பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/879

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை "தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர் தருவார்கள் ஞான வித்தை தஞ்சமாமோ. tதழலாடி வீதி#வட்ட மொளிபோத ஞான சித்தி தருமாகி லாகு மத்தை கண்டிலேனே; குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க குடிமாள மாய விட்டு குந்திபாலர். குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட Sகுறளாக னுாறில் நெட்டை கொண்டஆதி: மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலைமே லுலாவு சித்த அங்கைவேலா"மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு வளைகூனை யேநி மிர்த்த தம்பிரானே. (6) 'குரு ஆகத் தகாதவர்களும்; அவர்கள் செய்யும் உபதேசப் பயனும்:- வேதாகம நெறிகானான்.........அசற்குருவாமே ' திருமந்திரம் - 2011. குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே - திருமந்திரம் - 1680 t தழலாடிவீதி - நெற்றி, கற்பகந் தெருவில் வீதி கொண்டு - என்றார் பிறிதோரிடத்து - திருப்புகழ் 612. 4 வட்டம் - புருவ மத்திய தானம். S குறளாகன்: வாமனர், நெட்டை கொண்டது: H. பாட்டு 268 பார்க்க. "வடிவு குறளாகி மாபலியை வலிய சிறையிட வெளியின் முகடு கிழிபட முடிய வளரு முகில்" - சீர்பாத வகுப்பு. 7 சித்தன் - இது எல்லாம் வல்ல சித்தரான திருவிளையாடலைக் குறிக்கும். மதுரையில், அபிடேக பாண்டியன் காலத்தில், மதுரைச் சொக்கநாதர், ஒரு சித்தர் வேடம் பூண்டு வந்து மதுரை வீதிகளிலே பல சித்து விளையாடல்களைக் காட்டி மகிழ்வித்தார்.

  • ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே" என்று சம்பந்தப் பெருமான் வேண்டியவாறு (1 - 108)

(அடுத்த பக்கம் பார்க்க)