திருப்புகழ் 562 வெருட்டி ஆட்கொளும்  (திருசிராப்பள்ளி)
Thiruppugazh 562 veruttiAtkoLum  (thiruchirAppaLLi)
Thiruppugazh - 562 veruttiAtkoLum - thiruchirAppaLLiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தாத்தன தனதன தனதன
     தனத்த தாத்தன தனதன தனதன
          தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

வெருட்டி யாட்கொளும் விடமிகள் புடைவையை
     நெகிழ்த்த ணாப்பிகள் படிறிகள் சடுதியில்
          விருப்ப மாக்கிகள் விரவிய திரவிய ...... மிலரானால்

வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு
     பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள
          விசித்ர மேற்படு முலையினு நிலையினு ...... மெவரோடும்

மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினும்
     அவிழ்த்த பூக்கமழ் குழலினு நிழலினு
          மதிக்கொ ணாத்தள ரிடையினு நடையினு ...... மவமேயான்

மயக்க மாய்ப்பொருள் வரும்வகை க்ருஷிபணு
     தடத்து மோக்ஷம தருளிய பலமலர்
          மணத்த வார்க்கழல் கனவிலு நனவிலு ...... மறவேனே

இருட்டி லாச்சுர ருலகினி லிலகிய
     சகஸ்ர நேத்திர முடையவன் மிடியற
          இரக்ஷை வாய்த்தருள் முருகப னிருகர ...... குகவீரா

இலக்ஷு மீச்சுர பசுபதி குருபர
     சமஸ்த ராச்சிய ந்ருபபுகழ் வயமியல்
          இலக்க ரேய்ப்படை முகடெழு ககபதி ...... களிகூரத்

திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட
     எடுத்த வேற்கொடு கடுகிய முடுகிய
          செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட ...... மயிலேறும்

செருப்ப ராக்ரம நிதிசர வணபவ
     சிவத்த பாற்கர னிமகரன் வலம்வரு
          திருச்சி ராப்பளி மலைமிசை நிலைபெறு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வெருட்டி ஆள் கொ(ள்)ளும் விடமிகள் புடைவையை
நெகிழ்த்து அணாப்பிகள் படிறிகள் சடுதியில் விருப்பம்
ஆக்கிகள் விரவிய திரவியம் இலர் ஆனால் வெறுத்து
நோக்கிகள்
... வந்தவரை விரட்டுதல் செய்து அவர்களைத் தம்
வசப்படுத்த வல்ல விஷமிகள். சேலையைத் தளர்த்தி ஏமாற்றுபவர்கள்.
பொய்யர். வெகு வேகத்தில் தம் மீது விருப்பம் வரும்படி செய்ய
வல்லவர்கள். தமக்குச் சேர வேண்டிய பொருளைக் கொடுக்க
இயலாதவர்களாக இருந்தால் வெறுப்புடன் பார்ப்பவர்கள்.

கபடிகள் நடம் இடு பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள
விசித்ர மேற்படு முலையினு(ம்) நிலையினு(ம்) எவரோடும்
மருட்டி வேட்கை சொல் மொழியினும் விழியினும்
... வஞ்சகர்.
நடனம் செய்யும் பாதத்தை உடையவர். கொடியோர்கள் ஆகிய
விலைமாதர்களின் கஸ்தூரி முதலிய நறு மணம் வீசும், பேரழகு மேம்பட்டு
விளங்கும் மார்பகத்திலும், நிற்கின்ற சாயலிலும், யாரையும் மயக்குவித்து
ஆசை மொழிகளைச் சொல்லும் சொற்களிலும், கண்களிலும்,

அவிழ்த்த பூக்கமழ் குழலினு(ம்) நிழலினு(ம்) மதிக்க ஒணாத்
தளர் இடையினு(ம்) நடையினும் அவமே யான் மயக்கமாய்ப்
பொருள் வரும் வகை க்ருஷிப(ண்)ணு(ம்) தடத்து
... அவிழ்ந்து
விழும் பூ மணக்கும் கூந்தலிலும், அதன் ஒளியிலும், மதிக்க முடியாத
தளர்ந்த இடையிலும், நடையிலும் ஈடுபட்டு வீணாக நான் மயக்கம்
கொண்டு (அப் பொதுமகளிருக்குக் கொடுப்பதற்காக) பொருள் சேகரிக்க
வேண்டிய முயற்சிகளைச் செய்து கொண்டிருந்த சமயத்தில்,

மோக்ஷமது அருளிய பல மலர் மணத்த வார்க் கழல் கனவிலும்
நனவிலும் மறவேனே
... வீட்டுப் பேற்றை அருளிய, பல மலர்களும்
நறு மணம் வீசும் பெருமை வாய்ந்த உனது திருவடிகளை கனவிலும்
நனவிலும் மறக்க மாட்டேன்.

இருட்டு இ(ல்)லாச் சுரர் உலகினில் இலகிய சகஸ்ர நேத்திரம்
உடையவன் மிடி அற இரக்ஷை வாய்த்து அருள் முருக
ப(ன்)னிரு கர குக வீரா
... இருளே இல்லாத தேவ லோகத்தில்
விளங்கி நிற்கும் ஆயிரம் கண்களை உடைய இந்திரனின் துன்பங்கள்
நீங்கவும் அவனுக்குப் பாதுகாப்பைத் தந்து அளித்த முருகனே,
பன்னிரு கரத்தனே, குகனே, வீரனே,

இலக்ஷுமி ஈச்சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருப ...
லக்ஷ்மிகரம் விளங்கும் ஈசுவரனே, பசுபதியாகிய சிவபெருமானுக்குக்
குருவே, எல்லா நாடுகளுக்கும் அரசனே,

புகழ் வயம் இயல் இலக்கர் ஏய்ப் படை முகடு எழு கக பதி
களி கூர திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட
... புகழும்
வெற்றியும் பொருந்திய இலக்கர்* ஆகியோர் உள்ள சேனைக் கூட்டத்தின்
மேலே பறந்து உலவும் பட்சி அரசனாகிய கருடன் மகிழ்ச்சி மிக அடைய,
திருட்டுக் குணமுடைய அரக்கர்கள் பொடியாகிச் சிதறுண்ணும்படி,

எடுத்த வேல் கொ(ண்)டு கடுகிய முடுகிய செருக்கு
வேட்டுவர் திறையிட முறையிட மயில் ஏறும் செருப் பராக்ரம
நிதி சரவணபவ
... திருக்கரத்தில் எடுத்த வேலாயுதத்தால்
கடுமையுடன் வேகமாக வந்த அகங்காரம் கொண்ட வேடர்கள்
வணங்கும்படியும் முறையிடும்படியும் செய்த மயில் ஏறும் போர் வீரனே,
என் நிதியே, சரவணபவனே,

சிவத்த பாற்கரன் இமகரன் வலம் வரு திருச்சிராப்ப(ள்)ளி
மலை மிசை நிலை பெறு பெருமாளே.
... சிவந்த ஒளியுள்ள
கிரணங்களை உடைய சூரியனும், பனியனைய குளிர்ந்த கிரணங்களை
உடைய சந்திரனும் வலம் வருகின்ற திருச்சிராப்பள்ளி மலையில் நிலை
பெற்று விளங்கும் பெருமாளே.


* தேவியின் சிலம்பின் நவமணிகளில் இருந்து நவசக்திகளின் விறல் வீரர்கள்
இலக்கர் (வீரபாகு முதலியோர்) வந்துதித்தனர் - கந்த புராணம் 1.12.11.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.841  pg 1.842  pg 1.843  pg 1.844 
 WIKI_urai Song number: 344 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 562 - verutti AtkoLum (thiruchirAppaLLi)

verutti yAtkoLum vidamikaL pudaivaiyai
     nekizhththa NAppikaL padiRikaL saduthiyil
          viruppa mAkkikaL viraviya thiraviya ...... milarAnAl

veRuththu nOkkikaL kapadikaL nadamidu
     pathaththar thUrththikaL mrukamatha parimaLa
          visithra mERpadu mulaiyinu nilaiyinu ...... mevarOdum

marutti vEtkaisol mozhiyinum vizhiyinum
     avizhththa pUkkamazh kuzhalinu nizhalinu
          mathikko NAththaLa ridaiyinu nadaiyinu ...... mavamEyAn

mayakka mAypporuL varumvakai krushipaNu
     thadaththu mOkshama tharuLiya palamalar
          maNaththa vArkkazhal kanavilu nanavilu ...... maRavEnE

irutti lAcchura rulakini lilakiya
     sakasra nEththira mudaiyavan midiyaRa
          irakshai vAyththaruL murukapa nirukara ...... kukaveerA

ilakshu meecchura pasupathi gurupara
     samastha rAcchiya nrupapukazh vayamiyal
          ilakka rEyppadai mukadezhu kakapathi ...... kaLikUrath

thiruttu rAkshathar podipada vedipada
     eduththa vERkodu kadukiya mudukiya
          serukku vEttuvar thiRaiyida muRaiyida ...... mayilERum

seruppa rAkrama nithisara vaNabava
     sivaththa pARkara nimakaran valamvaru
          thiruchchi rAppaLi malaimisai nilaipeRu ...... perumALE.

......... Meaning .........

verutti AL ko(L)Lum vidamikaL pudaivaiyai nekizhththu aNAppikaL padiRikaL saduthiyil viruppam AkkikaL viraviya thiraviyam ilar AnAl veRuththu nOkkikaL: These women are so mischievous that they chase away their suitors and, at the same time, are capable of enchanting them. They deliberately loosen their sarees in a deceptive manner. They are liars. They can make their suitors fall raving for them in no time. If some of the suitors are unable to pay the amount due to them, they look at them scornfully.

kapadikaL nadam idu pathaththar thUrththikaL mrukamatha parimaLa visithra mERpadu mulaiyinu(m) nilaiyinu(m) evarOdum marutti vEtkai sol mozhiyinum vizhiyinum: These treacherous ones possess dancing feet. Doting on the beautiful bosom of these wicked whores, smeared with paste of musk and other incence, their standing posture, their enticing speech that captivates everyone, their eyes,

avizhththa pUkkamazh kuzhalinu(m) nizhalinu(m) mathikka oNAth thaLar idaiyinu(m) nadaiyinum avamE yAn mayakkamAyp poruL varum vakai krushipa(N)Nu(m) thadaththu: their loosened hair with fragrant flowers falling down all over, the lustre of their hair, their matchless and caving-in waist and their gait, I was so enamoured of them with delusory passion; while I made attempts to earn money to pay these whores,

mOkshamathu aruLiya pala malar maNaththa vArk kazhal kanavilum nanavilum maRavEnE: You granted me liberation, and I shall never forget, even in my dreams, Your hallowed feet glorified by fragrant flowers, Oh Lord!

iruttu i(l)lAc churar ulakinil ilakiya sakasra nEththiram udaiyavan midi aRa irakshai vAyththu aruL muruka pa(n)niru kara kuka veerA: He lives in the celestial land where darkness is absent; he is IndrA bestowed with a thousand eyes; removing all his miseries, You graciously offered him protection, Oh Lord MurugA! Oh GuhA, You have twelve arms! Oh Valorous One!

ilakshumi eecchura pasupathi gurupara samastha rAcchiya nrupa: Oh Lord, You possess the grace of Goddess Lakshmi! You are the Master of Lord SivA, who is the Leader of all lives! You are the King of all countries!

pukazh vayam iyal ilakkar Eyp padai mukadu ezhu kaka pathi kaLi kUra thiruttu rAkshathar podipada vedipada: The white-beaked eagle (garudan), the king of all birds, soared above the armies of the famous and triumphant LakshAs* and was elated to see all the stealthy demons shattered to pieces

eduththa vEl ko(N)du kadukiya mudukiya serukku vEttuvar thiRaiyida muRaiyida mayil ERum serup parAkrama nithi saravaNabava: as You wielded the spear from Your hallowed hand and attacked the fierce and aggressive hunters making them prostrate at Your feet in submission, Oh Valorous One, mounting the peacock! You are my Treasure, Oh SaravaNabavA!

sivaththa pARkaran imakaran valam varu thiruchchirAppa(L)Li malai misai nilai peRu perumALE.: The Sun, with his reddish and bright rays, and the Moon, with his ice-cold cool rays, circumambulate the Mount at ThiruchchirAppaLLi where You have taken Your seat permanently, Oh Great One!


* From the beads in the anklets of Goddess PArvathi, the LakshAs, headed by VeerabAhu, emerged as the aspects of the nine Shaktis - Kantha purANam 1.12.11.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 562 verutti AtkoLum - thiruchirAppaLLi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]