திருப்புகழ் 564 நெறித்துப் பொருப்பு  (திருக்கற்குடி)
Thiruppugazh 564 neRiththupporuppu  (thirukkaRkudi)
Thiruppugazh - 564 neRiththupporuppu - thirukkaRkudiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தத் தனத்தத் தத்த
     தனத்தத் தனத்தத் தத்த
          தனத்தத் தனத்தத் தத்த ...... தனதான

......... பாடல் .........

நெறித்துப் பொருப்புக் கொத்த
     முலைக்குத் தனத்தைக் கொட்டி
          நிறைத்துச் சுகித்துச் சிக்கி ...... வெகுநாளாய்

நினைத்துக் கொடத்துக் கத்தை
     யவத்தைக் கடுக்கைப் பெற்று
          நிசத்திற் சுழுத்திப் பட்ட ...... அடியேனை

இறுக்கிப் பிடித்துக் கட்டி
     யுகைத்துத் துடிக்கப் பற்றி
          யிழுத்துத் துவைத்துச் சுற்றி ...... யமதூதர்

எனக்குக் கணக்குக் கட்டு
     விரித்துத் தொகைக்குட் பட்ட
          இலக்கப் படிக்குத் தக்க ...... படியேதான்

முறுக்கித் திருப்பிச் சுட்டு
     மலத்திற் புகட்டித் திட்டி
          முழுக்கக் கலக்கப் பட்டு ...... அலையாமல்

மொழிக்குத் தரத்துக் குற்ற
     தமிழ்க்குச் சரித்துச் சித்தி
          முகத்திற் களிப்புப் பெற்று ...... மயிலேறி

உறுக்கிச் சினத்துச் சத்தி
     யயிற்குத் தரத்தைக் கைக்குள்
          உதிக்கப் பணித்துப் பக்கல் ...... வருவாயே

உனைச்சொற் றுதிக்கத் தக்க
     கருத்தைக் கொடுப்பைச் சித்தி
     யுடைக்கற் குடிக்குட் பத்தர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நெறித்துப் பொருப்புக்கு ஒத்த முலைக்குத் தனத்தைக்
கொட்டி நிறைத்துச் சுகித்துச் சிக்கி
... காமத்தால் மனம் குழைந்து
மிகவும் குனிந்து, மலை போன்றிருக்கும் மார்பகங்களுக்காகப் பொருள்
எல்லாவற்றையும் கொட்டி, நிரம்ப இன்பத்தை அனுபவித்து, அதில்
அகப்பட்டு,

வெகு நாளாய் நினைத்துக் கொ(ண்)டு அத் துக்கத்தை
அவத்தைக்கு அடுக்கைப் பெற்று
... பல நாட்களாக அந்த
இன்பத்தையே நினைத்துக் கொண்டு அதனால் வரும் துக்கங்களுக்கும்
வேதனைகளுக்கும் ஆளாகி,

நிசத்தில் சுழுத்திப் பட்ட அடியேனை இறுக்கிப் பிடித்துக்
கட்டி உதைத்துத் துடிக்கப் பற்றி இழுத்துத் துவைத்துச் சுற்றி
யம தூதர்
... உண்மையில் செயலற்று (உண்மைப் பொருளைக் காணாது)
உறங்கிய அடியேனை இறுக்கமாகக் கட்டி உதைத்தும், துடிக்கும்படி
பற்றியும், இழுத்தும், மிதித்துத் துவைத்தும், என்னைச் சூழ்ந்த யம தூதர்கள்

எனக்குக் கணக்குக் கட்டு விரித்துத் தொகைக்கு உட்பட்ட
இலக்கப் படிக்குத் தக்க படியே தான்
... என்னுடைய கணக்குக்
கட்டை விரித்துக் காட்டி, (நான் இவ்வுலகில் செய்த பாபச்செயல்கள்
குறிக்கப்பட்ட கணக்கில் உள்ள) எண்ணிக்கைக்குத் தகுந்தபடி,

முறுக்கித் திருப்பிச் சுட்டு மலத்தில் புகட்டித் திட்டி முழுக்கக்
கலக்கப் பட்டு அலையாமல்
... என்னை முறுக்கியும், திருப்பியும்
சுட்டும், மலத்தில் புகுவித்தும், வைதும், அந்தக் கலக்கத்தில் முற்றிலுமாக
அகப்பட்டு நான் அலைபடாமல்,

மொழிக்குத் தரத்துக்கு உற்ற தமிழ்க்குச் சரித்துச் சித்தி
முகத்தில் களிப்புப் பெற்று மயில் ஏறி
... எனது மொழியையும்,
மேன்மை உள்ள தமிழையும் அங்கீகரித்து, வீடு பேற்றைத் தரும்
திருமுகத்தில் மகிழ்ச்சியுடன், மயிலின் மீது ஏறி,

உறுக்கிச் சினத்துச் சத்தி அயிற்குத் தரத்தைக் கைக்குள்
உதிக்கப் பணித்துப் பக்கல் வருவாயே
... தண்டிக்கும் கோபம்
வாய்ந்த சக்தி வேலை, தகுதியுடன் திருக்கரத்தில் தோன்ற எடுத்து என்
பக்கத்தில் வருவாயாக.

உனைச் சொல் துதிக்கத் தக்க கருத்தைக் கொடுப்பைச் சித்தி
உடைக் கற்குடிக்குள் பத்தர் பெருமாளே.
... உன்னைச் சொல்
கொண்டு துதிப்பதற்குத் தகுந்த கருத்தை கொடுத்தருள்வாயாக.
(அஷ்டமா) சித்திகளும்* பொருந்தியுள்ள திருக்கற்குடிக்குள்** உள்ள
பக்தர்களின் பெருமாளே.


* அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:

அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.
மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.
கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.
லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.
பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).
பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.
ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.
வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.


** திருக்கற்குடி திருச்சிக்கு அருகேயுள்ள வயலூரின் பக்கத்தில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.847  pg 1.848  pg 1.849  pg 1.850 
 WIKI_urai Song number: 346 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 564 - neRiththupporu (thirukkaRkudi)

neRiththup poruppuk koththa
     mulaikkuth thanaththaik kotti
          niRaiththuc chukiththuc chikki ...... vekunALAy

ninaiththuk kodaththuk kaththai
     yavaththaik kadukkaip petRu
          nisaththiR chuzhuththip patta ...... adiyEnai

iRukkip pidiththuk katti
     yukaiththuth thudikkap patRi
          yizhuththuth thuvaiththuc chutRi ...... yamathUthar

enakkuk kaNakkuk kattu
     viriththuth thokaikkut patta
          ilakkap padikkuth thakka ...... padiyEthAn

muRukkith thiruppic chuttu
     malaththiR pukattith thitti
          muzhukkak kalakkap pattu ...... alaiyAmal

mozhikkuth tharaththuk kutRa
     thamizhkkuc chariththuc chiththi
          mukaththiR kaLippup petRu ...... mayilERi

uRukkic chinaththuc chaththi
     yayiRkuth tharaththaik kaikkuL
          uthikkap paNiththup pakkal ...... varuvAyE

unaicchot Ruthikkath thakka
     karuththaik koduppaic chiththi
          yudaikkaR kudikkut paththar ...... perumALE.

......... Meaning .........

neRiththup poruppukku oththa mulaikkuth thanaththaik kotti niRaiththuc chukiththuc chikki: With a melting heart due to excessive passion, I stooped so low as to shower all my belongings for the sake of the mountain-like bosom; indulging in abundant pleasure, I got ensnared in it;

veku nALAy ninaiththuk ko(N)du ath thukkaththai avaththaikku adukkaip petRu: for many days, I was thinking about that pleasure, suffering the consequent misery and distress;

nisaththil suzhuththip patta adiyEnai iRukkip pidiththuk katti uthaiththuth thudikkap patRi izhuththuth thuvaiththuc chutRi yama thUthar: I was virtually immobile and slumbering (without having the vision of the true principle); at that time, the messengers of Yaman (God of Death) surrounded me and held me in a tight grip and began to kick me; while lashing me, they dragged my shaking body along, trampling upon it and beating it at the same time;

enakkuk kaNakkuk kattu viriththuth thokaikku udpatta ilakkap padikkuth thakka padiyE thAn: they opened up and showed me the record of my accounts, and according to the index (of my total sins committed in this world),

muRukkith thiruppic chuttu malaththil pukattith thitti muzhukkak kalakkap pattu alaiyAmal: they twisted and reheated my body; they dipped it in a heap of faeces and rebuked me; saving me from total captivity and agitation in that mayhem,

mozhikkuth tharaththukku utRa thamizhkkuc chariththuc chiththi mukaththil kaLippup petRu mayil ERi: I request You to accept my language and compositions in Tamil of a high order, displaying elation on Your hallowed face that grants blissful liberation; mounting Your peacock,

uRukkic chinaththuc chaththi ayiRkuth tharaththaik kaikkuL uthikkap paNiththup pakkal varuvAyE: come closer to me, elegantly bearing the powerful spear in Your hallowed hand, which spear has the rage to punish!

unaic chol thuthikkath thakka karuththaik koduppaic chiththi udaik kaRkudikkuL paththar perumALE.: Kindly grant me the concept that gives rise to words to praise You, my Lord! In this famous place ThirukkaRkudi*, where all the eight sidhdhis (Great Feats**) are present, You are seated as the beloved Lord of the devotees, Oh Great One!


* ThirukkaRkudi is near VayalUr which is in the vicinity of ThiruchchirAppaLLi.


** Eight Primary Siddhis (occult powers):

aNima: reducing one's body to even less than the size of an atom;
mahima: expanding one's body to an infinitely large size;
garima: becoming infinitely heavy;
laghima: becoming almost weightless;
prApti: having unrestricted access to all bodies and places;
prAkAmya: realising success everywhere;
eesatva: possessing absolute lordship;
vasitva: the power to subjugate all.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 564 neRiththup poruppu - thirukkaRkudi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]