித்தால், பெரு ஞான சித்தியைக் கொடுக்கும் என்றால், அவ்வாறு கொடுக்கின்ற அதை நான் கண்டேன் இல்லை. குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடிமாள மாய விட்டு ... குருநாட்டை அரசாட்சி செய்த துரியோதனன் முதலியவர்களின் கூட்டம் முற்றும் அழியும்படி மாய வித்தைகளைச் செய்தவனும், குந்தி பாலர் குலையாமல் நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட ... குந்தி தேவியின் மைந்தர்களான பாண்டவர்களை அழிந்து போகாமல் நீதி முறையை நிலைப்படுத்தி, ஏழுலகங்களை ஆளும்படி வைத்தவனும், குறளாக(ன்) ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி மருகா ... குட்டை வடிவினனான வாமனனாகி வந்து, கெடுதல் இல்லாத நீண்ட திரிவிக்ரம நருவத்தைக் கொண்ட ஆதி மூர்த்தியாகியும் ஆகிய திருமாலின் மருகனே, புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலை மேல் உலாவு சித்த அம் கை வேலா ... திரி புரத்தை எரித்தவனும், திருவிளையாடல்களைப் புரிந்தவனும் ஆன சிவபெருமானின் மகனே, அழகிய விராலி மலை* மேல் உலவுகின்ற சித்தனே, அழகிய கையில் வேல் ஏந்தியவனே, மதுராபுரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு ... மதுராபுரியில் வீற்றிருக்கும் சொக்க நாதரின் உண்மையை விளக்கி**, பாண்டிய மன்னனின் சுரத்தைப் போக்கி, வளை கூனையே நிமிர்த்த தம்பிரானே. ... வளைவுபட்டிருந்த அவனது கூனை நிமிர்த்திய தம்பிரானே. |
* விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது. |
** சமணரோடு செய்த வாதில் சம்பந்தர் வெற்றி பெற்று சிவபெருமானது மெய்ம்மையை உலகுக்கு விளக்கி அருளினார். முருகன் சம்பந்தராக அவதரித்ததைக் குறிக்கும். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.877 pg 1.878 pg 1.879 pg 1.880 WIKI_urai Song number: 355 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 573 - uruvERavE jebiththu (virAlimalai) uruvERa vEje biththu vorukOdi yOma siththi yudanAka Aka maththu ...... kanthupENi uNarvAsai yAri daththu maruvAthu vOre zhuththai yozhiyAthu vUthai vitti ...... runthunALum thariyAtha pOtha kaththar guruvAva rOro ruththar tharuvArkaL njAna viththai ...... thanjamAmO thazhalAdi veethi vatta moLipOtha njAna siththi tharumAki lAku maththai ...... kaNdilEnE kurunAdi rAsa rikkar thuriyOtha nAthi varkka kudimALa mAya vittu ...... kunthipAlar kulaiyAmal neethi katti yezhupArai yALa vitta kuRaLAka nURil nettai ...... koNdaAthi marukA purAri siththan makanE virAli sithra malaimE lulAvu siththa ...... angaivElA mathurA purEsar meykka arasALu mARan veppu vaLaikUnai yEni mirththa ...... thambirAnE. ......... Meaning ......... uru ERavE jebiththu oru kOdi Omam siththi udanAka: Meditating on a ManthrA constantly until it gets transfixed in the mind, performing millions of ritualistic sacrifices until several supernatural powers are acquired, Akamaththu ukan-thu pENi uNarvu Asai yAridaththum maruvAthu: keenly following the stipulated procedures for worshipping SivA, observing total detachment from everyone by withholding feeling and love, Or ezhuththai ozhiyAthu Uthai vittu irunthu nALum: chanting the PraNava ManthrA, OM, at all times, and practicing the breathing exercises (PrANAyAmam) daily, thariyAtha pOthakaththar kuruvAvar: some of the pseudo-masters, unable to obtain unvarying knowledge, will still enjoy the status of a master; Ororuththar tharuvArkaL njAna viththai thanjam AmO: some even venture to begin preaching; can such teaching be ever relied upon? thazhalAdi veethi vattam oLi pOtha njAna siththi tharumAkil Akum aththai kaNdu ilEnE: If concentration with a focus on the middle of the forehead, between the two eye-brows, could result in enlightenment and realisation of true knowledge, I have not witnessed or experienced it! kuru nAdi irAsarikkar thuriyOthanAthi varkka kudimALa mAya vittu: He performed several miracles to destroy the entire clan of DhuriyOdhanan who ruled the Kuru Kingdom; kunthi pAlar kulaiyAmal neethi katti ezhu pArai ALa vitta: He protected the PANdavAs, sons of Kunthi, from destruction and established justice by making them the rulers of the seven worlds; kuRaLAka(n) URu il nettai koNda Athi marukA: He assumed the form of a dwarf (VAmanan) and also transformed Himself into a harmless and gigantic figure (ThirivikramA); He is the primordial Lord VishNu; and You are His nephew! purAri siththan makanE: You are the son of Lord SivA who burnt down Thiripuram and performed several miracles! virAli sithra malai mEl ulAvu siththa am kai vElA: You are the mystic Lord roaming about on the mountain VirAlimalai*! You hold a Spear in Your elegant hand, Oh Lord! mathurApurEsar meykka arasALum mARan veppu: You established the reality** of the existence of Lord ChokkanAthar (SivA) in Madhurai (coming as ThirugnAna Sambandhar); You cured the fever of King PANdiyan and vaLai kUnaiyE nimirththa thambirAnE.: straightened his hunched back, Oh Great One! |
* VirAlimalai is located 20 miles from Tiruchi on the route to Madhurai, near MaNappARai. |
** ThirugnAna Sambandhar defeated the camaNAs in debate in Madhurai, thereby establishing the reality of Lord SivA; it is believed that Lord Murugan came to this world as ThirugnAna Sambandhar. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |