திருப்புகழ் 572 இதமுறு விரைபுனல்  (விராலிமலை)
Thiruppugazh 572 idhamuRuviraipunal  (virAlimalai)
Thiruppugazh - 572 idhamuRuviraipunal - virAlimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தனன தனதன
     தனதன தனதன தனன தனதன
          தத்ததன தந்ததன தத்ததன தந்ததன
தனதன தனதன தனன தனதன
     தனதன தனதன தனன தனதன
          தத்ததன தந்ததன தத்ததன தந்ததன
தனதன தனதன தனன தனதன
     தனதன தனதன தனன தனதன
          தத்ததன தந்ததன தத்ததன தந்ததன ...... தனதான

......... பாடல் .........

இதமுறு விரைபுனல் முழுகி யகில்மண
     முதவிய புகையினி லளவி வகைவகை
          கொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர் கொண்டலென
அறலென இசையளி யெனந ளிருளென
     நிறமது கருகிநெ டுகிநெ றிவுபட
          நெய்த்துமுசு வின்திரிகை யொத்தசுருள் குந்தளமும்
இலகிய பிறையென எயினர் சிலையென
     விலகிய திலதநு தலும திமுகமும்
          உற்பலமும் வண்டுவடு விற்கணைய மன்படரு ...... முனைவாளும்

இடர்படு கவுநடு வனும்வ லடல்பொரு
     கடுவது மெனநெடி தடுவ கொடியன
          இக்குசிலை கொண்டமதன் மெய்த்தவநி றைந்தவிழி
தளவன முறுவலு மமுத குமுதமும்
     விளைநற வினியமொ ழியுமி னையதென
          ஒப்பறுந கங்கள்விரல் துப்பெனவு றைந்துகமு
கிடியொடி படவினை செயும்வின் மதகலை
     நெடியக வுடியிசை முரலு சுரிமுக
          நத்தனைய கண்டமும்வெண் முத்துவிளை விண்டனைய ...... எழில்தோளும்

விதரண மனவித னமதை யருள்வன
     சததள மறைமுகி ழதனை நிகர்வன
          புத்தமிர்து கந்தகுடம் வெற்பெனநி ரம்புவன
இமசல ம்ருகமத களப பரிமள
     தமனிய ப்ரபைமிகு தருண புளகித
          சித்ரவர மங்கலவி சித்ரவிரு துங்ககன
விகலித மிருதுள ம்ருதுள நவமணி
     முகபட விகடின தனமு முயர்வட
          பத்திரமி ருந்தகடி லொத்தசுழி யுந்தியுள ...... மதியாத

விபரித முடையிடை யிளைஞர் களைபட
     அபகட மதுபுரி யரவ சுடிகைய
          ரத்நபண மென்பவழ குற்றவரை யும்புதிய
நுணியத ளிரெனவு லவிய பரிபுர
     அணிநட னபதமு முடைய வடிவினர்
          பொற்கலவி யின்பமதி துக்கமென லன்றியவர்
விரகினி லெனதுறு மனம துருகிய
     பிரமையு மறவுன தருள்கை வரவுயர்
          பத்திவழி யும்பரம முத்திநெறி யுந்தெரிவ ...... தொருநாளே

தததத தததத ததத தததத
     திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
          தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி
டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு
     டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு
          தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு
தமிதமி தமிதக தமித திமிதக
     திமிதிமி செககண திமித திகதிக
          தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி ...... யெனவேதான்

தபலைகு டமுழவு திமிலை படகம
     தபுதச லிகைதவில் முரசு கரடிகை
          மத்தளித வண்டையற வைத்தகுணி துந்துமிகள்
மொகுமொகு மொகுவென அலற விருதுகள்
     திகுதிகு திகுவென அலகை குறளிகள்
          விக்கிடநி ணம்பருக பக்கியுவ ணங்கழுகு
சதிர்பெற அதிர்தர உததி சுவறிட
     எதிர்பொரு நிருதர்கள் குருதி பெருகிட
          வப்புவின்மி தந்தெழுப தற்புதக வந்தமெழ ...... வெகுகோடி

மதகஜ துரகர தமுமு டையபுவி
     யதலமு தல்முடிய இடிய நெடியதொர்
          மிக்கொலிமு ழங்கஇரு ளக்கணம்வி டிந்துவிட
இரவியு மதியமு நிலைமை பெறஅடி
     பரவிய அமரர்கள் தலைமை பெறஇயல்
          அத்திறல ணங்குசெய சத்திவிடு கந்ததிரு
வயலியி லடிமைய குடிமை யினலற
     மயலொடு மலமற அரிய பெரியதி
          ருப்புகழ்வி ளம்புவென்மு னற்புதமெ ழுந்தருள்கு ...... கவிராலி

மலையுறை குரவந லிறைவ வருகலை
     பலதெரி விதரண முருக சரவண
          உற்பவக்ர வுஞ்சகிரி நிக்ரகஅ கண்டமய
நிருபவி மலசுக சொருப பரசிவ
     குருபர வெளிமுக டுருவ வுயர்தரு
          சக்ரகிரி யுங்குலைய விக்ரமந டம்புரியு
மரகத கலபமெ ரிவிடு மயில்மிசை
     மருவியெ யருமைய இளமை யுருவொடு
          சொர்க்கதல மும்புலவர் வர்க்கமும்வி ளங்கவரு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய
புகையினில் அளவி வகை வகை கொத்து அலர்களின்
தொடையல் வைத்து
... இன்பத்தைத் தருகின்ற வாசனை கலந்த நீரில்
மூழ்கி, அகிலின் நறு மணம் வீசும் புகையை ஊட்டி, விதவிதமான கொத்து
மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை ஒழுங்கு பெற வைத்து,

வளர் கொண்டல் என அறல் என இசை அளி என நள் இருள்
என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட நெய்த்து முசுவின்
திரிகை ஒத்த சுருள் குந்தளமும்
... வளர்கின்ற மேகம் போன்றும்,
கரு மணல் போன்றும், இசை பாடும் வண்டுகளின் கூட்டம் போன்றும,
நள்ளிரவின் இருள் போலவும் நிறமானது கறுத்து நீளமுள்ளதாய்,
நெருக்கம் உள்ளதாய், வாசனைத் தயிலம் தடவியதால் பளபளப்புள்ளதாய்,
கருங்குரங்கின் சுருளை ஒத்த வளைவுள்ள கூந்தலும்,

இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத
நுதலு(ம்) மதி முகமும் உற்பலமும்
... விளங்கும் பிறைச் சந்திரன்
போன்றும், வேடர்களின் வில்லைப் போன்றும், விசாலமான, திலகம்
அணிந்த நெற்றியும, திங்களைப் போன்ற முகமும்,

வண்டு வடு வில் கணை யமன் படரு(ம்) முனை வாளும் இடர்
படு(க்)கவு(ம்) நடுவனும் வல் அடல் பொரு கடுவதும் என
நெடிது அடுவ கொடியன இக்கு சிலை கொண்ட மதன் மெய்த்
தவநிறைந்த விழி
... நீலோற்ப மலரும், வண்டும், மாவடுவும்,
வில்லம்பும், யம தூதர்களும், கூரிய வாளும் என நின்று துன்பத்தை
உண்டாக்கவும், யமனும், மிக்க வலிமை பொருந்திய கொடிய விஷமும்
போன்று நீண்ட நேரம் வருத்துவனவாய், பொல்லாதவனவாய், கரும்பை
வில்லாகக் கொண்ட மன்மதனது உண்மைத் தவவலிமை முற்றும்
நிறைந்துள்ளதாய் விளங்கும் கண்களும்,

தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய
மொழியும் இனையது என ஒப்பு அற நகங்கள் விரல் துப்பு
என உறைந்து
... முல்லை அரும்பை ஒத்த பற்களும், அமுதம்
போன்றதாய் குமுத மலர் ஒத்த வாயினின்று வரும் தேன் போல்
இனிக்கும் சொற்களும், இதற்குத் தான் நிகர் என்று சொல்ல
ஒண்ணாத நகங்களோடு கூடிய விரல்கள் பவளம் போல் விளங்கவும்,

கமுகு இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய
கவுடி இசை முரலும் சுரி முக நத்து அனைய கண்டமும்
வெண்முத்து விளை விண்டு அனைய எழில் தோளும்
...
கமுகு இதற்கு நிகராகாது இடி பட்டு ஒடிந்துவிழ, காதல் வினையைத்
தூண்டும் கரும்பு வில் ஏந்திய மன்மத நூலுக்குப் பொருந்த அமைந்த
பெரிய கெளடி என்ற பண் வகையை இசைத்து ஒலிக்கின்ற சங்குக்கு
ஒப்பான கழுத்தும், வெண்மை நிற முத்துக்கள் விளைகின்ற மூங்கில்
போன்ற அழகிய தோள்களும்,

விதரண(ம்) மன விதனம் அதை அருள்வன சத தள மறை
முகிழ் அதனை நிகர்வன புத்த அமிர்து கந்த குடம் வெற்பு
என நிரம்புவன
... விவேகம் உள்ள மனத்தில் வேதனைத் துயரைத்
தருவனவாய், நூற்றிதழ்த் தாமரை மொட்டை ஒப்பனவாய், புதிய அமிர்த
வாசனைக் குடம், மலை போல பூரித்து இருப்பவனவாய்,

இமம் சலம் ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபை மிகு தருண
புளகித சித்ர வர மங்கல விசித்ர இரு துங்க கன விகலித
மிருதுள ம்ருதுள நவ மணி முக பட விகடின தனமும்
...
பன்னீர், கஸ்தூரி, கலவைச் சந்தனம் இவைகளைக் கொண்டனவாய்,
நறு மணம் உள்ளனவாய், பொன் ஒளி மிகுந்தனவாய், இளமை
கொண்டனவாய், மகிழ்ச்சி தருவனவாய, அழகு, சிறப்பு, பொலிவு, அதிசயம்
இவை யாவும் கொண்டனவாய், நவ ரத்ன மாலையையும், மூடும்
அலங்காரத் துணியையும் கொண்டவனவாய், திரட்சி உள்ள
மார்பகங்களும்,

உயர் வட பத்திரம் இருந்த அகடில் ஒத்த சுழி உந்தி உள
மதியாத விபரிதம் உடை இடை இளைஞர் களை பட
... உயர்ந்த
ஆலிலை போன்ற அடி வயிற்றில் பொருந்திய சுழிவுற்ற கொப்பூழும்,
உள்ளத்தில் ஆராயாத மாறு பாடான எண்ணத்தை உடையவராய்
அத்தகைய எண்ணத்தின் இடையே அகப்பட்ட இளைஞர்கள் சோர்வு
அடைய,

அபகடம் அது புரி அரவ சுடிகைய ரத்ன பணம் என்ப
அழகுற்ற அரையும் புதிய நு(ண்)ணிய தளிர் என உலவிய
பரிபுர(ம்) அணி நடன பதமும் உடைய வடிவினர் பொன்
கலவி இன்பம் அதி துக்கம் எனல் அன்றி
... வஞ்சகம் செய்கின்ற
பாம்பின் தலை உச்சியில் உள்ள ரத்ன படம் என்று சொல்லத் தக்க அழகு
வாய்ந்த பெண்குறியும், புதிய நுண்ணிய தளிர் போன்று உலவுகின்ற,
சிலம்பு அணிந்த, நடனத்துக்கு உற்ற பாதங்களை உடைய
உருவத்தினராகிய விலைமாதர்களுடைய அழகிய சேர்க்கை
இன்பமானது அதிக துக்கத்தைத் தருவது என்று உணர்தலோடு கூட,

அவர் விரகினில் எனது உறு மனம் அது உருகிய பிரமையும்
அற உனது அருள் கை வர உயர் பத்தி வழியும் பரம முத்தி
நெறியும் தெரிவது ஒரு நாளே
... அவ்வேசிகளின் தந்திரச்
செயல்களில் என்னுடைய மனமானது உருகிடும் மயக்கமும் ஒழிய,
உனது திருவருள் கைகூட உயர்ந்த பக்தி வழியும் மேலான முக்தி
நெறியும் எனக்குப் புலப்படுவதாகிய ஒரு நாள் உண்டாகுமா?

தததத தததத ததத தததத
   திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
      தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி
டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு
   டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு
      தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு
தமிதமி தமிதக தமித திமிதக
   திமிதிமி செககண திமித திகதிக
      தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி ......
எனவேதான்
... மேற்கூறிய தாள மெட்டுக்கு ஏற்ப

தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத ச(ல்)லிகை
தவில் முரசு கரடிகை மத்தளி தவண்டை அறவைத் தகுணி
துந்துமிகள் மொகுமொகு மொகு என அலற
... தபேலா என்ற
ஒரு மத்தள வகை, குடவடிவுள்ள முழவு வாத்திய வகை, திமிலை என்ற
ஒருவகைப் பறை, சிறு பறை வகை, முன் இல்லாததான புது வகையான
சல்லென்ற ஓசை உடைய சல்லிகை என்னும் பெரும் பறை, தவில் வகை.
முரசு, கரடி கத்தினாற் போல் ஓசை உடைய பறை வகை, மத்தள வாத்திய
வகை, பேருடுக்கை, நிரம்ப இருந்த தகுணிச்சம் என்ற துந்துமிகள்
பேரொலி எழுப்ப,

விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள் விக்கிட
நிணம் பருக பக்கி உவணம் கழுகு சதிர் பெற அதிர் தர உததி
சுவறிட எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட
... வெற்றிச்
சின்னங்கள் திகு திகு என்று எங்கும் விளங்க, பேய்களும், மாய வித்தைக்
குறளிப் பிசாசுகளும் விக்கல் வரும் அளவு கொழுப்பை உண்ண,
பறவைகளான கருடனும், கழுகும் பேறு பெற்றோம் என்று ஆரவாரிக்க,
கடல் வற்றிப் போக, சண்டை செய்யும் அசுரர்களின் இரத்தம் பெருகிட,

அப்புவின் மிதந்து எழுபது அற்புத கவந்தம் எழ வெகு கோடி
மத கஜ துரக ரதமும் உடைய புவி அதல முதல் முடிய இடிய
நெடியது ஒர் மிக்க ஒலி முழங்க இருள் அக்கணம் விடிந்து
விட
... அந்தச் செந்நீரில் மிதந்து எழுபது கணக்கான அற்புதமான
தலையற்ற உடல்கள் (கவந்தங்கள்) எழ, பல கோடிக் கணக்கானமத
யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும உடைய பூமியும்,
அதலம் முதலான கீழேழ் உலகமும் அதிர்ச்சி உற்று கலங்க, நீண்ட
பெருத்த ஒலி முழங்கி எழ, உலகின் துயர் அந்தக் கணத்திலேயே
விலகி ஒழிய,

இரவியும் மதியமும் நிலைமை பெற அடி பரவிய அமரர்கள்
தலைமை பெற இயல் அத்திறல் அணங்கு செய சத்தி விடு
கந்த
... சூரியனும் சந்திரனும் பழைய நிலை பெற்று விளங்க, திருவடியைப்
போற்றிய தேவர்கள் மேன்மையை அடைய, பொருந்திய அந்த வீர லட்சுமி
விளங்கும் வெற்றி வேலைச் செலுத்திய கந்தனே,

திருவயலியில் அடிமைய குடிமை இ(ன்)னல் அற மயலொடு
மலம் அற அரிய பெரிய திருப்புகழ் விளம்பு என் முன்
அற்புதம் எழுந்தருள் குக
... திரு வயலூரில் (அடியேனுடைய) குடிப்
பிறப்பின் துன்பங்கள் நீங்க, மயக்கமும் மும்மலங்களும் அகல,
அருமையான பெரிய திருப்புகழைச் சொன்ன என் கண்களின் முன்னே
அற்புதக் காட்சியுடன் எழுந்தருளிய குகனே*,

விராலி மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி
விதரண முருக சரவண உற்பவ க்ரவுஞ்ச கிரி நிக்ரக அகண்ட
மய நிருப விமல சுக சொருப பரசிவ குருபர
... விராலி மலையில்**
வீற்றிருக்கும் பெரியோனே, பெருமை பொருந்திய இறைவனே, உள்ள
கலைகள் பலவும் தெரிந்த கருணை வாய்ந்த முருகனே, சரவணப்
பொய்கையில் தோன்றினவனே, கிரெளஞ்ச மலையை அழித்தவனே,
எங்கும் பூரணமாய் நிறைந்த அரசே, மாசற்றவனே, ஆனந்த
வடிவானவனே, பரமசிவனுக்கு குரு மூர்த்தியே,

வெளி முகடு உருவ உயர் தரு சக்ர கிரியும் குலைய விக்ரம
நடம் புரியு(ம்) மரகத கலபம் எரி விடு மயில் மிசை
மருவியெ
... அண்டத்தின் புற எல்லையைத் தாண்டி உயர்ந்து செல்லும்,
சக்ரவாள கிரியும் நடுக்கம் உற வல்லமை பொருந்திய நடனத்தைச்
செய்யும், பச்சை நிறமான தோகைகள் ஒளி வீசும் மயில் மேல்
பொருந்தியவனே,

அருமைய இளமை உருவொடு சொர்க்க தலமும் புலவர்
வர்க்கமும் விளங்க வரு பெருமாளே.
... அருமை வாய்ந்த இளமை
உருவத்தோடு, விண்ணுலகும் புலவர்கள் கூட்டமும சுற்றிலும் விளங்க
எழுந்தருளும் பெருமாளே.


* ' விகட பரிமள ' எனத் துவங்கும் ( 917 ) திருப்புகழ் பாடலை அருணகிரியார்
வயலூரில் பாட, இறைவன் உவந்து அவர் முன் அற்புதக் கோலத்தோடு
எழுந்தருளி அவரது இன்னலை ஒழித்து, ஞானோபதேசம் செய்து விராலி
மலைக்கு வா என்று அழைத்தார். இதை, 'விராலி மாலையில் நிற்பம், நீ கருதி
உற்று வா, என அழைத்து என் மனதாசை மாசினை அறுத்து ஞானமுதளித்த
வாரம் இனி நித்தம் மறவேனே' என்று வரும் ' தாமரையின் மட்டு ' ( 911 )
திருப்புகழ் பாடலில் காணலாம்.


விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில்
மணப்பாறைக்கு அருகே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.871  pg 1.872  pg 1.873  pg 1.874  pg 1.875  pg 1.876 
 pg 1.877  pg 1.878 
 WIKI_urai Song number: 354 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 572 - idhamuRu viraipunal (virAlimalai)

thanathana thanathana thanana thanathana
     thanathana thanathana thanana thanathana
          thaththathana thanthathana thaththathana thanthathana
thanathana thanathana thanana thanathana
     thanathana thanathana thanana thanathana
          thaththathana thanthathana thaththathana thanthathana
thanathana thanathana thanana thanathana
     thanathana thanathana thanana thanathana
          thaththathana thanthathana thaththathana thanthathana ...... thanathAna

......... Song .........

ithamuRu viraipunal muzhuki yakilmaNa
     muthaviya pukaiyini laLavi vakaivakai
          koththalarka Linthodaiyal vaiththuvaLar koNdalena
aRalena isaiyaLi yenana LiruLena
     niRamathu karukine dukine Rivupada
          neyththumusu vinthirikai yoththasuruL kunthaLamum
ilakiya piRaiyena eyinar silaiyena
     vilakiya thilathanu thaluma thimukamum
          uRpalamum vaNduvadu viRkaNaiya manpadaru ...... munaivALum

idarpadu kavunadu vanumva ladalporu
     kaduvathu menanedi thaduva kodiyana
          ikkusilai koNdamathan meyththavani Rainthavizhi
thaLavana muRuvalu mamutha kumuthamum
     viLainaRa viniyamo zhiyumi naiyathena
          oppaRuna kangaLviral thuppenavu Rainthukamu
kidiyodi padavinai seyumvin mathakalai
     nediyaka vudiyisai muralu surimuka
          naththanaiya kaNdamumveN muththuviLai viNdanaiya ...... ezhilthOLum

vitharaNa manavitha namathai yaruLvana
     sathathaLa maRaimuki zhathanai nikarvana
          puththamirthu kanthakudam veRpenani rampuvana
imasala mrukamatha kaLapa parimaLa
     thamaniya prapaimiku tharuNa puLakitha
          chithravara mangalavi sithraviru thungakana
vikalitha miruthuLa mruthuLa navamaNi
     mukapada vikadina thanamu muyarvada
          paththirami runthakadi loththasuzhi yunthiyuLa ...... mathiyAtha

viparitha mudaiyidai yiLainjar kaLaipada
     apakada mathupuri yarava sudikaiya
          rathnapaNa menpavazha kutRavarai yumputhiya
nuNiyatha Lirenavu laviya paripura
     aNinada napathamu mudaiya vadivinar
          poRkalavi yinpamathi thukkamena lanRiyavar
virakini lenathuRu manama thurukiya
     piramaiyu maRavuna tharuLkai varavuyar
          paththivazhi yumparama muththineRi yuntheriva ...... thorunALE

thathathatha thathathatha thathatha thathathatha
     thithithithi thithithithi thithithi thithithithi
          thaththathatha thanthathatha thiththithithi thinthithithi
dakudaku dikudiku dakuku dikudiku
     dikudiku dakudaku dikuku dakudaku
          thaththathimi dangukuku thiththithimi dingukuku
thamithami thamithaka thamitha thimithaka
     thimithimi sekakaNa thimitha thikathika
          thaththimitha thanthimitha thiththimithi thinthimithi ...... yenavEthAn

thapalaiku damuzhavu thimilai padakama
     thaputhasa likaithavil murasu karadikai
          maththaLitha vaNdaiyaRa vaiththakuNi thunthumikaL
mokumoku mokuvena alaRa viruthukaL
     thikuthiku thikuvena alakai kuRaLikaL
          vikkidani Namparuka pakkiyuva Nangazhuku
sathirpeRa athirthara uthathi suvaRida
     ethirporu nirutharkaL kuruthi perukida
          vappuvinmi thanthezhupa thaRputhaka vanthamezha ...... vekukOdi

mathakaja thurakara thamumu daiyapuvi
     yathalamu thalmudiya idiya nediyathor
          mikkolimu zhanga-iru LakkaNamvi dinthuvida
iraviyu mathiyamu nilaimai peRa-adi
     paraviya amararkaL thalaimai peRaiyal
          aththiRala Nanguseya saththividu kanthathiru
vayaliyi ladimaiya kudimai yinalaRa
     mayalodu malamaRa ariya periyathi
          ruppukazhvi Lampuvenmu naRputhame zhuntharuLgu ...... kavirAli

malaiyuRai kuravana liRaiva varukalai
     palatheri vitharaNa muruka saravaNa
          uRpavakra vunjakiri nigraka-a kaNdamaya
nirupavi malasuka sorupa parasiva
     gurupara veLimuka duruva vuyartharu
          chakrakiri yungulaiya vikramana dampuriyu
marakatha kalapame rividu mayilmisai
     maruviye yarumaiya iLamai yuruvodu
          sorkkathala mumpulavar varkkamumvi Langavaru ...... perumALE.

......... Meaning .........

itham uRu virai punal muzhukiya akil maNam uthaviya pukaiyinil aLavi vakai vakai koththu alarkaLin thodaiyal vaiththu: Immersing in fragrant and stimulating water, drying under the gentle aromatic smoke of incence and tenderly bedecking with garlands made from a variety of flowers in bunches,

vaLar koNdal ena aRal ena isai aLi ena naL iruL ena niRam athu karuki neduki neRivu pada neyththu musuvin thirikai oththa suruL kunthaLamum: their hair is like an expanding cloud, like dark sand, like the humming beetles and like the pitch-dark midnight in terms of blackness; it is long, dense and shiny due to greasing by fragrant oil and curly like the hair of the black langur;

ilakiya piRai ena eyinar silai ena vilakiya thilatha nuthalu(m) mathi mukamum uRpalamum: their forehead is like the elegant crescent moon and the bow used by the hunters; it is broad, decorated with a mark; their face is like the moon;

vaNdu vadu vil kaNai yaman padaru(m) munai vALum idar padu(k)kavu(m) naduvanum val adal poru kaduvathum ena nedithu aduva kodiyana ikku silai koNda mathan meyth thavaniRaintha vizhi: their eyes are like the blue lily, shaped like the baby-mango and the arrow, resembling the messengers of Yaman (God of Death) and the sharp sword; they are capable of causing prolonged misery consistently like Yaman and like a strong dose of scathing poison; they are treacherous, and those eyes have been filled with the potency of true penance performed by Manmathan (God of Love) holding a bow of sugarcane;

thaLavana muRuvalum amutha kumuthamum viLai naRavu iniya mozhiyum inaiyathu ena oppu aRa nakangaL viral thuppu ena uRainthu: their teeth are like the buds of jasmine; the speech emanating from their lily-like nectar-filled mouth are sweet as honey; the nails on their fingers are not comparable to anything, and they look like coral;

kamuku idi odi pada vinai seyum vil matha kalai nediya kavudi isai muralum suri muka naththu anaiya kaNdamum veNmuththu viLai viNdu anaiya ezhil thOLum: the betelnut tree collapses on its own being unable to compete with their neck; their conch-like throat sings the melody of periyakavudi which is appropriately set to the provocative and romantic tune defined in the text of Manmathan, holder of the bow of sugarcane;

vitharaNa(m) mana vithanam athai aruLvana satha thaLa maRai mukizh athanai nikarvana puththa amirthu kantha kudam veRpu ena nirampuvana: their bosom causes melancholy in the mind of even realised souls; it is comparable to the hundred-petal lotus and a brand new aromatic pot of nectar, bulging like the mountain;

imam salam mrukamatha kaLapa parimaLa thamaniya prapai miku tharuNa puLakitha chithra vara mangala visithra iru thunga kana vikalitha miruthuLa mruthuLa nava maNi muka pada vikadina thanamum: smeared with a mixture of rose-water, musk and sandalwood powder, their robust breasts are fragrant, dazzling with a golden shade, youthful and exhilarating, with all the qualities of beauty, grandeur, lusture and wonder; they are adorned with a strand of nine gems, delicately covered by a decorative piece of clothing;

uyar vada paththiram iruntha akadil oththa suzhi unthi uLa mathiyAtha viparitham udai idai iLainjar kaLai pada: on their navel that looks like a banyan-leaf of high quality the whirling belly button sits prettily; infatuated youths who have no discriminating ability in their mind are obsessed with exciting thoughts, and caught in the web of those thoughts, they tire out easily;

apakadam athu puri arava sudikaiya rathna paNam enpa azhakutRa araiyum puthiya nu(N)Niya thaLir ena ulaviya paripura(m) aNi nadana pathamum udaiya vadivinar pon kalavi inpam athi thukkam enal anRi: their beautiful genital resembles the hood of a treacherous cobra that contains a gem hidden under its hood

avar virakinil enathu uRu manam athu urukiya piramaiyum aRa unathu aruL kai vara uyar paththi vazhiyum parama muththi neRiyum therivathu oru nALE: my wretched mind is yearning for these whores; in order to get rid of that infatuation, I need Your gracious blessings; will there be a day when I shall tread the great path of devotion and seek blissful liberation, Oh Lord?

thathathatha thathathatha thathatha thathathatha
   thithithithi thithithithi thithithi thithithithi
      thaththathatha thanthathatha thiththithithi thinthithithi
dakudaku dikudiku dakuku dikudiku
   dikudiku dakudaku dikuku dakudaku
      thaththathimi dangukuku thiththithimi dingukuku
thamithami thamithaka thamitha thimithaka
   thimithimi sekakaNa thimitha thikathika
      thaththimitha thanthimitha thiththimithi thinthimithi ...... enavEthAn:
To the beats of the meter as aforesaid,

thapalai kuda muzhuvu thimilai padakam athu aputha sa(l)likai thavil murasu karadikai maththaLi thavaNdai aRavaith thakuNi thunthumikaL mokumoku moku ena alaRa: percussion instruments of the variety "tabEla", drums of the shape of a pot, another drum called thimilai, series of small drums, a unique kind of a large drum called "challikai" which makes a clinking noise, thavil varieties, large drums (for proclamation), a type of drum that makes the noise of the weiling of the bear, many maththaLams, a giant hand-drum and plenty of dhundhumis known as thakuNichcham made a loud noise;

viruthukaL thikuthiku thiku ena alakai kuRaLikaL vikkida niNam paruka pakki uvaNam kazhuku sathir peRa athir thara uthathi suvaRida ethir poru nirutharkaL kuruthi perukida: staffs proclaiming victory were displayed with a lot of fanfare; devils and magical fiends devoured so much of flesh that they had hick-ups; the birds consisting of eagles and bald-eagles (garudan) clamoured celebrating their luck; the seas dried up; the blood of the warring demons gushed;

appuvin mithanthu ezhupathu aRputha kavantham ezha veku kOdi matha kaja thuraka rathamum udaiya puvi athala muthal mudiya idiya nediyathu or mikka oli muzhanga iruL akkaNam vidinthu vida: from that reddish sea of blood, about seventy strange, truncated and headless bodies sprang up; millions of frenzied elephants, horses and chariots on this earth and on the seven worlds of nether headed by athalam shuddered in shock; a long and high-decibelled noise broke out; at that very moment, all the miseries of the world vanished;

iraviyum mathiyamum nilaimai peRa adi paraviya amararkaL thalaimai peRa iyal aththiRal aNangu seya saththi vidu kantha: the sun and the moon resumed their normal trajectories and began to shine again; the celestials worshipping Your hallowed feet attained an exalted status; when You wielded Your victorious Spear on which Veera Lakshmi (The Goddess of Valour) resides, Oh KandhA!

thiruvayaliyil adimaiya kudimai i(n)nal aRa mayalodu malam aRa ariya periya thiruppukazh viLampu en mun aRputham ezhuntharuL guka: In the holy shrine of VayalUr, as soon as I sang songs of Your Glory, You manifested wonderfully right in front of my eyes to remove all the miseries of birth of this slave and to get rid of three slags and delusion, Oh GuhA!*

virAli malai uRai kurava nal iRaiva varu kalai pala theri vitharaNa muruka saravaNa uRpava kravunja kiri nigraka akaNda maya nirupa vimala suka sorupa parasiva gurupara: You are the Great Lord seated in VirAlimalai!** You are the Lord with the greatest esteem! You are the most compassionate Lord MurugA, having mastered all the arts of this world! You were born in the great pond of SaravaNa! You destroyed the mount Krouncha! You are the unblemished and Omnipresent King of the form of eternal bliss! You are the Master of Lord SivA!

veLi mukadu uruva uyar tharu sakra kiriyum kulaiya vikrama nadam puriyu(m) marakatha kalapam eri vidu mayil misai maruviye: You mount the bright peacock with greenish plumes that flies soaring past the outer frontiers of this earth and that dances forcefully making even Mount ChakravALa tremble!

arumaiya iLamai uruvodu sorkka thalamum pulavar varkkamum viLanga varu perumALE.: With a wonderful figure of eternal youth, You stand out with a lasting fame surrounded by the celestials and the poets, Oh Great One!


* When AruNagirinAthar sang the Thiruppugazh at VayalUr beginning with " vikata parimaLa " (917), Lord Murugan manifested before him in the most wonderful form to preach and invited him to VirAlimalai.
This is mentioned in the Thiruppugazh song beginning with " thAmaraiyin mattu " (911).


VirAlimalai is located 20 miles from Tiruchi on the route to Madhurai, near MaNappARai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 572 idhamuRu viraipunal - virAlimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]