370 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை இருட்டி லாச்சுர ருலகினி லிலகிய சகஸ்ர நேத்திர முடையவன் மிடியற இரrை வாய்த்தருள் முருகப னிருகர குகவீரா. இலக மீச்சுர பசுபதி குருபர சம்ஸ்த ராச்சிய ந்ருபபுகழ் வயமியல் "இலக்க ரேய்ப்படை முகடெழு ககபதி களிகூரத்; திருட்டு ராகூத்தர் பொடிபட வெடிபட எடுத்த tவேற்கொடு கடுகிய முடுகிய செருக்கு வேட்டுவர்திறையிட முறையிட மயிலேறும் செருப்ப ராக்ரம நிதிசர வணபவ சிவத்த பாற்கர னிமகரன் வலம்வரு திருச்சி ராப்பளி மலைமிசை நிலைபெறு பெருமாளே. (16) 'வயம் இயல் இலக்கர் - தேவியின் சிலம்பின் நவமணிகளில் தோன்றிய நவசக்திகளின் " வியர்ப்பதனில் தேவதேவனதருளினால் ஒவிலா விறல் வீரர்கள் இலக்கர் வந்துதித்தார்" . கந்த புராணம் -12-11. இவர்கள் செவ்வேளின் தம்பியர் கந்த-புரா. -11-127 t வள்ளியம்மையைப் பின் இரவிற் களவாடிய முருகனைப் பின் தொடர்ந்து கோ கோ என்று கூச்சலிட்டு வேடர்கள் வர, அவர்கள் வருதலைக் கண்டு வள்ளியம்மை மிக அஞ்சினள். அஞ்சாதே கவலைப்படாதே என்று முருகவேள் கூறி, வந்த வேடர்களைத் தமது வேல் கொண்டு மடிவித்தனர். பின்னர், முருகவேள் கூறியபடி வேடர்களை வள்ளியம்மை எழுப்ப, உயிர் பெற்றெழுந்த வேடர்கள், வள்ளியைத் திருடினவர் தாம் வழிபடும் ஆண்டவனே என அறிந்து அவரை வணங்கிப் போற்றி ஐயனே! எங்கள் குல தெய்வமே தாயே பிள்ளைக்கு விடம் ஊட்டினால் யார் என்ன செய்ய முடியும் வேலியே பயிரை மேய்ந்தால் என் செய்வது! எங்கள் குடிக்குப் பழி வரலாமோ! தாங்கள் எங்கள் ஊருக்கு எழுந்தருளி வந்து அக்கினி சாட்சியாக வள்ளியைத் திருமணஞ் செய்து கொள்ள வேண்டும்’ என்று முறையிட்டுக் கொண்டார்கள். முருகவேளும் அதற்கு இசைந்து அங்ங்ணமே வள்ளிமலைக்குச் சென்று தி முன் வள்ளியை மணந்தனர்; இங்ங்ணம் வேடர்கள் முருகனை வணங்கி முறையிட்டதை வேட்டுவர் திறையிட முறையிட" என்றார். (திறையிடல் - வணக்கம் காட்டுதல்) (அடுத்த பக்கம் பார்க்க.) 27
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/843
Appearance